மனிதவள மேம்பாடு சீர்குலைவு – (Human Resource Destruction)

நிதி குறைப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையின்மை

கல்விக்கான நிதி (Educational Budget) சென்ற ஆண்டு ஒதுக்கீட்டிலிருந்து, பிஜேபி அரசு ரூ.14088.59 கோடியை குறைத்து விட்டது.

இதில் ஆரம்பப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டதில் ரூ.10,186 கோடியையும்;, உயர்நிலைப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டதில் ரூ.1,422 கோடியையும்;, மேல்நிலைப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டதில் ரூ.1,479 கோடியையும்; குறைத்து விட்டது.

நாட்டில், ஒன்றிய அளவில் 6000 மாதிரி பள்ளிகளை உருவாக்குவதற்கு மத்தியிலிருந்து வழங்கிடும் உதவிநிதி போன்ற முந்தையை அரசின் திட்டங்களை இன்றைய அரசு முற்றிலுமாக ரத்து செய்துவிட்டது.

கல்வியின் அஸ்திவாரம் ஆட்டம் காண்கிறது – பலவீனமாகிறது

மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கிற ஸ்மிரிதி இரானி, நன்கு உருவாக்கப்பட்டிருக்கும் கல்வி மையங்களை, மேலும் வலுப்படுத்துவற்கு பதில் சர்ச்சைத் தீயினை மூட்டியிடுவதற்காகவே, அதிக நேரத்தை செலவிடுகிறார். கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, கல்வியின் தரத்தைக் குறைத்துவிட்டார். ‘சங் பரிவார்’ கட்டளைக்கிணங்க நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களை சொல்வதின் மூலம் வீணான வாதங்கள், புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களின் பெயர்களுக்கு பங்கம் விளைவிப்பது மற்றும் தரம் வாய்ந்த கல்வி வல்லுநர்களை அவமதிப்பதின் மூலம் இந்தியாவின் கல்வி தரம் குறைகிறவதற்கு வழிவகுத்து வருகிறார். நமோ-இரானியின் கூட்டு, கல்வித்துறைக்கே புதிதாக இருக்கும., மனிதவள மேம்பாடு அமைச்சர் மற்றும் ‘சங்-பரிவார’ங்களின் முக்கிய தலைவர்கள் ஆகியோர் கல்வி நிலையங்கள் தங்களது பரிசோதனைக் கூடங்களாக மாற்றி நமது வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்துடன் விளையாடி வருகின்றனர் என்பதை அறிந்திட வில்லை.

மனிதவள மேம்பாடு துறை அமைச்சரின் கல்வி – ஓர் கேள்விக்குறியாக உள்ளது?

2014 ஆம் ஆண்டின் புள்ளியல் விவரப்படி இந்தியாவில் 74 சதவீத மக்கள் கல்வியறிவு உடையவர்களாக, திறமை மற்றும் தனி திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று புள்ளியல் விவரம் 2014 ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் இவைகளெல்லாம் வீணாகி விட்டது.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் கல்வி தகுதி, இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. (இப்பொழுது இதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது)

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, (2004 மற்றும் 2014 ஆம் ஆண்டு) கல்வி தகுதியை பதிவு செய்தார். அதில் குறிப்பிட்டதாவது, 2004 ஆம் ஆண்டு அவர் பட்டப் படிப்பை முடித்து விட்டதாக சொல்கிறார். ஆனால், 2014 ஆம் ஆண்டு பிகாம் முதலாம் ஆண்டு தேர்ச்சி பெற்றதாக சொல்கிறார். இவருடைய வாக்குமூலம் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக காணப்படுகிறது.

