மத்திய பிரதேசமா? அல்லது மரண பிரதேசமா? மத்திய பிரதேசத்தில் ‘வியாபம்’ எனும் ஓர் ‘மெகா பாபம்’

மத்திய பிரதேசத்தில்வியாபம்எனும் ஓர்மெகா பாபம்

(அரசு ஊழியர் தேர்வில் மாபெரும் ஊழல் – இதில் தொடர்புடை 49 பேர் மரணம்)

‘வியாபம் விவகாரம் முதலில் மத்திய பிரதேச மாநிலத்தை மட்டும்தான் உலுக்கி வந்தது. இப்பொழுது பத்திரிக்கையில் இது சம்பந்தமாக தொடர்ந்து வரும் செய்திகள் நாட்டையே உலுக்கிக் கொண்டுருக்கிறது.

 1. I. வியாபம் என்றால் என்ன?

மத்திய பிரதேசத்தில் 1970ம் ஆண்டுகளில், காங்கிரஸ் ஆட்சியின் போது அரசு சார்ந்த தொண்டு அமைப்பாக, வியாபம் (VYAPAMVyausayik Pariksha Mandal) அமைக்கபட்டது இந்த அமைப்பு MPPEB – (Madhya Pradesh Professional Examination Board) என்றும் அழைக்கபடுகிறது.

மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் நுழைவுத் தேர்வு அதற்கான அனுமதி பிற துறைகளுக்கான பணியாளர்கள் நுழைவுத் தேர்வு போன்றவற்றை கவனித்திட மற்றும் கண்காணித்திடுவதற்காக அமைக்கப்பட்ட அமைப்புதான் இது. ஆரம்ப காலங்களில் மிகவும் நேர்மையாக செயல்பட்டு வந்த இந்த அமைப்பு, (அதாவது காங்கிரசின் ஆட்;சிகாலத்தில்; நேர்மையாக செயல்பட்டு வந்தது), கடந்த 8 அல்லது 10 ஆண்டுகளாக பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபட்டு தகுதியேயில்லாத பலரை, டாக்டர்களாகவும், இஞ்சினியர்களாகவும், ஆசிரியர்களாகவும், கிளார்க்குகளாகவும், வனப்பாதுகாவலர்களாகவும், அதிகாரிகளாகவும் ஆக்கியுள்ளது.

இந்த விவகாரம்தான், பி.ஜே.பி.யினரையும் ம.பி முதல்வர்; சிவராஜ் சவுகானையும், அவரது அரசையும், மத்திய அரசையும், ஏன்? பிரதமர் மோடியையுமே சமீபகாலங்களில் பலமாக உலுக்கிவருகிறது.

இந்த முறைகேட்டில் முதல்வர் குடும்பத்தினர், கவர்னர் குடும்பத்தினர் மற்றும் பல அமைச்சர்கள், நீதித்துறை பிரபலங்கள் எனப்பலர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன,

 1. கள்ளக் கையெழுத்து வழக்குகள் 1000
 2. போலியான அடையாளச் சான்றுகள் போலியான சான்றிதழ்கள், போலியான பரீட்சைகள் மற்றும் போலியான தேர்வுகள் மூலம் 1,47,000 முக்கிய காலியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.
 3. 2012 மற்றும் 2013களில் மொத்தம் 49 லட்சம் நபர்கள், 59 பரிட்சைகளில் அமர்ந்து பரீட்சை எழுதியுள்ளனர்.
 4. முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ம.பி. போலிசார் மட்டுமே இடம் பெற்றிருக்கும் சிறப்பு செயல்பாட்டு குழுவின் (STF) மூலம், இதுவரை 2000க்கும் அதிகமானோரைக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். (STFல் உள்ளோர் முழுக்க முழுக்க ம.பி. அரசுக்குக் கட்டுபட்டவர்களே. இவர்கள் எவ்வாறு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் மீது நடவடிக்கைகள் எடுத்திட முடியும்?)
 5. மற்ற ஊழல் விவாகரங்களில் இல்லாத கொடுமை இந்த ஊழலில் இருப்பது என்னவென்றால் இதில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டு, ஜெயில் மற்றும் பெயிலில் இருப்போரில் 49 பேர் (குற்றம் சாட்டப்பட்டவர், சாட்சிகள், பத்திரிக்கையாளர்கள், ஊழலை அம்பலப்படுத்துபவர் (Whistle Blowers, போன்றோர்) தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மர்மமான முறையில் மரணமடைந்து வருவதுதான். ஆனால் இவையாவும் இயற்கையான சாவுகள் என்று கூறி, ம.பி. அரசு உண்மையை மூடி மறைக்கிறது.

