‘நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மீள்குடியேற்றம் வழங்கல், உறுதிப்படுத்தல் சட்டம் – 2014’ மீது திருத்தங்கள் கொண்டு வர இந்த அளவிற்கு அவசரப்படுவானேன்? – இது ஜனநாயகத்திற்கு எதிரான முயற்சி அல்லவா?

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மீது திருத்தங்கள் கொண்டு வர அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இதன் பின்னணி என்ன?

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறுகிறார்.

‘2014 – 15 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் 100 நகரங்களை – (SMART CITIES) உருவாக்கிட ரூபாய் 7060 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய முற்போக்கு அரசால் பிறப்பிக்கப்பட்ட ‘நிலம் கையகப்படுத்தல் சட்டம் – 2014’ இதற்கெல்லாம் இடையூறாக உள்ளது.

‘தனியார் கல்வி நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் உணவு விடுதிகள் அமைத்திட இச்சட்டம் முட்டுக்கட்டை போடுகிறது. எனவே தான் இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது.’ – (இந்தியன் எக்ஸ்பிரஸ் – 9.11.2014) (1)

ஏழை, எளிய விவசாயிகள், குத்தகைதாரர்கள், விவசாயக் கூலிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு கொடுத்திடும் இச்சட்டத்தை திருத்திடுவதின் மூலம் பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும் உதவி செய்திட மோடியின் தலைமையிலான பாஜக அரசு முயல்கிறது என்பது தான் இதிலிருந்து தெரிய வருகிறது.

2013 ஆம் ஆண்டு இச்சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது? என்பது பற்றிய விவரங்களை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

7.9.2011 அன்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகையில் வந்த செய்தி:- (2)

‘மோடியின் குஜராத்தில், நிலத்தை பலவந்தமாகக் கையகப்படுத்தும் முறைதான் நடைமுறையில் உள்ளது. (Forcible acquisition of Land is on in Modi’s Gujarat).

“குஜராத்தின் அபரிமிதமான தொழில் வளர்ச்சி” என்பதை கார்ப்பரேட்டுகளின் தொடர்ந்த பரப்புரைகள் மூலம் மக்கள் நன்கு அறிந்து கொண்டதே. ஆனால், எவ்வாறு இத்தொழிற்சாலைகளுக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்பது பற்றிய செய்திகளை நாம் அறிந்து கொள்ளவில்லை.

குஜராத்தில், மற்ற மாநிலங்களை விட, “நிலம் இழந்த விவசாயிகளுக்கு” அதிகமான ஈட்டுத்தொகைக் கொடுக்கப்படுகிறது என்பது உண்மை தான். ஆனால், நிலங்கள் பலவந்தமாக, நிலத்திற்கு சொந்தக்காரர்கள் விருப்பத்துக்கு எதிராக கையகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் உண்மை. சில விவசாயிகள், உணர்வுப்பூர்வமாக தங்களை நிலத்துடன் பிணைத்து இருப்பதால். அவர்கள் தங்களது நிலங்களை விற்பனை செய்ய முன்வருவதில்லை. 1894 ஆம் ஆண்டிலிருந்து நிலவி வரும் சட்டத்தைப் பயன்படுத்தி, நிலத்தின் சொந்தக்காரர்களின் ஒப்புதல் இல்லாமலேயே குஜராத் அரசு அவர்களது நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது.

இம்மாதிரியான விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் ஈட்டுத் தொகையும் மிகக் குறைவானதுதான். இவ்வாறு அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களை வாங்கும் தொழிலதிபர்கள், தங்களுக்கு வேண்டிய நிலப்பரப்பை மட்டும் வைத்துக் கொண்டு, எஞ்சிய நிலத்தை விற்று, கொள்ளை லாபம் பெற்று வருகிறார்கள். இது குஜராத்தில் வழக்கமாக நடந்து வரும் நடவடிக்கையாகும்.

பாவம், பல ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்தை பலவந்தமாக இழந்தது மின்றி, பலர் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை தான் குஜராத்தில் உள்ளது. இச்செய்கைகள் எல்லாம் அதிகமாக வெளிவருவதில்லை. குஜராத்தின் வளர்ச்சி தான் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

அவ்வாறாயின், இந்த அப்பாவி விவசாயிகள், நிலச்சொந்தகாரர்கள், விவசாயக்கூலிகள் இவர்களது அடிப்படை உரிமைகளைக் காப்பது தான் எப்படி?

