இந்தியாவில் எமெர்ஜென்ஸி

1975 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் நாள், பிரதமர் இந்திரா காந்தி 1971 ஆம் ஆண்டு தேர்தலில், ரேபரல்லி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்திரா காந்தி உச்சநீதிமன்றம், 1975 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் நாள், உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடைவிதித்தது. இந்திரா காந்தி பிரதமராக தொடராலாம் எனத் தீர்ப்பளித்தது.

எனினும், எதிர்க்கட்சிகளான Cong(O), ஜனசங்கம் (BJP), SSP, சுதந்திரா ஆகியவை ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில், இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என பாராளுமன்றத்தை முற்றுகையிட்டன. ஜெயப்பிரகாஷ் அவர்கள், ராணுவத்தை, அரசை எதிர்த்து போரிடுமாறு அறிவுரை கூறினார். அலுவலர்கள், அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாமென்றும், மாணவர்கள் பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ செல்லவேண்டாமென்றும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திட வேண்டுமென்றும் கூறி நாடெங்கிலும் கலவரத்தைத் தூண்டினார். மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு கேள்விக்குறியாயிற்று.

1975 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் நாள் அரசியல் சட்டம் 352 ஆம் பிரிவைப் பயன்படுத்தி, சட்டரீதியாகத்தான் ‘நெருக்கடி நிலை’ (Emergency) யைப் பிரகடனம் செய்தார் இந்திரா காந்தி. எதிர்கட்சித் தலைவர்கள் (ஜெயப்பிரகாஷ் நாராயணன் உட்பட) அனைவரும் சிறையிலடைக்கப்பட்டனர். பல கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும், தொண்டர்களும் சிறையிலடைக்கப்பட்டனர். அடிப்படை உரிமைகள் கட்டுபாட்டுக்குள்ளாயிற்று. பத்திரிகைகள் தணிக்கை முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டன.

‘சில முக்கிய ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்திட்டதற்கு இந்திரா காந்தியும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகிய இருவருமே பொறுப்பாவார்கள். ஜெய்பிரகாஷ் நாராயணனுக்கு பாராளுமன்ற ஜனநாயக முறைகளிலே நம்பிக்கையும் கிடையாது’ – என்கிறார் பிரபல வரலாற்று பேராசிரியர் ராமச்சந்திர குஹா (இந்தியன் எக்ஸ்பிரஸ் – 22.11.2007)

(An analysis of private papers show that the emergency was scripted both by Indira Gandhi and Jayaprakash Narayanan; by the latter, because of his distrust in Parliamentary democracy) – Prof.Ramachandra Guha, Indian Express – 22.11.2007

நாடெங்கிலும் அமைதி நிலை மீண்டும் கொண்டு வரப்பட்டது.

அலுவலகங்கள், பள்ளிகள் ஒழுங்கான நேரத்தில் செயல்பட ஆரம்பித்தன. ரயில்கள், பேருந்துகள் சரியான நேரத்தில் காலதாமதமின்றி செயல்பட ஆரம்பித்தன. தொழிற்சாலைகளில் பணிகள் சரிவர நடந்தேறின.

பொதுமக்களின் துன்பங்களை நீக்கி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திடுவதை, அடிப்படை நோக்கமாகக் கொண்டு, ‘நெருக்கடி நிலை’ (Emergency) அமுல் படுத்துவதாக இந்திரா காந்தி அறிவித்தார்.

நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் அதிலும் குறிப்பாக தலித்துகள் கொத்தடிமைகளாகத் திகழ்ந்தனர். இவர்கள் யாவரும் ‘நெருக்கடி நிலை’ காலத்தில் கொத்தடிமை நிலைகளிலிருந்து மீட்கப்பட்டது.