பிரபல பத்திரிக்கையாளர்களான, நீராஜா சவுத்ரி, ஆரத்தி ஜெராத் போன்றவர்கள், இதுவரை இதுபோல் கொலையுடன் கூடிய மகா ஊழல், சுகந்திர இந்தியாவில் நடந்ததே இல்லை எனக் கூறுகிறார்கள்.

மோடி அரசு மீதும்; ம.பி. முதல்வர் மீதும் சந்தேகம் நாளுக்குநாள் வளர்ந்தது கொண்டேயிருக்கிறது. ஆனால், மற்ற விஷயத்திற்கெல்லாம் சண்டப்பிரசண்டம் பண்ணும் பிரதமர் மோடி இந்த சர்ச்சை நிறைந்த விஷயத்தில் வாயைத் திறப்பதில்லை. ஏன்?

எனவே தான், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில், 2 தனியான சிபிஐ விசாரணைகளை நடத்திட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருகிறது.

 1. ‘வியாபம்’; அமைப்பின் தேர்வுமுறைகளில் நடத்திட்ட முறைகேடுகளில் பற்றி
 2. தொடர் கொலைகள் நேர்ந்திடும் விதங்கள் அதில் சம்பந்தபட்டோர், ஈடுபட்டோர் ஆகியோர் பற்றி மற்றொன்றும்.

உச்சநீதிமன்றம் இதை ஏற்று CBI விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி என பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றனர்.

 1. II. வியாபம் முறைகேடுகள்

வியாபம் நடத்திடும் பரிட்சைகளில் எவ்விதம் கற்றறிந்திடாதவர்களையும், தகுதியல்லாதவர்களையும், உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கும் ‘மாயாஜாலம்’ நடைபெற்று வருகிறது என்பதுதான் கேள்வி?

மாயாஜாலத்தை செயல்படுத்திடும் முறைகள்:

 1. a) ஆள் மாற்றம் செய்திடும் முறை

எந்த ஒரு நபர் ‘Medical Seat’க்காக விண்ணப்பித்திருக்கிறாறோ, அவரது பெயர் பிறந்ததேதி, வரிசை எண் (Roll Number) ஆகியவற்றை கொண்ட அனுமதிச்சீட்டில் அவரது படத்திற்கு (Photograph) பதிலாக, அவருக்காக ஆள்மாற்றம் செய்திடும் நபரின் படம் தான் ஒட்டப்பட்டிருக்கும்.

இந்த ஆள்மாற்றம் செய்திடுபவர், விண்ணப்பத்திருப்பவரை விட அறிவுள்ளவராகவும், திறமைசாலியாகவும், ஏற்கனவே பரீட்சை எழுதுவதில் நன்கு அனுபவம் பெற்ற மாணவராக இருப்பார். இவர் இதற்குமுன் நடந்த பரீட்சைகளில் அதிகமாகக் மார்க்குகளை வாங்கியிருப்பார். எனவே நுழைவுத்தேர்வில் இவர் நன்கு பதிலளித்துவிடுவார். பின் பரீட்சைத்தாள்கள் மதிப்பீடு செய்வதற்காக அனுப்பப்படும் போது, அனுமதிச் சீட்டிலுள்ள, ஆள்மாறாட்டம் செய்தவரின் படம் நீக்கப்பட்டு, அதற்கு பதில் அதில் விண்ணப்பித்திருப்பவரின் படம் ஒட்டப்படும்.

