சுற்றுச்சூழலின் பரிதாப நிலை – Environment – A Monumental Tragedy

சுற்றுச்சூழலின் பரிதாப நிலை

மோடி அரசு, தன்னுடைய நெருங்கிய முதலாளி தோழர்களுக்கு (Crony Capitalist)

(அல்லது)

தனது தோழர்களை திருப்தி செய்யும் விதமாய்,  இத்தேசத்தின் நிலம், காடு ஆகியவற்றினை அவர்களுக்கே கிடைத்திடும் படியாக தொடர்ந்து இந்நாட்டின் சுற்றுச்சூழல் வளத்தை அழித்து வருகிறார் மோடி.

நரேந்திர மோடி மற்றும் பிஜேபி அரசு சுற்றுச் சூழலை பாதுகாக்க தவறி விட்டது. சுற்றுச்சூழலை மிகவும் கவனமாக, கண்டிப்பாக வருங்கால தலைமுறைகளுக்கு போற்றி பாதுகாக்க வேண்டிய இந்த அரசு, இதை செய்வதை விட்டுவிட்டு Dadi-Nani கதையை சொல்லி கொண்டு இருக்கிறது.

பிரதமர் மோடி அவர்கள், சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சனைகளை தவறாக கையாள்வதின் மூலம், சூற்று சூழல் இன்றைக்கு அழிவு, புறந்தள்ளுதல் மற்றும் கைவிடப்படும் நிலைக்குள்ளது.

பிஜேபி அரசு, தற்போது நிலம் கையகபடுத்துதல் அவசர சட்டத்தை பிறப்பித்ததின் நோக்கம், ஏழை விவசாயிகளின் நிலத்தை அவர்களிடமிருந்து பிடுங்கி கொள்ளவேண்டும் என்பதே. சுற்றுசூழல் பாதுகாப்பதற்கென்று மிகவும் கவனமாக வடிவமைக்கபட்ட சட்டங்கள், ஆதிவாசிகளின் உரிமைகள், நிலையான வளர்ச்சி மற்றும் சமத்துவமான சமூக வளர்ச்சியை முற்றிலும் கலைத்துவிட்டு, இந்த அரசு, காட்டுமிராண்டிதனமாக இந்த சட்டத்தை நடைமுறைபடுத்த விரும்புகிறது.

கடந்த April 6th & 7th, 2015 அன்று நடந்த 2 நாள் சுற்றுசூழல் மற்றும் காடு/வன அமைச்சர்களுக்கான கருத்தரங்கமானது, ‘TSR Subramanian Report’க்கு மாநில அரசுகளை வலியுறுத்தி, கட்டாய ஒப்புதலை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

TSR சுப்பிரமணித்தின் அறிக்கையானது, பல ஆண்டுகளாக, நன்கு விவாதிக்கப்பட்டு, சமூக பொருளாதாரம், சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றிலிருந்து வந்து கொண்டிருக்கும் சோதனைகளை; தாங்கிக் கொண்டு, நிலைத்து நின்றிடும் கீழே காணப்படும் சட்டங்களின் அடிப்படைளையே தகர்ப்பதாக உள்ளது.

  1. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சட்டம் (1986)
  2. வனங்கள் பாதுகாப்பு சட்டம் (1983)
  3. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் (1972)
  4. தண்ணீர் சட்டம் (1974)
  5. காற்று சட்டம் (1981)
  6. இந்திய வனங்களின் சட்டம் (1927)

மேற்சொன்ன, இந்த அவசியமான சட்டங்கள், கடந்த சில நூற்றாண்டுகளாக சமூக பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, நீதித்துறையின் பரிசீலனைக்குட்பட்டு, சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளன.

இவைகள் மட்டுமின்றி, தேசிய சுற்றுப்புற சூழல் கொள்கை (National Environment Policy), சர்வதேச ஒப்பந்தங்கள், அரசியல் சட்டத்திலுள்ள Article 21, Article 48-A, & Article 51-A ஆகிய பிரிவுகள், 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வனவாசிகள் சட்டம், 1996 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பஞ்சாயத்திற்கான விஸ்தரிப்புச் சட்டம் போன்ற முக்கியமான சட்டங்களின் மூலம், வனவாசிகள் மற்றும் ஆதிவாசிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை, முழுமையாக தகர்த்திடுவது போல இந்த அறிக்கையின் இறுதி வடிவம் அமைந்துள்ளது. பல கோடி ஆதிவாசிகள் மற்றும் பரம்பரைவாசிகளின் உரிமைகளை பறிப்பது முறையற்றது என்றும் மற்றும் வன நிலங்களின் மீதுள்ள அவர்களது பரம்பர உரிமையை யாரும் பறித்திட முடியாது என்பது போன்ற பல வாக்குறுதிகளை கடந்த Lok Sabha 2014, மற்றும் ஜார்கண்ட் தேர்தலின்போது மோடி,  அள்ளிவிட்டார். ஆனால், இப்போது நில அபகரிப்பு சட்டத்தை அவரே கொண்டுவந்து, நிலங்களையும் வளங்களையும், சுற்றுப்புற சூழ்நிலைகளையும் அழித்திட வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் தீவிரமாக அவற்றினை நிறைவேற்றிட முனைந்திருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் ஆட்சியோ, கோடிக்கணக்கான வனவாசிகள், ஆதிவாசிகள், மற்றும் எதிர்கால இளம் இந்தியர்கள் ஆகியோருக்கு நிலம், வளங்கள், மற்றும் சுற்றுபுறச்சூழ்நிலைகள் ஆகியவை அவர்களின் அடையாளம், வாழ்வாதாரம் ஏன் அவர்களின் வாழ்வாகவே கருதப்பட வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி நம்புகிறது. மீண்டும், மீண்டும் இவற்றை வலியுறுத்தி வருகிறது.