ஏழை, எளிய தலித் மக்களை வாட்டியது மற்றொரு கொடுமை ‘கந்து வட்டி’. நெருக்கடி காலத்தில் இவர்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைத்தது. உணவுப் பொருட்களைப் பதுக்கல் செய்தவர்களும், கொள்ளை லாபம் அடிக்க முயன்றவர்களும் எச்சரிக்கப்பட்டனர். அதனால், ‘நெருக்கடி நிலை’ அமுலுக்கு வந்த ஒரு வார காலத்தில் அரிசி, கோதுமை விலை கடுமையாகச் சரிந்தது.

25 சதவீதமாக இருந்த பணவீக்கம், ‘நெருக்கடி நிலை’ பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் 2 சதவீதமாகக் குறைந்தது.

ஏழை, எளிய மக்களின் நன்மையை உத்தேசித்து, 20 அம்சத்திட்டத்தை அறிவித்து அதைத் தீவிரமாக செயல்படுத்திக் காட்டினார்.

இந்திராவின் 20 அம்சத் திட்டம் இதுதான்.

 1. விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 2. நில உச்சவரம்புச் சட்டத்தை செயல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 3. கிராமப்புற மக்களுக்கு வீடு கட்ட மனை வழங்கப்படும்.
 4. தொழிலாளர்களை அடிமைகளாகக் கருதும் எல்லா ஒப்பந்தங்களும் சட்ட விரோதம் ஆக்கப்படும்.
 5. கிராமப்புற மக்களின் கடன் சுமைகள் அகற்றப்படும்.
 6. விவசாயிகளின் குறைந்தபட்சக் கல்வி உயர்த்தப்படும்.
 7. 50 லட்சம் ஹெக்டர் நிலத்தை பாசன வசதிக்கு உட்படுத்த முயற்சி எடுக்கவேண்டும்.
 8. மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.
 9. கைத்தறி தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்புத் தரப்படும்.
 10. ஆலைகளில் உற்பத்தியாகும் வேஷ்டி, சேலைகள் கிராமப்புறப் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
 11. நகர்புற நிலங்களை தேசிய உடைமை ஆக்க சட்டங்களை இயற்றப்படும்.
 12. வரி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் மீது உடனுக்குடன் விசாரணை செய்து தண்டனை வழங்கப்படும்.
 13. கள்ளக்கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் பறிக்கப்படும்.
 14. புதிய தொழில்கள் தொடங்கும் முயற்சிகளுக்கு இப்போது அமலில் உள்ள லைசென்ஸ் முறை குறுக்கிடுகிறது. எனவே, லைசைனஸ்; பெறும் முறைகள் தளர்த்தப்படும்.
 15. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்குப் பங்கு இருக்க வேண்டும்.
 16. லாரிகள், டிரக்குள் மூலம் சரக்குகள் அனுப்புவதற்கான தடைகளும் அகற்றப்படும். இதற்கான தேசிய பெர்மிட் ஏற்படுத்தப்படும்.
 17. வருமான வரிக்கான குறைந்தபட்ச விதிவிலக்கு தொகை இருப்பதை விட மேலும் அதிகமாக உயர்த்தப்படும்.
 18. தங்கள் மேற்படிப்புக்காக வெளியூர் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கான அனைத்து விடுதிகளிலும் அத்தியாவசியமான பொருட்கள் கண்ட்ரோல் விலையில் வழங்கப்படும்.
 19. பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள், பேனா, பென்சில் முதலியவை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நியாய விலைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
 20. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தொழிற்பயிற்சியாளர் கூட்டம் திருத்தப்படும்.

‘ஏழ்மையை ஒழிப்போம்’ என்பதையே தனது லட்சியமாகக் கொண்டு 1971 தேர்தலில் வென்றால் இந்திரா. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் அமல்படுத்திய ராஜமான்யம் ஒழிப்பும், இந்திராவுக்கு செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலைமையில் தான் இந்த 20 அம்சத்திட்டம் என்ற அஸ்திரத்தையும் இந்திரா எடுத்தார்.