உச்சநீதி மன்றம் 2013 ஆண்டு தனது உத்தரவில், (3)

‘இந்தச்சட்டத்தால் (1894 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்திய சட்டம்), கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட்ட நிலச் சொந்தக்காரர்களுக்கு எந்தவிதமான மறுவாழ்வு மற்றும் நிவாரணங்கள் ஆகியவை பற்றி ஏதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் மிகவம் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், இச்சட்டம் காலாவாதியாகிவிட்டது. இதை மாற்றியமைத்திட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அரசியல் சட்டத்தில் 300 ஏ பிரிவில் குறிப்பிட்டு இருக்கும் அரசியல் சட்ட உரிமைகளை பின்பற்றி கூடிய விரைவில், நியாயமான, யதார்த்துக்குட்பட்ட, விவேகத்துடன் கூடிய மாற்றுச்சட்டம் ஒன்றை இன்றைய ஆட்சியாளர்கள் இயற்றிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு கிடைத்த விடை தான் 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகத்தான திட்டம்., ‘நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மாற்றிடம் வழங்கல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் சட்டம் – 2014’. (4)

இச்சட்டத்தின் தன்மை எத்தகையது?

 1. நிலச்சொந்தக்காரர்களின் ஒப்புதலைக் கட்டாயம் பெற்றாக வேண்டும். அவர்களது ஒப்புதலில்லாமல் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது.
 2. இதனால் சமூக வாழ்வில் ஏற்படும் தாக்கங்களை பற்றி முதலில் கட்டாயம் மதிப்பீடு செய்திட வேண்டும்.
 3. சுற்றுப்புற சூழல் பாதிப்பு, உணவுப்பாதுகாப்பிற்கு ஏற்படும் அபாயம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
 4. நிலத்தை இழப்போருக்கு அதிகமானதோர் ஈட்டுத்தொகை கொடுத்திட வேண்டும். அது மட்டுமில்லாது மனிதாபிமானத்துடன் கூடிய மறுவாழ்வினை அவர்களுக்கு உறுதிப்படுத்திட வேண்டும். அவர்களுக்குரிய, மறுகுடியிருப்பு இடங்களையும் தேர்ந்தெடுத்து அவர்களை குடியமர்த்திட வேண்டும்.

(குறிப்பு: மறுவாழ்வு மற்றும் மறுகுடியிருப்பு ஆகியவற்றை நிலம் இழப்போரின் முழு சம்மதத்துடன் தேர்ந்தெடுத்த பின் தான், நிலம் கையகப்படுத்துதலையே தொடங்கவேண்டும் என இச்சட்டம் வலியுறுத்துகிறது)

இவைதான் இச்சட்டத்தின் முக்கிய தன்மைகளாகும்.

