நிறுவனங்களை செயல்படாமல் முடக்குவதும், அவற்றின் கௌரவத்தை சீர்குலைப்பதும் – Institutional Paralysis and Denigrating Institutions:

எல்லா நிறுவனங்களும் வெளிப்படையாக ‘ஊழலை’ எதிர்த்து செயல்ப்படவேண்டும் என்று சொன்ன மோடி, இப்பொழுது செயல் இழந்து காணப்படுகிறார்.

மோடி அரசு, பொறுப்புணர்வு மற்றும் ஊழல் இல்லா அரசாங்கம் என்று சொல்லி வருகிறது. ஆனால் நிறுவனங்கள் தரம் இழந்து, முடக்கப்பட்டு வரும் பொழுது, எப்படி பொறுப்புணர்வு மற்றும் ஊழல் இல்லாத அரசு சாத்தியமாகும்?

பிரதம மந்திரி அவர்கள், சில தனிப்பட்ட முதலாளிகளுக்கு (Crony Capitalist) தனி சலுகைகள் அளித்து வருகிறார். அவருடைய வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அவர்களுடனேயே செல்கிறார். நடைமுறையிலிருந்து வரும் நெறிமுறைகளை மீறி, பிரதமர் எந்த விடுதியில், எந்த மாடியில் தங்குகிறாரோ, அதே மாடியில் அவர்களும் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவரது ‘நெருங்கிய’  நண்பர்கள் தான் அவரது சில வெளிநாட்டுப் பயணங்களை தீர்மானிக்கின்றனர் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் திட்டங்கள் எல்லாம் வலுகட்டாயமாக மாற்றப்பட்டு, அவைகள் யாருக்கும் பயன்பட கூடியதாக இல்லை. சுற்றுச்சூழல் சட்டம், ஆதிவாசிகளின் உரிமைகள், விவசாயிகளின் நிலம் போன்றவை இன்றைக்கு ஒரு சிலருடைய சுய லாபத்திற்கு ‘சோரம்’ போகிறது.

இந்த அரசு ஏழைமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் எதிரான அரசாக செயல்படுகிறது. மாறாக, ஒரு சில முதலாளிகளுடைய விருப்பதிற்கு இணங்க நில அவசர சட்டம், Real Estate மசோதா போன்றவற்றை அவசரமாக செயல்படுத்த விரும்புகிறது. ஆகவே, இந்த அரசு, மக்களின் நலனில் அக்கறை காட்டுவதில் தவறிவிட்டது. வெளிப்படையாகவும், நடுநிலைமையாகவும் ஊழலுக்கு எதிராக ‘செயல்படாத அரசாக’ உள்ளது.

MODI‘ அரசு என்றால் Monycall Only – Deprived Ignored.

பணம்படைத்தவர்களுக்கு மட்டும்- உரிமைகள் மறுக்கப்பட்டோரை ஒதுக்கித்தள்ளும் அரசு.

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே – மோடி அரசு

பணம் இல்லாதவர்களுக்கு இது ஒரு கேடி அரசு

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமம் அமைச்சரவையில் கடந்த 8 மாதங்களாக தலைமை தகவல் ஆணையர் (Chief Information Commissioner) பதவியும் காலியாக உள்ளது. மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக, 3 தகவல் ஆணையர் பதவியும் காலியாக உள்ளது.

ஏறக்குறைய 39,000 தகவல்கள் உரிமைகள் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தகவல் அறியும் நிறுவனம் தற்போது செயல் இழந்து விட்டது. பொது மக்கள் தகவல் அறியும் உரிமைகளை இழந்து விட்டார்கள். தேவையான ஆணையர்களும் அதிகாரிகளும் இல்லாததால், தக்க  நேரத்தில் மக்களுக்கு தகவல்களை கொடுக்க முடிவதில்லை.

கடந்த மார்ச் 11, 2015ல் மோடி அரசு, தகவல் தலைமை ஆணையர்க்கு இருந்திட்ட நிதி அதிகாரத்தை ரத்து செய்து விட்டு, அதை DOPR-ன் செயலருக்கு மாற்றிவிட்டது மோடி அரசு. இந்த அதிகாரி, PMO விற்கு கட்டுப்பட்டவர். இது RTI சட்டத்தின் ஷரத்துகளை மீறி எடுக்கப்பட்ட முடிவாகும்.

கடந்த 9 மாதங்களாக தலைமை கண்காணிப்பு (Chief Vigilance Commissioner) ஆணையர் பதவியும் காலியாக உள்ளது.

4

1

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s