புகழ்பெற்ற ’20 அம்சத்திட்டத்தின்’ மூலம் அன்னை இந்திரா காந்தி அவர்கள், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ‘தலித்’ மக்கள் மேம்பாடு அடைய செயலாற்றியவர்.

நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் கிடைக்கும் உபரி நிலங்களை பலவீனப் பகுதியினருக்கு விநியோகிக்கும் பொழுது 50 சதவீத தலித்துகளுக்கு அதாவது எஸ்.சி மற்றும் எஸ்.டி. இனத்தினருக்கு கட்டாயம் வழங்கிட வேண்டுமென்ற சட்டம் இயற்றினார்.

இதுதவிர, சஞ்சய் காந்தி தனியாக ஐந்து அம்சத்திட்டத்தை அறிவித்தார். அது

 1. முதியோர் கல்வி கட்டாயம் ஆக்கப்படும்.
 2. வரதட்சணை ஒழிக்கப்படும்.
 3. சாதி ஒழிக்கப்படும்.
 4. நகர்ப்புறம் அழகுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
 5. குடும்பக் கட்டுபாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

‘நெருக்கடி நிலை’ காலத்தில் பல அத்துமீறல்கள் நடைபெற்றன என்பது உண்மைதான். ஆங்காங்கே, நாட்டிலுள்ள காங்கிரஸ் தலைவர்களும், பிரமுகர்களும், போலீஸ் அதிகாரிகளும் நெருக்கடி நிலையை தங்களது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கு வேண்டாதவர்களையெல்லாம் சித்ரவதை செய்தனர். இதில் முக்கியமானவர்கள் இன்றைய மத்திய அமைச்சர் மேனகா காந்தி, முன்னாள் பாஜக அமைச்சர் ஜெக்மோகன் போன்றோராவார். ஆனால், ‘நெருக்கடி காலத்தில் நடந்தவை யாவும் கொடுமைகளே, அதற்கு பொறுப்பு இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியுமே’ என எதிர்கட்சியினரும், ஊடகங்களும், வானொலியும், தொலைக்காட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. ஆனால், இவையாவும் மிகைப்படுத்தப் பட்டிருக்கின்றன என்று, பின்னால் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஆனால் இந்திரா காந்தியோ நாட்டு வளர்ச்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.

1975 ஆம் ஆண்டில்தான் இந்தியாவின் முதல் விண்வெளிக் கோளான ‘ஆர்ய பட்டா’ விண்ணில் செலுத்தப்பட்டது. இன்றைய கணினி வளர்ச்சிகள், கல்வி வளர்ச்சிக்கும் தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் அடித்தளமிடப்பட்டது.

1967 ல் அகமாதாபாத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ‘SATELLITE TELECOMMUNICATION EARTH STATION’ வுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தது. இது தொலைதொடர்பு வசதி விஸ்தரிக்கப்படுவதற்கான முதல்படியாக அமைந்தது. அதன்பின் பல விண்கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டிருக்கின்றது. கூடுதலாக EARTH STATION களும் நிறுவப்பட்டன.

1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் காலமானார்.

(CONG (O) வும், CONG (R) வும் நெருங்கிவரும் நேரத்தில் அவர் காலமானார். அவர் மட்டும், இன்னமும் இரண்டு அல்லது 3 ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலையெழுத்தே மாறியிருக்கும்.)

1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் CONG (O) ல் ஒரு பகுதியினரும், CONG (R) ம் இந்திரா காந்தி தலைமையில் இணைந்தனர். தலைவர் ஜி.கே.மூப்பனாரால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்டார்.

அன்றுதான், மகாராஷ்டிர முதல்வர் எஸ்.பி.சவான், கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், ஆந்திர முதல்வர் வெங்கல் ராவ் ஆகியோர் தங்களது மாநிலத்தில் பாயும் கிருஷ்ணா நதி நீரை, மாநிலத்திற்கு 5 டிஎம்சி என்ற அளவில், மொத்தம் 15 டிஎம்சி தண்ணீரை, சென்னை மாநகரக்குக் குடிநீர்த் தேவைக்கு தருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுருப்பதாக அன்னை இந்திரா காந்தி சென்னை மெரினா கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். சென்னைக் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க அடித்தளமிட்டவர் அன்னை இந்திரா.