இவருக்கு நிச்சயம் Medical Seat கிடைத்திருக்கும். ஆனால், படிப்பு முடிந்து வெளியில் வரும் பொழுது இவர் ஒரு ‘வசூல் ராஜா’ M.B.B.S ஆகத்தான் இருப்பார். இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், ‘MPPEB’ அலுவலர்கள் என அனைவருமே, உடந்தை.

 1. b) இன்ஜின் தொடர் வண்டி முறை

நன்கு விஷயங்களை அறிந்தவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவரும் ஒப்புக்காக பரிட்சை எழுதுவார். இவர்தான் இஞ்ஜின். இவருக்கு இருபுறமும், பணிக்காக ஏற்கனவே லஞ்சம் கொடுத்தவர், இவரைக் காப்பியடித்து எழுதுவர். இவர்கள் இருவருமே தேர்வு பெற்றுவிடுவர்.

வெற்று விடைத்தாள்களை அளித்துpடும் முறை (OMR Sheet)

எவருக்கு மெடிக்கல் சீட் கிடைத்திட வேண்டுமோ, அவர் தனது விடைத்தாளை வெறும் வெற்றுத் தாளாகத்தான் பரிட்சை இறுதியில் சமர்ப்பிப்பார். விடைத்தாள்களை திருத்துபவர் அந்த வெற்று விடைத்தாள்களில் சரியான விடைகளை எழுதி அதிக மதிப்பெண்களை அளித்து, பரிட்சை எழுதியவர்க்கு மெடிக்கல் சீட் கிடைத்திடுமாறு செய்திடுவார்.

இதே முறைகள் தான், பொறியியல், போலீஸ் காவலர்கள், வனக்காவலர், நீதிபதி, ஆசிரியர்கள் தேர்வுகள் போன்ற அனைத்துத் தேர்வுகளிலும் பின்பற்றப்பட்டு. தகுதியில்லாதோர் பலர் இன்று மத்திய பிரதேச அரசாங்கத்தில் முக்கியமான பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இப்பேற்பட்ட ‘ஜெகஜ்ஜால’ மாயாஜாலம் எவ்வாறு வெளிவந்தது?

இந்த ஊழல் மற்றும் முறைகேட்டை வெளிப்படுத்தியவர்கள் மூன்று பேர்:

 1. ஆஷிஷ் சதுர்வேதி
 2. ஆனந்த ராய்
 3. பிரசாந்த் பாண்டே
 4. ஆஷிஷ் சதுர்வேதி:

இவர் மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரில் மாஸ்டர் ஆப் சோஷியல் ஸ்டுடண்ட் (Master of Social Student) வகுப்பில் மாணவர். இவருக்கு வயது 26. சமூக ஆர்வலரான இவர் 2009 ஆம் ஆண்டில் புற்றுநோயால் அவதிப்படும் தனது தாயாரை அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்.

அவரின் தாய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் சாதாரண மருத்துவ அறிவு கூட இல்லாத (ஏனெனில், அவர் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.களில் ஒருவர்) இதை அறிந்த ஆஷிஷ் ரகசியமாக மேற்கொண்ட நடவடிக்கைகளில் இந்த முறைகேடு அம்பலமானது.

முதலில் சந்தித்த புற்றுநோய் நிபுணரை விட்டுவிட்டு அடுத்த புற்றுநோய் நிபுணரை அணுகினார். அவரும் ஒரு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் தான் எனக் கண்டறிந்தார். எனவே சந்தேகம் கொண்டு. மேலும் ஆய்வு செய்தபின் மத்தியபிரதேசத்தில், ‘மருத்துவர்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை’ ஒன்று இருப்பது தெரியவந்தது. மேலும், தூண்டித்துருவிப் பார்த்ததில், இந்த முறைகேடுகளில் மத்திய பிரதேச முதல்வர் மற்றும் மத்திய பிரதேச கவர்னர் ஆகியோரின் குடும்பங்கள் சம்பந்தப்பட்டள்ளது தெரியவந்தது.