மேலும், யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகக் குறிப்பிடப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மையிலேயே அவர் ஒருவாரம் பயிற்சி முகாமில் பங்குபெற்று வந்ததாக தெரிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது இருக்கிற மனிதவள மேம்பாட்டின் இணையமைச்சர் ஸ்ரீ ராம் சங்கர் கட்டாரியா, போலியான பட்ட மதிப்பெண் சான்றிதழை வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்வி நிறுவனங்களின், பாடத்திட்டங்கள் நிர்ணயித்திடும், சுய உரிமைகளை ஆக்கிரமித்தல்

Impinging the Academic Autonomy of Institution

சமீபத்தில் பிரபல அணுசக்தி விஞ்ஞானி ஸ்ரீ அனில் ககோட்கர் அவர்கள் Chairman of the IIT Board of Governors of IIT, Bangalore பதவியிலிருந்து விலகினார். அதற்கான காரணத்தை அறியும் போது, திருமதி ஸ்மிரிதி ராணி தலைமையில் Search-cum-reservation committee போடப்பட்டு 3 ஐஐடி க்கான இயக்குநர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஸ்ரீ அனில் ககோட்கர் 36 பேர்கள் உள்ள ஒரு குழுவிலிருந்து, 3 ஐஐடி இயக்குநர்களுக்கான தேர்வை, 6 முதல் 7 மணி நேரத்திற்குள் முடிக்க முடியாது. இவ்வளவு சீக்கிரமாக தெரிந்தெடுக்க வேண்டுமானால், சீட்டு குலுக்கி போட்டு, லாட்டரி முறையில் தேர்ந்தெடுத்து விடலாம் என்று கூறி, இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

பெருமதிப்புமிக்க ஓர் அறிவியல் பேராசிரியர் வேலை ராஜினாமா, திருமதி ஸ்மிரிதி ராணி அவர்களின் ஆணவத்தையும், படித்தவர்களுக்கு மரியாதை கொடுத்திட அவரால் முடியாது என்பதையும் தெ

ஐஐடி டெல்லியை அரசு முடக்குவதற்கு முன்னதாகவே, பெயர் பெற்ற கல்வியாளர் மற்றும் ஐஐடி இயக்குநரும் ஆன ஸ்ரீ ரகுநாத், கே.சேவ்கன்கர் தனது வேலையை 2 வருடங்களுக்கு முன்பாக ராஜினாமா செய்தார்.

அவர் தனது வேலையை ராஜினாமா செய்தவற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் போது, ‘Mauritius’ ஆரம்பிக்கப்பட்ட International Institute of Technology Research Academy (IITRA), IIT Delhi – யால் ஆரம்பிக்கப்பட்ட மற்றொரு கிளை என்ற குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் வைத்ததினால், அவர் இப்படிப்பட்ட ஓர் முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. ஆனால், உண்மையில் ‘Mauritius’ International Institute of Technology Research Academy (IITRA), IIT Delhi மற்றொரு கிளை அல்ல.

ஒரு உலக பெயர்பெற்ற கல்வியாளரான ஸ்ரீ ரகுநாத், கே.ஷெவ்கோன்கர் மத்திய அரசின் பலாத்காரத்தின் நிமித்தம் ஏன் மிகச்சிறந்த ஐஐடியின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்திடும் அளவிற்கு தள்ளப்பட்டார்.?

மத்திய அமைச்சரின் முரண்பாடான அறிக்கைகள்

ஏப்ரல் 27, 2015 அன்று பாராளுமன்றத்தில் தனது துறையிலான நிதி ஒதுக்கீட்டு முறையீடின் போது பதிலளித்துப் பேசிய அமைச்சர், இந்தியன் இன்ஸ்டியூட் டெக்னாலஜி (ஐஐடி), இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐஐடி-டெல்லி) சட்டத்தின படி, மற்றொரு கிளை ஆராய்ச்சி நிறுவனத்தை Mauritius ஆரம்பித்தது சட்டத்தை மீறியதாகும்.

முந்தைய காங்கிரஸ் அரசின் (2013) காலத்தில், International Institute of Technology Research Academy (IITRA) ‘Mauritius’– லில் ஆரம்பிக்கப்பட்டது. அது இந்திய தொழல் நுட்ப சட்டத்தின் படி குற்றமாகும். ஏனெனில் இந்திய வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து International Institute of Technology Research Academy (IITRA), ‘Mauritius’ லில் உருவாக்கப்பட்டதாக அவர் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்.

