பிற்போக்கான தலைமையும் கறைபடிந்த களங்கம் உடைய மந்திரிகளும் – Regressive Leadership and Tainting Ministers.

1. அருண் ஜெட்லி ராம்தேவை மகாத்மா காந்தியுடன் ஒப்பிடுகிறார்.

NDTV – May 18, 2014

  1. நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிர்பயா துயர சம்பவத்தை ‘ஒரு சிறிய நிகழ்ச்சி’ என்கிறார். அதே சமயத்தில் திரு.நரேந்திர மோடி, டெல்லி தேர்தலுக்கு முன்னால், நிர்பயா சம்பவத்தை, மனதில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஜெட்லியின் கருத்துக்கள் கண்டிக்கப்படுகிறது.

India.com – August 22, 2014

  1. மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தரைப்படை தளபதிகளையும், வீரர்களையும் ‘கொள்ளையர்கள்’ என்கிறார்.

Indian Express – 11.6.2014

  1. ‘ஹரியானா ஆண்களுக்கு பிகாரி மனைவிகள்’ எனக் கூறி பாஜக தலைவர் ஓபி தன்கர் சர்ச்சையை உருவாக்குகிறார்.

ஹரியானா மாநிலத்தில் ஆண், பெண் இன விகிதத்தில் உள்ள வித்தியாசத்தை போக்க, ஒரு விநோதமான தீர்வு ஒன்றை கூறி பாஜக தேசிய கிசான் மோர்ச்சா தலைவர் ஓபி தன்கர் மிகப் பெரிய சர்சையை உருவாக்கினார். அதாவது ‘ஹரியானா ஆண்களுக்கு பாஜக பிகாரில் இருந்து மணமகள்களை கொண்டு வரும்’ என அவர் பேசியதாக கூறப்பட்டது.

Zee News – 7.7.2014

ஹரியானாவில் உள்ள நர்வானா என்ற இடத்தில், நடந்த விவசாயிகள் மாநாட்டில் பேசும் போது, ஓபி தன்கர், ‘ஹரியானாவில் ஏராளமான இளைஞர்கள் கிராமங்களில் திருமணம் ஆகாமல் உள்ளனர். அவர்கள் பீகாரில் இருந்து பெண்களை மணந்து கொள்ளலாம்’ என கூறினார்.

‘உத்திரபிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்தவர்களை தடுக்கவேண்டும்’ என்றார் பாஜக எம்பி விஜய் கோயல். குறுகிய கண்ணோட்டத்தில் பாஜக மாநில அரசியலிலும் ஈடுபடுகிறது.

மாநில சபையில் விவாதத்தின் போது ஜுலை 31 ஆம் தேதி வியாழக்கிழமை ராஜ்ய சபையில் டெல்லி பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசுகையில், பாஜக எம்பி விஜய் கோயல் ‘தினம்தோறும் மக்கள் டெல்லிக்கு குடிபெயர்கிறார். இதில் பெரும்பாலானவர்கள் பீகார் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் டெல்லிக்கு வரக்காரணம் அந்த மாநிலங்களில் போதிய வேலை வாய்ப்பின்மையே காரணம்’ எனப் பேசினார்.

மேலும் அவர், ‘இவ்வாறு குடியேறும் மக்கள் குடிசைப் பகுதிகளில் தான் தங்குகிறார்கள். அதுவே பின்னாளில் அனுமதி பெறாத குடியிருப்புகளாக மாறுகின்றன’ என்றார்.

‘டெல்லியின் பிரச்சனையை நாம் தீர்க்க வேண்டும் என்றால், மக்கள் டெல்லிக்கு குடிபெயர்வதை தடுக்க வேண்டும்’ எனக்கூறி சர்ச்சையை உருவாக்கினார்.

The Hindu 3.8.2014

தூய்மையான அரசியலை வழங்குவதாக வாக்குறுதி

ஆனால், அமைத்ததோ  கறை படிந்த களங்கமான மந்திரி சபை

(PROMISE TO CLEAN POLITICS, DELIVERING TAINTED CABINET)