இதன்பின்தான் அவர், ‘ஊழல்களை அம்பலப்படுத்துபவர்’ (Whistle Blower) ஆக மாறினார். இதனால் அவரை தாக்கிடவும், கடத்திச் சென்றிடவும் இருமுறை முயற்சிகள் நடந்தது. அதில் அவர் தப்பிவிட்டார். அதனால், அவருக்கு ஆகஸ்டு மாதம் 2014 இல் உச்சநீதி மன்ற உத்தரவின் படி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 10 மாதங்களில் இதுவரை 70 காவலர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். எனவே, அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புப் பற்றி அவருக்கே சந்தேகம் வந்துள்ளது. எனக்கு பாதுகாப்பாக அனுப்பபட்டிருக்கம் காவலர்களே என்னுடன் கூட வருவதற்குப் பயப்படுகிறார்கள். ஒரு பேட்டியில், ஆஷிஷ் கூறுகிறார், ‘எனக்கு தினமும் கொலை மிரட்டல் வருகிறது. துண்டு துண்டாக வெட்டி கொலை செய்வோம் என்கிறார்கள். கொலைப் பட்டியலில் அடுத்தது நான் தான் இடம் பெறுவேன் என நினைக்கிறேன். மிரட்டலுக்க அஞ்சமாட்டேன். வியாபம் ஊழல் பேர்வழிகள் அனைவரையும் கூண்டிலேற்றியே தீருவேன்’ என்று கூறியுள்ளார்.

 1. ஆனந்த ராய்:

இவர் இந்தூரில், ‘’Regional Health Training Centre”-ல் பணிபுரியும் மருத்துவ அலுவலர் (Medical Officer) இவரும் ஒரு முக்கியமான ‘ஊழலை அம்பப்படுத்துபவர் (Whistle Blower)’ ஆவார். மிகவும் மூத்த அமைச்சர்களிலிருந்து, மத்திய பிரதேசத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க கட்டுமான அதிபர் ஆகியோரிடமிருந்து நான் அரசிடம் கேட்டுள்ள, தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான கேள்விகளை திரும்பப் பெறுமாறு அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன’ என்கிறார்.

இவருக்கு மத்திய பிரதேச அரசு பாதுகாப்பு அளித்துள்ளது. ஆனால், அந்தக் காவலர்கள் ஒரு நாளில் சில மணி நேரங்களே இவருடன் இருக்கிறார்கள். இவரது மனைவி டாக்டர் கௌரிபாய், மகளிர் நல மருத்துவர். இவர் இப்பொழுது பதவியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

 1. பிரசாந்த பாண்டே:

ஊழலை அம்பலப்படுத்துபவர்களில் மிகுந்த ஆபத்திலிருப்பவர் இவர். இந்தூரைச் சேர்ந்த இவர் ஒரு கம்யூட்டர் மென்பொருள் நிபுணர். இவர் முதலில் Special Task Force (STF) – பிற்கு உதவியாளராகப் பணியாற்றினார். தொலைபேசி அழைப்புகளை சோதிப்பது, கம்யூட்டர் ஹார்டு டிஸ்க்-களை ஆய்வு செய்வது, தகவல் தொழில்நுட்பம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் உதவுவதுதான் இவரது பணி. ஒரு Public Interest Litigation (PIL) மூலம், உச்சநீதிமன்றத்தில் பல முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

இவர் ஒரு ஊழல் அம்பலப்படுத்துபவர் ஆக மாறியதற்குக் காரணம், Special Task Force (STF) சரியான முறையில் பணியாற்றவில்லை என்பதால்தான். டெல்லி உயர்நீதிமன்றம் இவரை கைது செய்திடக்கூடாது என்றும், பாதுகாப்பு அளித்திடவேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. சமீபத்தில் இவர் ஓர் கார் விபத்தில் சிக்கினார். இது இவரைச் கொல்ல வந்த முயற்சி என இவர் கூறுகிறார்.

இவ்வாறு உயிரை பணயம் வைத்து, உண்மைகளை வெளிக்கொணர பலர் இருந்தும், இந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நகராமல் இருந்த இடத்திலேயே இருந்து வருகிறது.