1976 லிருந்து 1977 வரை, கவர்னர் ஆட்சியிலிருந்த தமிழ்நாட்டில், 20 அம்சத் திட்டம் மிகத்தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்தனர். அத்துமீறல்கள், தமிழ்நாட்டில் அதிகமாக இல்லை.

ஜனநாயகம் (DEMOCRACY) , மதச்சார்பின்மையும் (SECULARISM), சோஷலலிஸமும் (SOCIALISM) இந்நாட்டின் ஆணிவோர்க் கொள்கைகளாக இருந்தாலும், அரசியல் சட்டத்தின் முகவுரையில் (PREAMBLE OF THE CONSTITUTION) அவற்றிற்கு இடமில்லை. ஆனால், அன்னை இந்திரா காந்தி தான், ‘நெருக்கடி நிலை’ யின் போது, பாராளுமன்ற இரு அவைகளிலும், 3 ல் 2 பங்கு ஆதரவு 20 க்கும் மேற்பட்ட சட்டமன்றங்களில் ஆதரவு ஆகியவற்றை பெற்று, அரசியல் சட்ட முகவுரையில், ‘மதச்சார்பின்மை’, ‘சோஷலிசம்’ ஆகிய இரண்டையும் பொன்னெழுத்துக்களால் பொறித்தார். அதற்குரிய சக்தி அவர் ஒருவருக்குத்தான் இருந்தது.

இதை மாற்றிட வேண்டுமென்று கூச்சல் போடும் இன்றைய பாஜக வினருக்கும், இந்திரா காந்தி போன்று செயல்பட விரும்பினால் ‘புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட’ கதையாகி விடும்.

1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘நெருக்கடி நிலை’ தளர்த்தப்பட்டது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ‘நெருக்கடி நிலை’யை மேலும் நீட்டியிருக்கலாம். அந்த அளவிற்கு வலுப் பெற்றிருந்தார் இந்திராகாந்தி அவர்கள். ஆனால், உண்மையான ஜனநாயகவாதியான அவர், 18 மாதங்களுக்கு மேல் அதை நீட்டிக்க விரும்பவில்லை.

1977 ல் தேர்தலை எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஜனதா’ எனும் புது அமைப்பினை ஏற்படுத்தி, ஜெயப்பிரகாஷ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தேர்தலை சந்தித்தது.

தேர்தலில் ஜனதா கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், 300 இடங்களுக்கு அதிகமான இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. இந்திரா தலைமையிலான காங்கிரஸிற்கு 150 இடங்களே கிடைத்தன.

மூன்று வருடங்களில் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. ஆனால் (1977 லிருந்து 1980 வரை இந்திரா காந்தி கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டார். ‘நெருக்கடி நிலை’, அத்துமீறல்களுக்கு அவர்தான் பொறுப்பு என்று அது பற்றி விசாரிக்க, ஜனதா அரசு ‘நீதிபதி ஷா’ அவர்கள் தலைமையில் ‘ஷா கமிஷன்’ என்ற பெயரில் உருவாக்கிற்று. அன்றாடம் பத்திரிகைகளிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும், ‘நெருக்கடி நிலை’ சமயத்தில் கொடுமைகளைத் தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை என்ற தோற்றத்தை ‘ஷா கமிஷன்’ தினந்தோரும் நடைபெற்று வந்த விசாரணைச் செய்திகள் பறை சாற்றிவந்தன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி ஜனதா ஆட்சி கவிழும் நேரத்தில், டில்லி உயர்நீதி மன்றம் ‘ஷா கமிஷன்’ நியமித்ததற்கு எதிராக தீர்ப்பளித்தது.