இச்சட்டத்தில்

 1. ஒரு கிராமத்தில் பரந்து விரிந்த அளவில் சுமார் 100 ஏக்கர் அளவிற்கு நிலம் கையகப்படுத்து வேண்டுமாயின், அதற்கு முதலில் அக்கிராம சபையின் ஒப்புதன் வேண்டும்.
 2. கிராம சபை, முதலில், இந்த அளவிற்கு நிலம் கையகப்படுத்துவது நியாயம் தானா என முடிவு செய்யும்.
 3. இதனால், அக்கிராம சமூக வாழ்வில் தாக்கங்கள் ஏற்படுமா என்பதையும் கிராம சபை ஆராய்ந்திடும். அதன் பிறகே முடிவு செய்யப்படும்.
 4. இந்த நிலம் கையகப்படுத்தும் முயற்சி நியாயமானதெனில், அதே சமயத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு பல தடங்கல்கள் ஏற்பட்டால். அருகிலேயே வேறு ஏதாவது அதிகத் தடங்கல் இல்லாத இடங்களை கிராம சபை சுட்டிக் காட்டலாம்.
 5. நிலத்தை இழப்போர் அல்லது நிலத்தின் உரிமைகளை இழப்போரில் 70 அல்லது 80 சதவீதம் பேரின் ஒப்புதலைக் கட்டாயம் பெற்றிடவேண்டும்.
 6. நிலம் இழப்போருக்கு, ஈட்டுத்தொகை கட்டாயம் அளித்திட வேண்டும். கிராமப் பகுதியாக இருந்தால் அவர்களுக்கு அன்றிருக்கும் சந்தை மதிப்பினைப் போல் 4 மடங்கு விலையும், நகர்ப்பகுதியாக இருந்தால் 2 மடங்கு விலையும் கொடுத்திட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 7. குறிப்பிட்ட நிலம் எந்த நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டதோ, அத்திட்டம் கையகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 5 வருடங்களுக்குள் கட்டாயம் நிறைவேற்றப் படவேண்டும். இல்லையெனில், கையகப்படுத்திய நிலத்தை அந்தந்த நிலச் சொந்தகாரர்களுக்கு திருப்பி அளித்திட வேண்டும்.
 8. ஈட்டுத் தொகை மட்டுமில்லாது, இந்நிலத்தில் சம்மந்தப்பட்ட அனைத்துக் குடும்பத்தினருக்கும் அவரவர்களுக்குரிய மறுவாழ்வு, மாற்றிடம் வழங்கல் ஆகியவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதும் இச்சட்டத்தால் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இந்நிலத்தின் குத்தகைத் தாரர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கும், கூட்டு விவசாயம் செய்வோருக்கும், விவசாயக் கூலிக்கும் ஈட்டுத் தொகை கொடுத்திட வேண்டும் என்பது இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சமாக உள்ளது. இதற்கு முன், இவர்களுக்கெல்லாம் எந்த ஒரு மாற்று வழியும் இல்லாது இருந்தது.
 9. இனி நிலம் கையகப்படுத்துவது என்பது, நிலத்தை விற்போருக்கும், நிலத்தை வாங்குவோருக்கும் இடையேயுள்ள விவகாரமாக இருந்திடுமே ஒழிய, இதில் இனி மாநில அரசுகள் தலையிடக்கூடாது. தரகர்களாகவும் செயல்படக்கூடாது என்பது நன்றாக வலியுத்தப்பட்டிருக்கிறது. வேண்டுமெனில், மொத்த நிலப்பரப்பையும் குத்தைகைக்கு எடுத்துக் கொள்ளுமாறு வாங்குவோருக்கு மாநில அரசு அறிவுத்தலாம்.
 10. இவை தவிர, நிலச்சொந்தகாரர்களுக்கு உருவாக்கப்படும் தொழிற்சாலைகளில், பங்கு, பணி போன்றவைகளும் கொடுக்கப்படலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 11. பலவந்தமாக நிலம் கையகப்படுத்துதல் என்பது உறுதியாகத் தடுக்கப்பட்டிருக்கிறது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் மூலம்,

ஏற்பட்டுள்ள விளைவுகள்.

 1. குஜராத் அரசால், அதுவும் குறிப்பாக நரேந்திர மோடிக்கு வேண்டிய தொழிலதிபர்களுக்கு அடிமாட்டு விலையில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்த நிலை முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
 2. சர்தார் சரோவர் அணைகளாக, மத்திய பிரதேசத்தில் வாழ்வாதாரமற்று தவிக்கும் பழங்குடியினருக்கும் புனர்வாழ்வு கிடைத்திடும் நிலை உண்டாகியிருக்கிறது.
 3. உத்திர பிரதேசத்தில் ‘பட்டா பர்சால்’ கிராமத்தில், அநியாயமாக நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள். அதனால், கலவரம் ஏற்பட்டு, அதன் விளைவாக ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் பல விவசாயிகள் இறந்தனர். இது போன்ற சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுயிருக்கின்றன.

இச்சட்டம் மோடியின் ‘ஆயமந ஐn ஐனெயை’ அறைகூவலுக்கு இடையூறாக உள்ளது. வெளிநாட்டு மூலதனக்காரர்கள் மிகக்குறைந்த விலையில் நிலங்கள் கிடைத்தால் தான் முதலீடு செய்வோம் எனக்கூறி வருகிறார்கள். எனவே தான், தனக்கும், தன் கட்சியினருக்கும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற உதவி செய்தவர்களான, இந்நாட்டு தொழிலதிபர்களையும், பணக்காரர்களையும், வெளிநாட்டு பெரும் மூலதனக்காரர்களையும் திருப்திப்படுத்த மோடி விழைகிறார்.