 1. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் மற்றும் பெயிலில் இருப்பவர்கள் யார், யார்?
 2. லக்ஷ்மி காந்த் சர்மா:- முன்னாள் மத்திய பிரதேச கல்வியமைச்சர். ஆசிரியர்கள்; தேர்வில் நடந்த பல ஊழல்களுக்குக் காரணமாயிருந்தவர். பலகோடி ரூபாய்கள் அளவிற்கு ஊழல் நடத்தியவர். ‘வியாபம்’ சம்மந்தப்பட்ட அனைத்து வழக்குகளால் இவர் மீது Special Task Force (STF), முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது.
 3. சுதிர் சர்மா:- இவர் முன்னாள் லக்ஷ்மி காந்த் சர்மாவின் நேரடிச் செயலர். இவருக்கு வலது கரம் போன்றவர். ‘வியாபம்’ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, முன்னாள் அமைச்சருக்கு லஞ்சத் தொகைகளை வாங்கிக் கொடுப்பவரும் இவரே.
 4. ஓ.பி.சுக்லா:-இவரும் ஒரு ஓ.பி.எஸ்.தான். லக்ஷ்மிகாந்துக்கு OSD – (Official of Special Duty) ஆக இருந்தவர். இரண்டு குற்றவாளிகளிடமிருந்து ரூபாய்.85 லட்சம், லஞ்சமாகப் பெற்றிருக்கிறார்கள்.
 5. ராம் நரேஷ் யாதவ்:- மத்திய பிரதேச ஆளுநர். 5 நபர்களுக்கு ‘வனக்காவலர்கள்’ உத்தியோகம் வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றவர். இவர் மீது முதல் குற்றப்பத்திரிகை அறிக்கை உள்ளது. ஆனால், கவர்னர் என்பதால் இவர் மீதுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் (இதிலும் வியாபம் மூலம் ஆதாயம் பெற்ற பல நீதிபதிகள் உள்ளனர்.) ஆனால், உச்சநீதி மன்றம் தற்பொழுது இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 6. தன்ராஜ் யாதவ்:- இவர் மத்திய பிரதேச கவர்னரின் OSD யாக இருந்தவர். கவர்னருக்கும், குற்றம்சாட்டப் பட்ட அதிகாரிகளுக்கும் இடையே தரகராகச் செயல்பட்டவர். பல போலியானவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தவர். பல கோடி ரூபாய்களை கொள்ளையடித்தவர்.
 7. ஆர்.கே.ஷிவாரே:- போலி பேர்வழிகள் பலர்;, போலீஸ் ஆகவும், சப்-இன்ஸ்பெக்டராவும் தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கு உதவியவர். இவரது மகளும், மருமகளும், பல வசூல் ராஜா எம்பிபிஎஸ்கள் உருவாகவதற்கு காரணமாயிருந்தனர். பலகோடி ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர்.
 8. பிரேம் பிரகாஷ்:- சிவ்ராஜ் சவுகானின் முன்னாள் உதவியாளர். இவரது மகளும் ஒரு வசூல்ராஜா எம்பிபிஎஸ்தான்.
 9. பங்கஜ் திரிவேதி:- ‘வியாபம்’ நடத்தும் பரீட்சைகளை கண்காணிப்பவர். இந்த ஊழல்களுக்கெல்லாம், மூளையாகச் செயல்பட்டவர். பல கோடி ரூபாய்களை கொள்ளையடித்தவர்.
 10. நிதின் மோகேந்திரா:- இவர் ஒரு ‘கணினி மென்பொருள்’ நிபுணர். திரிவேதியின் வலதுகரம் போல் செயல்பட்டவர். கணினி மூலம் ‘மாயாஜால’ வேலைகளைச் செய்வதில் கில்லாடி. இவரும் பலகோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார்.
 11. சுதிர் சர்மா:- இவர் மற்றொரு சுதிர்சர்மா. சுரங்க முறைகேடுகளில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பவர். சவுகானுக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் கொள்ளையடித்திருப்பதை கம்ப்யூட்டர்களாலேயே கணக்கிட முடியாது.
 12. ஜெகதீஷ் சாகர்:- ‘சாகர்’ என்றால் கடல் என்று அர்த்தம். இவர் ஊழலின் கடல். இந்த ‘வியாபம்’ ஊழல் அனைத்திற்கும் மூலகர்த்தா, என்றால் இவர் எப்படிப்பட்டவர் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இவரும் சவுகானுக்கு நெருக்கமானவர்.

