விவசாயிகளின் விரோதி நரேந்திர மோடி – (Agricultural Distress)

மோடியின் கொள்கையோ – அராஜக ஆட்சி நடத்துவதும் விவசாயத்தை நசுக்குவதுமே ஆகும்.

ஆட்சி அதிகாரத்தினால் ஏற்பட்ட ஆணவம் மற்றும் மூத்த பிஜேபி தலைவர்களின் மனித நேயமற்ற பேச்சுகள் ஆகியவை, ஏற்கனவே பருவம் தவறிப் பெய்த மழையினாலும், ஆலங்கட்டி மழையினாலும், பயிர்களை இழந்து பரிதாபமாக நிற்கின்ற விவசாயிகள் மனதின் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளன’.

மூத்த மத்திய அமைச்சரான நிதின் கட்காரி, ‘விவசாயிகள் கடவுளையும், மத்திய அரசையும் நம்பிவிட வேண்டாம்’ என்கிறார்.

பிஜேபியின் முன்னாள் தேசிய விவசாய இயக்கத்தின் தலைவரும், இந்நாள் அரியானா மாநிலத்து விவசாய அமைச்சருமான ஓ.பி.தங்கர் வெட்கமின்றி, ‘கடன் சுமை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் அனைவரும் கோழைகள்’ என்று கேலி செய்கிறார்.

இது தவிர, மகாராஷ்டிரம் விதர்பா பகுதியிலுள்ள (மகாராஷ்டிராவில் விதர்பா பகுதியிலுள்ள விவசாயிகள் அதிகமான அளவில ; தற்கொலை செய்து கொண்டனர்). ‘அகோலா’ பாராளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட சஞ்ஜய் தோத்ரே என்கிற பிஜேபி எம்.பி, ‘விவசாயிகள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளட்டும். பயிர்சாகுபடி பொய்த்து விட்டால், என்ன செய்திட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். இல்லை சாவுதான் வழியென்றால், செத்து ஒழியட்டும்’ என்று இரக்கமின்றி பேசி வருகிறார்.

மத்தியிலிருக்கும் ‘சூட்-பூட் சர்க்கார்’ தனது தலையாய கடமையில் தவறிவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, சில நெருங்கிய தொழிலதிப நண்பர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தனது ‘2015 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்திடும்’ அவசர சட்டத்தின் மூலம் நரேந்திர மோடி, விவசாயிகளின் விலைமதிப்பற்ற அடிப்படை ஆதாரமான நிலத்தை அவர்களிடமிருந்து பறித்திட விழைகிறார். இந்த அவரச சட்டம் UPA வின் 2013 ஆம் வருடத்திய விவசாயிகள் நியாயமான ஈட்டுத் தொகை பெற்று உரிமை தந்திடும்’ சட்டத்தின் ஜீவனையும், ஆத்மாவையும் அழிப்பதற்கு முனையும் சட்டமாகும். உண்மையில் இந்த அவரசச் சட்டம் ‘விவசாயிகளின் உயிர் பறிக்கும் சட்டம்’ ஆகும்.

காங்கிரஸ் கட்சியானது, 1984 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாற்றங்கள் செய்திட உரிமை தரும் சட்டம் மூலம், பழமையான, பிரிட்டிஷ் காலத்து 1894 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், சீரிய மாற்றங்களை 2013 ஆம் ஆண்டு கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நிலமில்லாத அதே நேரத்தில் விவசாயத்தையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட குத்தகைதாரர்கள், விவசாயக் கூலிகள் ஆகியோருக்கும் ஆதரவு அளித்திடும் வகையில், 2013 ஆம் ஆண்டில், ‘நியாயமான ஈட்டுத்தொகை பெற்றிட உரிமை தரும்’ சட்டம் இருந்தது. நிலத்தை உழுதிடும் விவசாயியை நாட்டின் வளர்ச்சி திட்டங்களின் பங்காளியாக உயர்த்திடும் வகையிலும் இச்சட்டம் அமைந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் ஏகோபித்த ஆதரவின் அடிப்படையில் இச்சட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக, பிஜேபி உட்பட அனைத்து பங்கு தாரர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் இச்சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே தனது நெருங்கிய தொழிலதிபர்களுக்கு உதவி செய்திடுவதற்காக, 2013 ஆம் ஆண்டின் சட்டத்தின் ஜீவனையும், ஆத்மாவையும் ஓர் அவசர சட்டத்தை கொண்டுவருவதின் மூலம், அழித்திட மோடி அரசு அழித்திட தீர்மானித்துள்ளது.