இவையாவும் வியாபாரப் பொருட்கள் அல்ல. ஆனால் பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் பார்த்தால் அவர்கள் இவற்றினை வியாபாரப் பொருட்களாகவே கருதுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

1) TSR – ன் பரிந்துரையில், 2006 ஆம் ஆண்டு வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி, வனப் பகுதியில் உள்ள கிராமங்களிலிருக்கும் கிராமசபைகளின் கட்டாய ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற விதியை விலக்கிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கிராம சபையின் கட்டாய ஒப்புதல் என்பதுதான் மேலோங்கி நிற்கவேண்டும் என்ற அடிப்படை கருத்தைதான் சட்டம் வலியுறுத்தியுள்ளது. உச்சநிதிமன்றமும், சமீபத்தில் இதை உறுதி செய்துள்ளது 2013ம் ஆண்டில், ஒடிசா சுரங்க ஆணையம் மற்றும் மத்திய சுற்றுப்புறசூழல் அமைச்சகத்திற்கு இடையே இருந்த வழக்கில் Vol. 6 SCC 476 அரசியிலமைப்பு சட்டத்தில் 14 மற்றும் 21ம் விதிகளின்படி, 2006ம் ஆண்டு சட்டமானது, வனவாசிகள் மற்றும் ஆதிவாசிகள், வாழ்வு மற்றும் சமத்துவ உரிமைகளைப் பெற்றுத்தரும் சட்டமாகும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

2) இந்திய வன ஆய்வு கணக்கின் படி, (2013), மிக அடர்ந்த காடுகள், மற்றும் சிறு காடுகள் என பிரித்து அதனுடைய பரப்பளவை வெளியிட்டது. அதில் மிக அடர்ந்த காடுகள் 2.54% எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

TSR-னின் சுற்றறிக்கையில் கண்டிருக்கும், ஒருவரும் போக கூடாது (‘No Go Area’) எனும் காட்டு பகுதி என்பது 70 சதவீதம் அடத்திக் கொண்ட காடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான பழங்குடி மக்களுக்கும், வனவாசிகளுக்கும், அடிப்படை ரீதியாகவும், அரசியல் சட்டங்களின் ரீதியாகவும், கொடுக்கபட்டிருக்கும் பாதுகாப்பு உரிமையை, மோடி சர்க்கார் அகற்றிட திட்டமிட்டிருக்கிறது. ‘கிராம சபையின் ஒப்புதல்’ என்பதை நீக்கிவிட்டாலே 1996ல் வருடத்திய ஒதுக்கபட்ட பகுதிகளுக்கு விஸ்திரிக்கப் பட்டிருக்கும் பஞ்சாயத்து சட்டமும், 2006ம் வருடத்திய வன உரிமை சட்டமும், அர்த்தமற்றதாக ஆகிவிடும். இறந்ததாக கருதப்படும்.

ஆனால் மோடி அரசு, பலரின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த அடர்ந்த காடுகள் (40%) மற்றும் சிறு காடுகள் 70% பகுதியை சிலருடைய சுய லாபத்திற்காக  அழிக்கப் படுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த 40% மற்றும் 70% பகுதியில் அதிகமான வனவிலங்குகள் இருக்கிறது.

3) தேசிய சுற்றுச்சூழல் கொள்கை (2006) கீழ்கண்ட அம்சங்கள்:

1) நிலைத்து நிற்கும் வளர்ச்சிக்கு வேண்டிய ஆதாரங்களே மனித குலத்திற்கும் ஆதாரமாக உள்ளன.

2) வளர்ச்சிக்கான உரிமைகள்

3) சுற்றுபுறச்சூழல் பாதுகாப்பு என்பது, வளர்ச்சியுடன் இணைந்ததோர் உட்பாகமே.

4) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய அணுகுமுறைகள்.

5) பொதுமக்கள் நம்பிக்கை கோட்பாடு

6) பரவலாக்கபடுதல்.

ஆனால் TRS சுற்றறிரிக்கையில், தேசிய சுற்றுச்சூழல் கொள்கை முற்றிலுமாக மாறுபட்டுள்ளது?

மோடி அரசின் சுற்றுச் சூழல் கொள்கைத்தான், நிலையான வளர்ச்சியில் மனிதனுடைய பங்கு, மக்களின் பொது நம்பிக்கை கொள்கை மற்றும் பரவலாக்குதல் ஆகியவற்றின் கொள்கைகளுக்கு எதிரானது.

4) சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை, தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலம் தீர்வுகாண வேண்டும் என்று இருக்கிறது. உச்சநீதிமன்றம் தான் மேல் முறையீட்டினை பரிசீலனை செய்ய வேண்டும் என்று மாற்றிட வேண்டும் என TSR சுற்றிரிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. National Green Tribunal Act (2010) கீழ் உருப்பெற்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரங்கள், பாதிக்கப்பட்டவர்களின் முறையீட்டை நீதிமன்ற ஆய்வின் படி செய்திட வேண்டுமே தவிர, தகுதி ஆய்வின் அடிப்படையில் செயல்படுத்திட வேண்டியதில்லை.

மோடி அரசு, சுற்றுச்சூழல் நீதியை (Environmental Justice) பல ஆண்டுகள் பின்நோக்கி இழுத்துச் செல்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் என்பது ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் கீழ் செயல்படவேண்டும் என்றுதான் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி செய்வதினால், தேங்கி கிடக்கும் பல வழக்குகளை சீக்கிரத்தில் முடிவுக்கு கொண்டு வரலாம் என்பது தான் அதற்குக் காரணம்.

TSR சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தொழிலதிபர்கள் சுற்றுச்சூழல் கட்டுபாடுகள் மீது நம்பிக்கை வைக்காமல், தொழிலதிபர்கள் மீது நம்பிக்கை வைப்பதின் மூலம், சுற்றுபுறச் சூழல் அழிவை சந்திக்க இருக்கிறது.’ உதாரணமாக Vapi Surat, Mehsana, Mundra, மற்றும் Ahamedabad போன்ற இடங்களில் உள்ள சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னார்வு நிறுவனங்கள் உதவி செய்கின்றன. மோடி அரசு இதற்கு பங்கம் விளைவிக்க காத்திருக்கிறது.

6) இந்திய தேசம் அதனுடைய அரசியலமைப்பு விதிகள், தேசிய சுற்றுச்சூழல் கொள்கைகள், சர்வதேச ஒப்பந்தங்கள், ஐ.நா உடன் படிக்கைகள் ஆகியவற்றின் முக்கிய அம்சங்களை, ஒருசில முதலாளித்துவ கூட்டங்களுக்காக விட்டுக் கொடுக்கவோ அல்லது மாற்றவோ முடியாது.

TSR சுற்றறிக்கையில், இந்த காரியங்களுக்கு முக்கியத்துவம் இல்லை.

  1.  மோடி அரசில்; அனைத்து எச்சரிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகார மளித்தல், நாட்டு முன்னேற்றதிற்கு அவசியமானவைகள். ஆனால், மோடி அரசு காட்டு வளங்களையும் விலங்குகளையும் அழிப்பதற்கு முனைப்பு காண்பிக்கிறது.

மோடி தலைமையிலான சுற்றுச்சூழல் அமைச்சரகம் ‘ஒப்புதல் முத்திரை நிர்ணயம் கொடுக்கும் அரசாக செயல்படுகிறதே ஒழிய, நாட்டின் வனத்தை பாதுகாக்கும் பெட்டகமாக விளங்கவில்லை.

ஏறக்குறைய 3,800 Sq. Km காடுகளை, மோடி அரசு ஒரே ஆண்டில் அழித்து விட்டதாக தனியார் ஆராய்ச்சி சுற்றறிக்கை வெளிவந்துள்ளது . ஒரு வருடத்திற்கு 5 முதல் 100 ஹெக்டர் வனநிலம், தொழிலதிபர்களுக்கு கொடுக்கப்படும் என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 5000 Sq. Km வன நிலங்களை அழிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

மோடி அரசு, வன தேசிய வாரியத்தின் (National Board for Wild Life) உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டது. 10 பேர் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து 2 ஆக மாறிவிட்டது. தன்னார்வம் சார்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 5லிருந்து குறைந்து 1ஆக மாறிவிட்டது. மாநில பிரதிநிதிகளுக்கான எண்ணிக்கை 10-லிருந்து 5ஆக குறைந்து விட்டது. சுற்றுச்சூழல் அமைச்சரும், தேசிய பசுமைதீர்ப்பாயத்திற்கான செயல்பாடுகளை குறைத்துவிட்டது. காட்டில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு உத்தரவு ஏதும் வேண்டியதில்லை என்கிறது. இப்படி ஒரு சூழ்நிலை தொடருமேயானால், பழங்குடியினரின் உரிமைகளுக்கும் மற்றும் வனப் பாதுகாப்பிற்கும், மிகவும் ஆபத்தான நிலைமையை ஏற்படுத்திவிடும்.

நீங்கள் இன்று மட்டும் வாழ்ந்தால் போதும். நாளை மற்றும் எதிர்காலம் நமக்குத் தேவையில்லை என்று சொல்வீர்களானால், அது வருத்தபடக் கூடியது.

மோடி அரசு இந்த உண்மையை உணராமல் செயல்படுகிறது.

1 2 3

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s