1979 ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் நாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ்.சாவ்லா ‘ஷா கமிஷனின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவை, அரசியல் சட்டத்திற்கு எதிரானவை எனத் தீர்ப்பளித்தார். ஜஸ்டின் டக்ளஸின் கூற்றினை மேற்கோளை நான் காட்டினால், ஷா தனது அதிகாரத்தின் வரம்பை மீறிவிட்டார் எனலாம்’ என்று கூறியுள்ளார். ‘ஷா கமிஷனின்’ அறிக்கைகள் நியாயமற்றவை எனத் தீர்ப்பளித்தது டில்லி உயர்நீதிமன்றம்.

(The Judgment was delivered on 19.12.1979, by justice TPS.Chawla. The commission’s findings were declared illegal and unconstitutional. The court interlace observed “In my opinion JC.Shaw acted in violation of the constitution. If I may adapt the phrase used by Mr.Justice douglas, by doing so the commission abused its authority.)

இந்திராகாந்தி மீதிருந்த கரும்புள்ளி அகன்றுவிட்டது.

1980 தேர்தலை இந்திரா காந்தி தனியொருவராகச் சந்தித்தார். முன்பு அவருடன் இருந்த பெருந்தலைவர்கள் யாரும் அவருடன் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அவர் மிகவும் பலவீனமான நிலையிலிருந்து இந்தத் தேர்தலைச் சந்திக்க நேர்ந்தது.

தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க முதல்வர் எம்.ஜி.ஆர் அவரை எதிர்த்தார்.

கேரளாவில் அவருடன் கூடயிருந்தவர்களே அவரை எதிர்த்தனர்.

கர்நாடகாவில் முதல்வர் தேவராஜ் அர்ஸ் எதிர்த்தார்.

ஆந்திராவில் முதல்வர் வெங்கல் ராவ் எதிர்த்தார்.

மகாராஷ்டிரர் முதல்வர் சரத்பவார் எதிர்த்தார்.

குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களில் CONG (O), சுதந்திரா, ஜனசங்கம் ஆகியவையின் கலவையான ‘ஜனதா’ எதிர்த்தது.

பஞ்சாப், ஹரியானா. உ.பி, பிஹார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சரண்சிங், தேவிலால், பிரகாஷ்சிங் பாதல், கர்பூரி தாகூர், ஜோதிபாசு போன்றோர் எதிர்த்தனர்.

அவர்கள் அனைவரும் நெருக்கடி கால கொடுமையை நினைவுபடுத்தி மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். ஆனால் அந்தப் பிரச்சாரங்கள் 1977 ல் அவர்களுக்கு கை கொடுத்தது போல் 1980 ல் கை கொடுக்கவில்லை. 1980 ல் மக்கள் நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட நன்மைகளை உணர ஆரம்பித்ததால் தனித்து விடப்பட்ட இந்திரா காந்தியை, டில்லி சிம்மாசனத்தில் அமர்த்தினர்.

எமெர்ஜென்ஸி காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் விளைந்த நன்மைகள்

1975-77 (எமெர்ஜென்ஸி பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட வருடங்கள்) இந்தியா, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

விவசாயத்துறை உற்பத்தி (AGRICULTURAL OUTPUT) 1975 க்கு முன்பிருந்த ஆண்டுகளை விட அதிகமாக இருந்தது.

1975 ஆம் ஆண்டு விவசாய உற்பத்தி 48.7 மில்லியன் டன்

1976 ஆம் ஆண்டு விவசாய உற்பத்தி 42.8 மில்லியன் டன்

அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில், சராசரியாக 41.5 மில்லியன் டன் உற்பத்திதான் இருந்தது.

1975 இல் கோதுமை மற்றும் பருப்பு உற்பத்தி 20 சதவீதம் அதிகம்.

1976 இல் கோதுமை மற்றும் பருப்பு உற்பத்தி 30 சதவீதம் அதிகம்.

1975 இல் தொழில் வளர்ச்சிக் குறியீடு (INDEX OF INDUSTRIAL PRODUCTION – IIP) முந்தைய ஆண்டை விட 6.1 சதவீதம் அதிகமாகக் காணப்பட்டது.