அதே நாளில் இதே அமைச்சர் முந்தைய கருத்துக்கு மாறாகவும் கூறுகிறார். அவர் சொன்னதாவது ஐஐடி-டெல்லி International Institute of Technology Research Academy (IITRA), யை ‘Mauritius’ அமைப்பதற்கு எந்த செலவும் செய்யவில்லை. மேலும், அந்நிறுவனத்தில் எந்தவிதமான பாடத்திட்டங்களையும் புகுத்தவில்லை எனக்கூறினார்.

இப்படி முரண்பட்ட கருத்துக்களால் இத்தேசத்து மக்களை குழப்புவதோடு கல்வியாளர்களையும் அவமானப் படுத்திறார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding)

கல்வித் துறையில் HRD துறை தேவையற்ற குறுக்கீடு

கல்வித் துறையின் (புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்) HRD துறை தேவையற்ற குறுக்கீடு

தற்போதைய அரசு, புதியதோர் ஆணையை பிறப்பித்திருக்கிறது. அது என்னவென்றால், பிற நாடுகளுடைய கல்வித் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டுமானால், நாட்டின் பாதுகாப்புக் கருதி வெளிவிவகார அமைச்சரிடம் மற்றும் MHRD அமச்சரின் அனுமதி பெற வேண்டும்.

இந்த சட்டமானது, உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐஐடி மற்றும் மத்திய பல்கலை கழகங்களுக்கு ஒவ்வாத ஒன்றாக இதுவரை இல்லாத ஒன்றாக காணப்படுகிறது. ஆகவே, இதுபோன்ற ஒரு ஏற்பாட்டினை முந்தைய பா.ஜ.க.அரசும் (1998-2004) லிம் எடுத்திருந்தது. இதை முந்தைய காங்கிரஸ் அரசு ஆகஸ்ட் 2004-ல் சுயாட்சி உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தில் தேவையற்ற குறுக்கீடு எனக் குறிப்பிட்டு, அவற்றினை ரத்து செய்துள்ளது.

Violating the Autonomy of the UGC

பல்கலைக்கழக மானியக்குழுவின் சுயாட்சியை மீறுவது

பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரான ஸ்ரீ எம்.எம்.அன்சாரி மிகவும் கடுமையாக மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சரை சாடுகிறார்.

மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சரான ஸ்மிரிதி ராணியின் அதிகப்படியான குறுக்கீடு மற்றும் தன்னிச்சையாக திடீரென, முடிவுகளை எடுக்கும் தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.

இந்த அமைச்சகத்தை நடத்திடுவதற்கு, ஆர்எஸ்எஸ் மற்றும் இத்துறையில் நன்கு காலூன்றிடும் ஆர்எஸ்எஸ் மனப்பான்மையுள்ள அலுவலகர்களை மட்டுமே முழுவதும் நம்பியிருக்கிறார் எனக் குற்றம் சாட்டுகிறார். ஏனைய கல்வியாளர்கள், அலுவலர்கள், ஆட்சியாளர்கள் ஆகியோரின் மனதில் என்ன இருக்கிறதோ அதை வெளிப்படையாகவே இந்த உறுப்பினர் வெளியிடுகிறார் என்றே தோன்றுகிறது.

FATE OF UGC

டாக்டர் ஹரி கவுதம் தலைமையில் ஒரு குழுவானது அறிக்கை ஒன்றை உயர்கல்வி செயலாளர் இடத்தில் ஒப்புவித்தது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டதாவது, பல்கலைக்கழக மாநில குழு தன்னுடைய கடமையை செய்யத் தவறி விட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை மனிதவளமேம்பாடு அமைச்சர் முதலில் மறுத்தார். பிற்பாடு, இந்த அறிக்கையை ஆய்வு செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

1 2 3

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s