ஏன் வேண்டும் மதுவிலக்கு?

நாட்டோரே…! நல்லோரே…!

1937ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த மூதறிஞர் ராஜாஜி, மதுவிலக்கை அமல்படுத்தி இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அதனால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட விற்பனை வரியையும் கொண்டுவந்தார். இக்கொள்கையை 1967வரை தொடர்ந்து நிறைவேற்றிய பெருமை பெருந்தலைவர் காமராஜருக்கு உண்டு. தமிழக மக்களின் எதிர்கால நலன்கருதி, மதுவிலக்குக் கொள்கையைக் காங்கிரஸ் கட்சி தனது உயிர்மூச்சாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வந்தது. இதற்குப் பெரும் சோதனை 1971ஆம் ஆண்டு ஏற்பட்டது. அன்றைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்டது. ஆனால், மீண்டும் 1974இல் அமல்படுத்தப்பட்டது.

1981இல் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மீண்டும் மதுவிலக்குக் கொள்கை ரத்துசெய்யப்பட்டு, கள், சாராய விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மதுபானத் தயாரிப்பு உரிமை, சாராய உற்பத்தி உரிமை, மொத்த விநியோக

உரிமை ஆகியனத் தனியாருக்கு வழங்கப்பட்டு, சாராய சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. சாராயமும் அரசியலும் இரண்டறக் கலந்த அவலம் அன்றிலிருந்து தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் மதுவை விற்பதற்காக தமிழக அரசே ‘டாஸ்மாக்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கியது. இந்நிறுவனத்தின் மூலமாக 2011முதல் 2014வரை 16.32 கோடி மதுபாட்டில் கொண்ட பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. (சுமார் 200 கோடி பாட்டில்கள்). அதேபோல 8.66 கோடி பீர் பாட்டில் கொண்ட பெட்டிகள் விற்பனையாகி உள்ளன. (சுமார் 100 கோடி பாட்டில்கள்). இவை அனைத்தையும் ஏழை எளிய மக்கள் அருந்திய காரணத்தால், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகி, சமூகத்தில் மிகப்பெரிய தீமையை உருவாக்கிய சோக வரலாறு நடைமுறைக்கு வந்தது. இதனால் சொத்து, சுகத்தை இழந்தவர்கள், பொட்டு இழந்தவர்கள், பூ இழந்தவர்களின் சோகக் கண்ணீர் கதைகளை வார்த்தைகளால் வடிக்க

இயலாது. ஒருகட்டத்திற்குமேலே பெண்களே திரண்டு டாஸ்மாக் கடைமுன் ஆர்ப்பாட்டம் நடத்துகிற அவலநிலை தமிழகத்திலே ஏற்பட்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது.

அ.தி.மு.க. ஆட்சியைப் பொருத்தவரை வாக்கு வங்கியைத் தக்கவைக்க ஒருபக்கம் இலவசத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு! இன்னொரு பக்கம் மதுபான விற்பனைமூலம் வரி வருவாய்! மக்களுக்கு எதிரான மோசடி இதைவிட வேறு ஏதாவது இருக்கமுடியுமா?

பெருந்தலைவர் காமராஜர் காலத்திலிருந்து மதுவிலக்குக் கொள்கைக்காகப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள் அந்தக் கொள்கைக்காகத் தமது உயிரை மாய்த்துக் கொண்டதற்குப் பிறகு, தமிழகமே கொழுந்துவிட்டெரிகிற சூழல் ஏற்பட்டு, மக்கள் பிரச்சினையாக மதுவிலக்கு இன்றைக்கு மாறிவிட்டது.

மதுவிலக்கை அமல்படுத்த முடியுமா?

‘மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த முடியுமா?’ என்று சில அதிமேதாவிகள் வினா எழுப்பி வருகிறார்கள், ஏன் முடியாது? ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அறிக்கையின்படி கிரானைட் கொள்ளையில்

அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.16,338 கோடி. தாது மணலில் தனியார் கொள்ளைக்கு வழிவகுத்த காரணத்தால் ஏற்பட்ட இழப்பு ரூ.14,560 கோடி. மணல் கொள்ளையால் ஏற்பட்ட இழப்பு ரூ.13,100 கோடி. ஆக, இந்த மூன்று கொள்ளைகள் மூலமாக அரசுக்கு வரவேண்டிய வருமானம் ரூ.38,610 கோடி. மது விற்பனையால் அரசுக்கு வரி வருவாய் ரூ.29,672 கோடி. இயற்கை வளங்களான தாது மணல், கிரானைட், மணல் கொள்ளைகளைத் தடுத்தாலே மதுவிலக்குக் கொள்கையினால் ஏற்படுகிற வருவாய் இழப்பைச் சரிகட்ட முடியும். ஆனால் அ.தி.மு.க. அரசு அதை செய்யாது. ஏன் செய்யாது என்பதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.

இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியாக மாதந்தோறும் அ.தி.முக.வுக்கு „கப்பம்… கட்டப்பட்டு வருகிறது. இந்த வருமானத்தின் மூலமாகத்தான் பொதுத் தேர்தலில் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதற்கு ஆளும் கட்சி திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. இடைத்தேர்தல் வெற்றிகளே இந்தப் பணத்தின் மூலம்தான் வாங்கப்பட்டது. எனவே, அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு மக்களுக்கு இலவசமும் வழங்க வேண்டும்; மது விற்பனைமூலம் வருமானமும் வரவேண்டும், இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதன் மூலமாக நிதியும் வரவேண்டும். இவையெல்லாம் ஒன்றொடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அ.தி.மு.க. வெற்றியின் ரகசியமே இதில்தான் அடங்கியிருக்கிறது. இந்த மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுதான் நமது பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. நல்லாட்சி அமைய விரும்பும் மக்கள், காங்கிரஸ் கட்சியின் மது ஒழிப்புப் பிரச்சாரத்தை ஆதரிக்க வேண்டுகிறோம்.

தாழ்ந்த தமிழகம் தலைநிமிர வேண்ட்டாமா?

அனைத்துத் துறைகளிலும் தாழ்ந்தநிலைக்குச் சென்றுவிட்ட தமிழகத்தின் அவலநிலையை மூடிமறைக்கத்தான் ரூபாய்100 கோடி செலவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அ.தி.மு.க. அரசு நடத்தி முடித்திருக்கிறது. மத்தியப் புள்ளியியல்துறை அறிக்கையின்படி, 2012-2013ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலங்களுக்கான வளர்ச்சி வரிசையில் 5வது இடத்திலிருந்த தமிழகம் 18வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மின்வெட்டு, கட்டமைப்பு வசதிகள் இல்லாதநிலை, ஊழலை நோக்கமாகக் கொண்ட அணுகுமுறை போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் தொழில் தொடங்க எவரும் முன்வராத அவலநிலை உருவாகியுள்ளது. துறைமுகம், விமானப் போக்குவரத்து வசதி இருந்தும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகள் ஆண்டுதோறும் பயின்று வெளிவருகிற தமிழகத்தில் ஏன் தொழில் வளர்ச்சி இல்லை? தமிழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 90 லட்சம் படித்த பட்டதாரிகள் பதிவுசெய்து காத்திருக்கிற அவலத்தை மூடிமறைக்கவே உலக முதலிட்டாளர்கள் மாநாடு. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்கள். ஏதோ, தமிழ்நாட்டின் வளர்ச்சியில்

அக்கறை இருப்பதுபோல மக்களிடம் வெளிச்சம்போட்டுக் காட்டுவதற்கு நான்கு ஆண்டுகள் தூங்கிய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஆட்சியைவிட்டு வெளியேறப் போகிற இறுதிக்கட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது அவசியம்தானா? மக்கள் வரிப் பணத்தை விரயமாக்கலாமா?

தமிழகத்தின் நிதி நிலைமை

தமிழகத்தின் இன்றைய நிதிநிலைமை அதளபாதாளத்தில் விழுந்து கிடப்பதை எவராவது மறுக்க முடியுமா? இல்லை என்று சாதித்துவிட முடியுமா? 2015-2016 இல் தமிழகத்தின் மொத்த பட்ஜெட் தொகை ரூபாய் 1 லட்சத்து 47 ஆயிரத்து 297 கோடி. இதில் இலவசங்களுக்கும் மானியங்களுக்கும் வழங்கப்படுகிற தொகை ரூபாய் 59 ஆயிரத்து 185 கோடி.அரசு ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் ரூபாய் 59 ஆயிரத்து 882 கோடி. தமிழக அரசின் மொத்த வரி வருவாய் ரூபாய் 96 ஆயிரத்து 82 கோடி. விற்பனை வரி வருவாய் ரூபாய் 72 ஆயிரத்து 68 கோடி. மதுவிற்பனை மூலம் வரி வருவாய் ரூபாய் 29 ஆயிரத்து 672 கோடி. தமிழகத்தின் அவலத்தைப் பார்த்தீர்களா?