  1. பிரதம மந்திரி நரேந்திர மோடி தனது மந்திரி சபையை விரிவுபடுத்திய போது நியமித்த 21 புதிய மந்திரிகளில், கிட்டதட்ட பாதி மந்திரிகள் தங்களுக்கு எதிராக, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
  2. மொத்த மந்திரி சபையில் 20 மந்திரிகள் (31 சதவீதம்) தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதில் 11 மந்திரிகள் (17 சதவீதம்) கடுமையான குற்றங்களுக்கான, அதாவது, கொலை முயற்சி வழக்கு, மதநல்லிணக்கத்திற்கு எதிராக கலவரங்களை தூண்டுதல் மற்றும் தேர்தல் விதிமீறல்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
  3. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராம்சங்கர் கத்தேரியாவின் மீது மொத்த 23 வழக்குகள். ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட உள்ளதாக அவர் தேர்தல் கமிஷனுக்கு அளித்த தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம்: இந்தியா டுடே)
  4. மேலும் திரு கத்தாரியா, போலி கல்வி சான்றிதழ் அளித்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. (ஆதாரம்: என்டிடிவி)
  5. ஸ்ரீ நிஹல் சந்த், கற்பழிப்புக் குற்றத்திற்காக கோர்ட்டில் சம்மன் வெளியிடப்பட்டு, போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி. அவர் டெல்லியில் தனது அலுவலகத்தில் கோலோச்சி வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தாலும், ராஜஸ்தான் மாநில காவல்துறை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கோர்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.
  6. ஆந்திராவை சேர்ந்த, மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஸ்ரீ யு.எஸ்.சௌத்ரி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து 317 கோடி வரை கடன் வாங்கி திருப்பித் தராமல் ஒரு நிதி மோசடியாளர் என்று குற்றச்சாட்டு உள்ளது. (ஆதாரம்: வர்கி சங்கங்களின் தங்களது வங்கி மேலாண்மைக்கு எழுதிய கடிதங்கள்).
  7. கணக்கில் வராத 1.14 கோடி மற்றும் நகைகளை வைத்திருந்த காரணத்திற்காக, வருமான வரித்துறையால் விசாரிக்கப்பட்டு வரும் திரு.கிரிராஜ் சிங்கை மத்திய மந்திரி சபையில் அமைச்சர் ஆக்கியது மட்டுமல்லாமல் நிதி அமைச்சரே, அதற்கு வக்காலத்து வாங்குவது.
  8. மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, மந்திரியான முதல்நாளில் இருந்தே பிரச்சனைகளில் சிக்க தவிக்கிறார். அவர் தேர்தல் கமிஷனிடம் இரண்டு பிரமாண பத்திரத்தை வெவ்வேறு கல்வித் தகுதிகளுடன் தாக்கல் செய்துள்ளார். ஸ்மிரிதி இரானி 2004 தேர்தல்களில் வெவ்வேறு பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் போது, தனது கல்வி தகுதிகளை மாறுபடுத்தி பிரமாணப் பத்திரத்ததுடன் தாக்கல் செய்துள்ளார். மேலும், அவர் தான் ஒரு இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘ஏல் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி’ எனவும் கூறிக் கொள்கிறார். இது விசாரணைக்கு ஏற்றது என்று கூறி, தற்பொழுது நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.
  9. உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மதக்கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ் பலியானை மத்திய மந்திரியாக மோடி நியமித்துள்ளார். அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சீவ் பலியான், 2013 ல், தடை உத்தரவுகளை மீறி கூடிய மகா பஞ்சாயத்தில் ஒரு முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். இந்த மகா பஞ்சாயத்துதான் பின் ஏற்பட்ட மதக்கலவரங்களுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. உத்திரப் பிரதேசக் காவல்துறை, அவர் மீது தடையை மீறியதற்காகவும், இந்து-முஸ்லிம் மதங்களுக்கிடையே துவேஷத்தை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்தை ஒழிக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளது. முசாபர்பூர் கலவரத்தில் 60 பேர் இறந்துள்ளனர்.
  10. மத்திய போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாக்பூரை சேர்ந்த பூர்த்தி சாகர் கர்கானவிற்கு கிடைக்கபோகும் 48.65 கோடி கடனுக்கு பிணையாக இருந்திட ஒப்பமளித்துள்ளார். இது ஒரு ஊழல் என்றும், இதில் நிதின் கட்காரி சம்மந்தப்பட்டுள்ளார் என்றும், CAG சுட்டிக்காட்டியுள்ளனர்.
  11. மத்திய கனரக தொழில் மற்றும் பொதுநிறுவன மந்திரி ஜி.எம்.சித்தேஸ்வரின் மனைவி மற்றும் சகோதரர், பேலக்கேரி துறைமுகத்தில் இருந்து சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை அகற்றும் / கொண்டு செல்லும் தொழிலில் ஈடுபட்டுள்ளதற்காக பதவி விலக வேண்டும். திரு.சித்தேஸ்வர் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்தின் 9649 பங்குகளை 9.64 கோடிக்கு தனது மனைவியின் பெயரில் வாங்கியுள்ளார்.

1 2 3

Leave a comment