திருத்தப்பட்ட அவசரச் சட்டத்திற்கும், 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்திற்கும் உள்ள வித்தியாசங்களை கீழ்வரும் பட்டியல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

Need to INSERT Images

நாடு முழுவதும், ஏன் பிஜேபியின் கட்சிக்குள்ளும், விவசாயிகளுக்கு எதிரான, ஏழை எளியோர்க்கு எதிரான, நரேந்திர மோடியின் இந்த அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்புகள் இருந்த போதிலும், இந்த அரசு பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இச்சட்டத்தை வலுக்கட்டாயமாக நிறைவேற்றிட முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளது. எனினும், பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை சற்றும் மதித்திடாமல் மூன்றாவது முறையாக இந்த அவரசச் சட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதுதான் இந்த ஆட்சியின் அராஜகத்தின் உச்சம்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டதை (MGNREGA) முழுவதுமாக அழித்திடுவதற்காக கடும் முயற்சிகள்:-

‘MGNREGA’ என்பது காங்கிரஸ் ஆட்சிகள் தோல்வியின் அடையாளம் என்று பிரதமர் மோடி கேலியாகக் குறிப்பிடுகிறார்.

மத்திய அமைச்சர் நிதின் காட்கரியோ தனது கட்சிகுள் அனுப்பும் சுற்றறிரிக்கைகளில், ‘ MGNREGA ‘ ஐ பலமாகச்சாடுகிறார்.

MGNREGAக்காக செலவிடவேண்டிய ஆகிய நிலுவைகளே மாநிலங்களுக்கு செலுத்த மறுப்பதின் மூலம் NREGAயின் ஜீவணையும் ஆத்மாவையை அழித்திட மோடி அரசு விழைகிறது.

2014-15ம் ஆண்டில் மட்டுமே, மாநிலங்கள் ஏற்கனவே செய்து MGNREGA மூலம் முடித்திட்ட பணிக்காக மத்திய அரசு ரூ.6000/- கோடி கொடுக்க வேண்டியுள்ளது. இதை மத்திய அரசு கொடுக்கமறுக்கிறது.

MGNREGA திட்டம் 100 நாட்கள் வேலை நாட்கள் உறுதி செய்யப்பட்ட போதிலும், 2014-15 ஆம் ஆண்டில், இத்திட்த்தின் கீழ் வேலை செய்திட விரும்பியவர்களுக்கு, 30 அல்லது 40 நாட்கள் என்ற அளவில்தான் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. குறைந்த நாட்கள் தான் வேலை என்றால், குறைந்த வருவாயைத் தான் ஈட்டிடமுடியும். இதனால் நாட்டிலுள்ள, ஏழைகளில் மிக ஏழையாக உள்ளோர்.

21 22 23 24 25 26 27

எதிர் கொள்ளும் பணச்சுமை மேலும் அதிகமாகிறது NDA அரசு காலத்தில் மூலம் வேலை வாய்ப்புகள் அரியதாக உள்ளது. மகாராஷ்டிரம் விதர்பாவிலுள்ள வலுவிழந்த பகுதிகளில் தற்கொலைகள் அதிகரித்துதிருப்பது என்பது நடந்தது அல்ல.

ஏனெனில் அவர்களுக்கு மாற்றுவழியான MGNREGA திட்டக் கொள்கையில் தோல்விகள், மற்றும் கீழ் நோக்கங்கள் கொண்ட இந்த மோசமான சம்பவங்கள், மோடி அரசின் ஏழைகளுக்கு எதிரானப்போக்கு விவசாயிகளுக்கு எதிரான போக்கு, விவசாயத்திற்கே எதிரான போக்கு ஆகியவற்றை நன்கு வெளிப்படுத்துகின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s