அதுவும் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த நாட்டிற்கு வருகை தரும் வேளையில் இதில் ஏதாவதொரு முன்னேற்ற அடையாளத்தைக் காட்டிட விரும்புகிறார்.

அதற்காகவே இச்சட்டத்தில் (2013) மோடி அரசு சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

 1. நிலங்களை வைத்திருப்போரின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியம் இல்லை.
 2. நிலத்தை அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளும் போது, சமூக வாழ்விற்கு ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
 3. குத்தகைத் தாரர்கள், நிலத்துடன் சம்பந்தப்பட்டோர், விவசாயக் கூலிகள் ஆகியோருக்கான மறுவாழ்வு, மாற்றிடம் வழங்கல் ஆகியவற்றைப் பற்றி எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை.

இது போன்ற திருத்தங்கள் பெரும் முதலாளிகளுக்கும், பெரும் தொழிலதிபர்களுக்கும் ஆதரவாகவே கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், ஏழைமக்கள் மத்தியலும், விவசாயிகள் மத்தியலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாலும், பாராளுமன்ற மேலவையில் பாஜக ஆட்சிக்கு போதிய பலமில்லாது இருப்பதாலும், ஆளும் கட்சி இப்பொழுது ஓர் அவரசச் சட்டத்தை பிறப்பித்திருக்கிறது.

இந்த அவசரச்சட்டம் பிறப்பித்தவுடன், காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. அதற்கு, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ‘காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களைப் பார்த்து, 2014 ஆம் ஆண்டு சட்டத்தின் படி நடந்து கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா? என்று.

அதற்கு காங்கிரஸ் கட்சி பதிலாக, ‘சங் பரிவாரத்தைச் சேர்ந்த பாரதீய மஸ்தூர் சங், பாரதி கிஷான் சங், மற்றும் சுவாதேசி ஜக்ரன் மன்ச் இந்த அவசரச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்கவே இந்த அவரச சட்டத்திற்கு ஆதரவான நிலையை எடுக்கச் சொல்லுங்கள்? என்று பதிலடி கொடுத்து வருகிறது.

இதைப்பற்றிய தி ஹிந்து தமிழ் பதிப்பில் (ஜனவரி 6, 2015) தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள்.

யார் லாபத்துக்காக யார் இழப்பது?

தொழிற்பேட்டைகள் அமைக்க, கிராமப்புற அடித்தளக் கட்டமைப்பை மேம்படுத்த, ராணுவத் தேவைகளுக்கு, வீட்டு வசதித் திட்டங்களுக்கு, அரசும் தனியார் துறையும் இணைந்து மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்களுக்கு என்று அரசுக்குத் தேவைப்படும் நிலங்களை உரிய இழப்பீடு தந்து கையகப்படுத்த வகை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியிருக்கிறது.

அரசின் திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அந்த நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும், நிலங்களை இழப்போருக்கு உரிய நஷ்டஈடு தரப்பட வேண்டும், தேவைப்படும் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவோரில் 70 சதவீதம் பேர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று முன்னரே கொண்டுவரப்பட்ட சட்டத்தில்தான் இப்போது அவசரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன்படி, நிலங்களை வைத்திருப்போரின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. இந்த நிலத்தை அரசு வளர்ச்சித் திட்டங் களுக்கு எடுத்துக்கொள்வதால், சமூகத்துக்கு அதனால் ஏற்படக்கூடிய பிற பாதிப்புகளைக் கணக்கில்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படுகிறது. இவ்விரண்டும்தான் நெருடலை ஏற்படுத்துகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் தேவைப் படும் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பலவந்தமாக வாங்கித் தருவதற்குத்தான் இந்த அவசரச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள நிர்வாகச் சிக்கல்களைக் களையவும், நீண்ட தாமதத்தைத் தவிர்க்கவும் இதை மேற்கொண்டிருப்பதாக அரசுத் தரப்பில் விளக்கம் தரப்படுவது, அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது. சில விதிவிலக்குகளின் அடிப்படையில் மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஒன்றே போதும், பெருநிறுவனங்களும் அரசும் தங்களுக்கான விதிவிலக்கு களை இஷ்டம்போல் உருவாக்கிக்கொள்ள. எந்தத் திட்டத்துக்கு, எந்த நிலம் தேவை என்பதை இனி அதிகார வர்க்கமே முடிவெடுத்துச் செயல் படுத்திவிட முடியும். சாதாரண மக்களை மேலும் சக்தியற்றவர்களாக இது மாற்றிவிடக் கூடும்.