1976 இல் தொழில் வளர்ச்சிக் குறியீடு (NDEX OF INDUSTRIAL PRODUCTION – IIP) முந்தைய ஆண்டை விட 10.4 சதவீதம் அதிகமாகக் காணப்பட்டது.

பொதுபண வீக்கம்:

1974 இல் -(26) சதவீதம்

1975 இல் – (-1.1) சதவீதமாக குறைந்தது

1976 இல் – (2.1) ஆக குறைந்தது.

Slide1

உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம்:

1974 இல் – (38) சதவீதம்

1975 இல் – (-4.9) சதவீதம்

1976 இல் – (5.1) சதவீதம்

Slide2

ஏற்றுமதி:

1974 இல் – ரூ.3328.8 கோடி

1975 இல் – ரூ.4042.8 கோடி

1976 இல் – ரூ.5143 கோடி

Slide3

இறக்குமதி:

1974 இல் – (53%)

1975 இல் – (16.5%)

1976 இல் – (3.6%)

^312D31B7DF096859D7F47B7397FB292AE5DEC5237308AC2338^pimgpsh_fullsize_distr

வேலை நிறுத்தங்களால், நாடு இழந்த வேலை நாட்கள்:

1974 இல் – 40.3 மில்லியன் வேலை நாட்கள்

1975 இல் – 21.9 மில்லியன் வேலை நாட்கள்

1976 இல் – 12.8 மில்லியன் வேலை நாட்கள்.

Slide4

1975 இல் வீழ்ச்சி அடைய ஆரம்பித்த கலவரங்கள் 1977 இல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தன.

GDP:

1974 லும் அதற்கு முன்பும் 1 சதவீததக்கும் குறைவு

1975 இல் – (9.7%)

1976 இல் – (12.6%)

ஆதாரம் : தி ஹிந்து – 22.6.2015

Slide5

எமர்ஜென்ஸியில் கிடைத்த நன்மைகளைப் புரிந்து கொண்ட மக்கள், காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்தனர். காங்கிரஸ் கட்சி 352 இடங்களை வென்று மீண்டு ஆட்சியைப் பிடித்தது.

இந்திரா காந்தி பிரதமராக மீண்டும் வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மக்கள் வாக்களித்தனர். ‘நெருக்கடி கால நிகழ்வுகள்’ மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உணர்ந்திருந்ததனால் ஏற்பட்ட விளைவு 1980 ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். ஆனால், நிலைமை முன்போல் இல்லை.

நாடெங்கிலும் குறிப்பாக பஞ்சாபில் ‘காலிஸ்தான்’ தீவிரவாதம் தலைவிரித்தாடியது.

தீவிரவாதத்தை அடக்கி, நாட்டின் பாதுகாப்பை நிலைநிறுத்திட இந்திரா காந்தி தன்னுயிர் ஈந்து, தாயின் மணிக்கொடி காத்தார்.

வாழ்க அன்னை இந்திகாந்தி புகழ்

‘எமெர்ஜென்சி’ காலத்தில் – தமிழ் நாடு

 1. பணவீக்கத்தின் வீழ்ச்சி:

1973, 1974 ஆண்டுகளில் சர்வதேச நிலையில், கச்சா எண்ணையின் விலை தாறுமாறாக ஏறியது. நமது பொருளாதாரமோ, கச்சா எண்ணையைச் சார்ந்ததாகவே அன்றும் இருந்தது. அதை பயன்படுத்தி பதுக்கல் காரர்களுக்கும், கொள்ளை லாபகாரர்களும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மிக அதிகமாக ஏறின.

ஆனால், 1975 ஆம் ஆண்டு, அவசர நிலை பிரகடனத்தின் பின்னர், பதுக்கல்காரர்களுகம்,கொள்ளை லாபக்காரர்களும் அதன் தாக்கத்தைக் கொண்டு மிரண்டு போயினர். அத்தியாவசியப் பொருட்கள், வெளிமார்க்கெட்டுக்கு வர ஆரம்பித்தன. அவற்றின் விலைகள் வெகுவாகச் சரிந்தன.