தமிழக அரசின் மொத்த கடன்

தமிழக அரசின் நேரடி கடன் ரூபாய் 2 லட்சத்து 7 ஆயிரம் கோடி. பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 2 லட்சம் கோடி. மொத்த கடன் ரூபாய் 4 லட்சத்து 7 ஆயிரம் கோடி. தமிழக அரசின் நேரடி கடனுக்கு வட்டி ரூபாய்17 ஆயிரத்து 945 கோடி. பொதுத்துறை நிறுவனக் கடனுக்கான வட்டி ரூபாய்17 ஆயிரத்து 446 கோடி. ஆண்டுக்கு மொத்த வட்டித்தொகை ரூபாய் 35 ஆயிரத்து 391 கோடி. திவாலாகும் நிலையிலிருக்கிற தமிழக அரசின் நிதிநிலைமையைப் பார்த்தீர்களா?

‘இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்கிக் காட்டுவேன்; தற்காக ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் உழைப்பேன்’ என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சூளுரைத்து, மக்களை நம்பவைத்து, அரியணையில் அமர்ந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் அவலமான நிதி நிலைமைதான் இங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

தாங்கமுடியாத கடன் சுமையோடு இருக்கிற அ.தி.மு.க. ஆட்சியாளர்களை நம்பி உலக முதலீட்டாளர்கள் அல்ல, இந்திய தொழில் முதலீட்டாளர்கள் அல்ல, தமிழக முதலீட்டாளர்கள்கூட முதலீடு செய்ய முன்வருவார்களா?

நாட்டோரே… ! நல்லோரே… !

நிமிர்ந்து நடைபோட வேண்டிய தமிழகம் தாழ்நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? வளர்ச்சிப்பாதையில் தமிழகம் பயணம் செய்யவேண்டாமா? மதுவிலக்கை அமல்செய்து வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டாமா?

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் நடத்திக் காட்டப்பட்ட பொற்கால ஆட்சியைப்போல மீண்டும் ஒரு ஆட்சி அமைய வேண்டாமா? அத்தகைய ஆட்சியை வழங்கக்கூடிய தகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே இருப்பதை நீங்கள் உணர்ந்து ஆதரிக்க வேண்டாமா?

எனவே, அருமை நண்பர்களே, தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கும், வளர்ச்சிப்பாதையில் தமிழகத்தை மீண்டும் அழைத்துச் செல்வதற்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றவேண்டாமா? அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டால்தான் தமிழகத்திற்கு விடிவு ஏற்படும், விமோசனம் ஏற்படும்.

இந்திய மக்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்ற அன்னை சோனியா காந்தி, இளந்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு பீடுநடை போடுகிற தமிழக காங்கிரசுக்கு ஆதரவு திரட்டவே உங்கள் இல்லம் தேடி, உங்களை நாடி வருகிறோம். அத்தகைய விடியலை உருவாக்கவே தமிழக காங்கிரஸ் கட்சியின் தன்மானத் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் அராஜக ஆட்சியை எதிர்த்து குரல் எழுப்பி அரசியல் களத்தில் போராடி வருகிறார்.

அப்படிப் போராடுகிற பேராண்மைமிக்க தலைவர் ஈ.வி.கே.எஸ். மீது அவதூறு வழக்குபோட்டு, அவரை ஒடுக்கிவிடலாம் என்று அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது. ஊழலாட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தால் அடக்குமுறை ஏவிவிடப்படுகிறது. எத்தனை பொய் வழக்கு போட்டாலும் எங்களது தன்மானத் தலைவரை அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் ஒடுக்கிவிட முடியாது.

தமிழக மக்கள் பேராதரவோடு 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, மீண்டும் மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி அமைய நாட்டு மக்களிடம் ஆதரவு கேட்பதே எமது நோக்கமாகும். காங்கிரசை ஆதரிப்பதன் மூலமாகத் தாழ்ந்த தமிழகம் தலைநிமிர்ந்து பீடுநடை போடுவதற்கான பாதை வகுக்கப்படும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறோம்.

அக்டோபர் 2 : அண்ணல் காநதியடிகள் பிறந்தநாள்‚ பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாள்‚ தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, மதுவை ஒழித்து, மக்களைக் காக்க ஆதரவு தாரீர் !

^C2D65F1C2F8BA7837C1A558A92BEE5E8EB2F22A70C5EADF7CD^pimgpsh_fullsize_distr^7772CF5F8BDC5C56D99761C6C68240F002C8552820D581BB3E^pimgpsh_fullsize_distr

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s