கிராமப்புறங்களில் நிலங்களைக் கையகப்படுத்தினால் அதன் மதிப்பைப் போல நான்கு மடங்கும், நகர்ப்புறமானால், சந்தை மதிப்பைப் போல இரண்டு மடங்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய அம்சம் ஓரளவுக்கு இழப்பீட்டை உத்தரவாதம் செய்யக்கூடும். தொழில் வளர்ச்சியும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் அவசியம் என்பதை அனைவருமே ஏற்கிறார்கள். அதற்காக எதைத் தியாகம் செய்வது, யார் தியாகம் செய்வது என்பதில்தான் பிரச்சினையே. கிராமப்புற மக்கள், வனவாசிகள், பழங்குடிகள், ஆதிவாசிகள் ஆகியோருடைய வாழ்க்கை நலனையும் கவனிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. பெரும்பாலான மக்கள் சொந்தமாக நிலம் ஏதும் இல்லாதவர்கள். எனவே, நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அதைச் சார்ந்த நிலமற்ற தொழிலாளர்களும் வேரற்ற மரங்களைப் போல வாழ்வாதாரத்தை இழந்துவிடுவதைப் பார்த்துவருகிறோம். வனப் பகுதிகளில் கனிமங்களை வெட்டியெடுப்பதாக இருந்தாலும், தொழிற்சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் நேரடிப் பாதிப்பு அவர்களுக்குத்தான்.

நிலுவையிலுள்ள திட்டங்கள்: சில உண்மைகள்

எஸ்.வி. ராஜதுரை

பெருநிறுவனங்களுக்கு உழைப்பையும் நிலங்களையும் மலிவாக வழங்குவதே பாஜக-வின் நோக்கம்.

1990-களில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கைகள், 2015 வாக்கில் ஏறத்தாழ 4 கோடி இந்திய மக்கள் வேளாண் துறையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்தன. 2008-ம் ஆண்டு அது வெளியிட்ட ‘வளர்ச்சி குறித்த உலக அளவிலான அறிக்கை’ (வேர்ல்டு டெவலப்மெண்ட் ரிப்போர்ட்) நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும்,தொழில்துறை வேலைகளுக்குத் தகுதியுடையவர்களாக்குவதற்காகக் கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்களை நாடு முழுவதிலும் அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. அதாவது, வேளாண் துறைக்கு மிக அதிக மானியங்கள் கொடுக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன், வேளாண் உற்பத்திப் பொருட்களை மிக மலிவான விலைக்கு ஏற்றுமதி செய்யும் ராட்சத அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவுவதும், வளர்முக மற்றும் வறிய நாடுகளின் வேளாண் துறையை நிர்மூலமாக்குவதும்தான் உலக வங்கியின் குறிக்கோள். மேலும், அமெரிக்க மக்களின் உடல்நலத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடியவை என்னும் காரணம் காட்டி பிற நாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதற்குக் கடுமையான வரம்புகளை விதித்துள்ளது அமெரிக்க அரசாங்கம். இந்தியாவோ, வேளாண் பொருட்களுக்கான சந்தையைத் திறந்து விட்டுள்ளதுடன் விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டுவந்த மானியங்களை மிக வேகமாக ரத்துசெய்துவருகிறது.

இந்திய விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர் களையும் கிராமங்களிலிருந்து வெளியேற்றி, அரசாங்கத் தால் கையகப்படுத்தப்படும் நிலங்களில் நிறுவப்படும் கார்ப்பரேட் தொழிலுற்பத்தி மற்றும் பண்ணைகளுக்கு மலிவான உழைப்பை வழங்குவதுதான் மத்திய அரசாங்கம் நிறைவேற்ற முனையும் சட்டத் திருத்தத்தின் நோக்கம். இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப் படாததால், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், இதனால் பரந்துபட்ட இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் பொருளாதார நிலைமைபற்றி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதையேதான் கடந்த சில வாரங்களாக பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.