எமெர்ஜென்சிக்கு முன், அதாவது 1975 ஜுன் மாதத்திற்கு முன் 9 சதவீதமாக இருந்த பணவீக்கம் எமெர்ஜென்சிக்குப் பின், அதாவது 1975 ஆகஸ்டு மாத்தில் 0 சதவீதமாகக் குறைந்து விட்டது.

 1. சென்னைக் கிருஷ்ணா நீர்:-

கிருஷ்ணா நதிக்கும், தமிழ்நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அந்த நதியானது. மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி, கர்நாடகா வழியாக பாய்ந்து சென்று,ஆந்திரத்தைக் கடந்து கடலில் கலக்கிறது.

1975-76 ல் சென்னை மக்களுக்கு, குடிநீருக்காக தவித்துக் கொண்டிருந்தன. வீராணத்திட்டம் தோல்வியடைந்திருந்த நேரம் அது. அந்த நேரத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸின் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனவே, சென்னைக்கு குடிநீர் கிடைத்திட வேண்டுமென்றால், மூன்று மாநிலங்களும் இசைந்திட வேண்டும். அவசர நிலை அமுலிலிருந்ததால் தான், மூன்று மாநில முதலமைச்சர்களின் அனுமதியையும் இந்திரா காந்தியால் பெற முடிந்தது.

மூன்று மாநிலங்களும், தலா 5 டிஎம்சி நீரை தருவதற்கு ஒப்புக்கொண்ட முக்கிய அறிவிப்பை,இந்திரா காந்தி அம்மையார் 15.2.1976 அன்று சென்னை மெரினாவில் ‘இரு காங்கிரஸின் இணைப்பு’ விழாவையொட்டி நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்தில்  வெளியிட்டார். சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைத்தது. அவசர நிலைப் பிரகடனத்தில் அமுலில் இருந்ததால் தான்.

 1. 20அம்சத்திட்டத்தின்4வது அம்சமான,

‘தொழிலாளர்களை அடிமைகளாகக் கருதும் எல்லா ஒப்பந்தங்களுக்கும் சட்ட விரோதமாகக் கருதப்படும்’ என்றிருந்தது.

இதைக் கண்டு பயந்த தமிழ்நாட்டிலுள்ள பல முதலாளிகள், தங்களிடமிருந்த கொத்தடிமைகள் அனைவரையும் விடுதலை செய்தனர். இதில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள்.

 1. 20அம்சத்திட்டத்தின், 5வது அம்சமான

‘கிராமப்புற மக்கள் கடன் சுமைகள் அகற்றப்படும்’ கிராமப்புறங்களில், ஏழை எளியோர் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், அதிகார சக்திகள் விதித்திடும் ‘கந்து வட்டியால்’, கடும் துயரத்திற்கு ஆளாகியிருந்தனர். ஏனைய தரப்பினர் மீது விழுந்திடும், ‘நெருக்கடி நிலையின்’ தாக்கத்தைக் கொண்டு பயமுற்ற ஆதிக்கச் சக்திகள் தாங்களாகவே, தங்களது அடாவடி நடவடிக்கைகளை, ரத்து செய்ததால், ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள், கடன் சுமையிலிருந்து மீண்டனர்.

 1. அரசு ஊழியர்களும்,மாணவர்களும், தொழிலாளர்களுக்கும் நேரம் தவறாமையைக் கடைப்பிடித்தனர். தமிழ்நாட்டில் அநாவசிய கலவரங்கள் முற்றிலுமாக நின்று விட்டன. இதனால் அரசு இயந்திரம் சீராக இயங்க ஆரம்பித்ததால், எங்கும் அமைதி நிலவியது.

021f

0001 0002 0003a 0003b

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s