நிலுவையில் உள்ள 804 திட்டங்கள்

கிடப்பில் போடப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள்தாம் என்ன என்பதை அறிந்துகொள்ள டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேஷ் நாயக், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய நிதி அமைச்சகத்திடமிருந்து அண்மையில் சேகரித்த தகவலின்படி, பிப்ரவரி 2015 வரை, பல்வேறு காரணங்களால் இந்தியாவின் 24 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தாமல் போயிருந்த ‘வளர்ச்சித் திட்டங்க’ளின் எண்ணிக்கை 804. (மகாராஷ்டிராவில் 125; குஜராத்தில் 63; மேற்கு வங்காளத்தில் 55, கர்நாடகத்தில் 52, தெலங்கானாவில் 52; மற்றவை நாட்டின் இதர பகுதிகளைச் சேர்ந்தவை). மொத்த 804 திட்டங்களில் 66 (8%) மட்டுமே நிலம் கையகப்படுத்த முடியாததால் நிலுவையில் இருப்பவை. இந்த 66 திட்டங்களில், சமுதாயத்தின் நலிந்த அல்லது வசதி குறைந்த பிரிவினருக்கான நலத்திட்டங்களான குடிசைப் பகுதி மக்களுக்கான மாற்று வாழ்விடத் திட்டங்கள், வீட்டு வசதித் திட்டங்கள், பேருந்து நிலையங்கள் அமைத்தல் (இவற்றால் வசதி படைத்த பிரிவினருக்கு எந்தப் பயனும் இல்லை) ஆகியவற்றின் எண்ணிக்கை 11 மட்டுமே (1.36%).

மொத்தம் 804 திட்டங்களில் 78% தனியார் துறைத் திட்டங்களாகும். மத்திய, மாநில அரசாங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் 22% மட்டுமே.

குறைந்தது 145 திட்டங்கள் (18%), ஷாப்பிங் மால்கள், நட்சத்திர ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள், மல்டிப்ளெக்ஸுகள், மேட்டுக்குடியினருக்கான சொகுசு வீடுகள், கோல்ஃப் மைதானங்கள், கார் ரேஸ் பாதைகள் ஆகியவற்றை அமைக்கும் திட்டங்கள் ஆகும். 25 திட்டங்கள் புதிய நகரியங்கள் அமைப்பதற்கானவை. இவற்றில் எந்தெந்த சமூகப் பிரிவினர் குடியேறுவார்கள் என்பதை நிதி அமைச்சகத் தகவல்கள் தெளிவுபடுத்தவில்லை.

மொத்த 804 வளர்ச்சித் திட்டங்களில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுதல், புதிய விமான நிலையங்கள் கட்டுதல் அல்லது ஏற்கெனவே இருப்பனவற்றை விரிவுபடுத்துதல், சாலைகள், ரயில் பாதைகள் ஆகியவற்றை விரிவுபடுத்துதல், மருந்து, ஜவுளி, மென்பொருள் உற்பதி நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நிலக்கரி, யுரேனியம் சுரங்கத் திட்டங்கள் ஆகியனவும் அடங்கும்.

153 (19%) திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாததற்கு ‘இதர காரணங்கள்’ உள்ளன என்று கூறும் நிதி அமைச்சகம்இ 121 திட்டங்கள் (15%) நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

8.8% திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்குக் காரணம், சாதகமற்ற சந்தை நிலவரங்கள், நிதி இல்லாமை, திட்ட மேம்பாட்டாளர்களின் (புரமோட்டர்ஸ்) ஆர்வக் குறைவு, கச்சாப் பொருட்கள், மின்சாரம் அல்லது எரிபொருள்கள் வழங்கப்படுவதில் உள்ள சிக்கல்கள் ஆகியனவே. இந்தத் திட்டங்களில் பல, இந்தியாவிலுள்ள பெரும் தொழில், வர்த்தக இல்லங்களுக்கும் ஒருசில வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சொந்தமானவை.

சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் விதிகளின்படியோ மாநில அரசாங்கங்களின் ஒழுங்காற்று விதிகளின்படியோ அனுமதி வழங்கப்படாததால் நிலுவையிலுள்ள திட்டங்கள் 16% மட்டுமே.

நம்பகத்தன்மை இல்லாத தகவல்கள்

இந்த 804 வளர்ச்சித் திட்டங்கள் எத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ளன. நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்கள் இன்னும் கூடுதலாக உள்ளனவா என்பன பற்றிய தகவலை நிதி அமைச்சகம் வழங்கவில்லை. மேலும், இந்த 804 திட்டங்கள் பற்றிய தகவல்களும்கூட நிதி அமைச்சகம் தானாகத் திரட்டியவை அல்ல; மாறாகஇ வர்த்தக, தொழில் சம்பந்தமான தகவலைத் திரட்டும் தனியார் நிறுவனமொன்றால் (சென்ட்டர் ஃபார் மானிட்டரிங் இண்டியன் எகானமி லிமிட்டட்) வழங்கப்பட்டவை. ஏறத்தாழ 35% திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கான காரணங்களை மேற்சொன்ன நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆக, இந்தியாவில் பொருளாதார நிலை பற்றி நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கை, நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாத தகவல்களைத்தான் கொண்டிருந்தது.

ஆக, ‘மக்களுக்கான’ வளர்ச்சித் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளதற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தத்துக்கான எதிர்ப்புதான் காரணம் என்று பாஜகவினர் கூறுவதற்கு ஆதாரம் இல்லை.

நலிவடைந்து மூடப்பட்டுள்ள ஆலை வளாகங்களிலுள்ள நிலங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென கடந்த இருபதாண்டுகளாக மத்திய, மாநில அரசாங்கங்களால் ஏற்கெனவே கையகப்படுத்தப் பட்டுப் பயன்படுத்தப்படாமல் உள்ள லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களையும் ‘வளர்ச்சித் திட்டங்களுக்கு’ ஒதுக்காமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்க முனைவது ஏன்?

– எஸ்.வி. ராஜதுரை.

இந்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வரும் போதாவது, விரிவாக விவாதித்து முடிவு காண்பதே நன்மையைத் தரும். ஏழை விவசாயிகளின் நிலங்கள் மீதும் அவர்கள் வாழ்க்கையின் மீதும்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கான சிவப்புக் கம்பளத்தை அரசு விரிக்க வேண்டுமா என்ற கேள்வியைப் புறக்கணித்துவிடலாகாது.-

——————————————————————–

ஆனால், பெரும் முதலாளிகளின் லாபத்திற்காக இந்த அரசு, கூட்டுப்பாராளுமன்றக் கூட்டுத்தொடரைக் கூட்டியாவது, இந்த மக்கள் விரோத திருத்தங்களை கொண்டு வந்திட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.

இனி சந்திகளில் இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இதற்காக கடைசி வரை போராடிட வேண்டுமென்று அன்னை சோனியா காந்தி அவர்கள் போர்க்குரல் எழுப்பியுள்ளார்கள்.

போராடுவோம், போராடுவோம்‚

போராடி வெற்றி பெறும் மோடி அரசின் சதியை முறியடிப்போம்‚

ஏழை மக்களின் நியாயமான உரிமைகளைப் பெற்றுத் தருவோம்‚

http://www.dnaindia.com/india/report-decoded-what-changes-has-the-narendra-modi-government-made-in-the-land-acquisition-ordinance-2048240

http://www.business-standard.com/article/news-ians/government-to-amend-land-act-even-without-consensus-jaitley-114110900448_1.html

http://www.business-standard.com/article/economy-policy/tamil-nadu-shows-the-way-in-land-acquisition-111060800029_1.html

http://timesofindia.indiatimes.com/india/Forcible-acquisition-of-land-is-on-in-Modis-Gujarat/articleshow/9889797.cms

http://www.viduthalai.in/2011-07-25-07-58-59/96983-2015-02-28-07-31-51.html

நிலம் கையகப்படுத்தல் அல்ல நிலம் கையகப்படுத்தும் சட்டங்களும்

http://keetru.com/index.php/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/28238-1894-2013-2014-2015

001 002 002a 003 04-01 04-02 04-03 05 11255604_1387412411589653_1245050404_o

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s