இவர்கள் போல் இன்னும் பலர் இருக்கிறார்கள். இவர்கள் யாவரும் இரண்டாம் கட்டத் தலைவர்களே. இவர்கள் மாட்டிக் கொண்டால் முதல்கட்டத் தலைவர்கள் (அமைச்சர்கள், நீதிபதிக்ள உட்பட) அனைவரையும் காட்டிக் கொடுத்துவிடுவார்கள். இரண்டாம் நிலை தலைவர்கள் 1000 கோடிகளை கொள்ளையடித்தவர்கள் என்றால் முதல் நிலைத் தலைவர்கள் அனைவரும் லட்சம் கோடி கொள்ளையடித்தவர்கள். ஆனால், இரண்டாம் கட்டத்தலைவர்கள் மாட்டிக் கொண்டால், இவர்கள் முதல் கட்டத்தலைவர்களை காட்டிக் கொடுத்திட தயங்க மாட்டார்கள். இதே ‘வியாபம்’ விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 2000 சிறிய மீன்கள்’, மூலம் இரண்டாம் கட்டத் தலைவர்கள் காட்டிக் கொடுக்காமல் இருந்திடுவதற்குத்தான் இந்த 2000 ம் பேரில் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்ள். காட்டிக் கொடுத்திடுவாரே‚ எனவே, இவர்களை அகற்றினால்தான், இரண்டாம் கட்டத்தலைவர்கள் விடுதலை செய்யமுடியும், அதன்மூலம் தாங்களும் தப்பித்துக் கொள்ள முடியும் என முதல் கட்டத் தலைவர்கள் எண்ணியதின் விளைவுதான் ‘வியாபம்’ சம்மந்தப்பட்ட 48 கொலைகள்.

மத்திய பிரதேசத்தில் தலைவிரித்தாடும்கொல வெறி

ஆகவே, குற்றம் சாட்டப்பட்ட 2000 க்கும் மேற்பட்டோரில், ‘வியாபம் முறைகேடுகள் மூலம்’ மருத்துவப்படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெற்றோர், பத்திரிகையாளர்கள், ஊழலை அம்பலப்படுத்துபவர்கள் ஆகியோர் இந்த முதலாம் கட்ட தலைவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு, அவர்களையும் குற்றவாளிக் கூண்டிலேற்றுவது என்பது சாத்தியமே.

அவர்கள் உயிருடன் இருந்தால் தானே இவர்களை காட்டிக் கொடுக்கமுடியும். எனவே, அவர்கள் ஒவ்வொருவரையும் அகற்றுவதற்கான முயற்சிகள் அனுதினமும் நடந்தேறி வருகின்றன. இதைக் கண்டும் காணாதது போல் உள்ளது மத்திய பிரதேச அரசு.

இது ஓர் அரசு என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது. பாரதி கூறினான், ‘பேய் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்றான். இந்த பேயாட்சியில் தினம் ஒரு கொலை நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட 2000 பேர்களில் தினம் ஒருவர் அல்லது இருவர் கொல்லப்பட்டு வருகின்றனர். கொலையுண்டோர் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே வருகிறது.

உதாரணமாக கீழ் தரப்பட்ட பட்டியல் பல செய்திகளைக் கூறிடும்.

vyapam-page-001

குறிப்பு :- இதுபோன்று இதுவரை 49 பேர் இறந்திருக்கின்றனர்.

இவ்வாறு சந்தேகத்திற்குரிய பல கொலைகள் நடந்தாலும், மத்திய பிரதேச முதல்வரோ, ‘இவையாவும் இயற்கையாக நடைபெற்ற சாவுகள். இதற்கும் வியாபத்திற்கும் சம்பந்தமில்லை’ என்று துணிந்து பொய் சொல்கிறார்.

25 கொலைகள் நடந்தேறிய பின், மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர், பாபுலால் கவுர், என்பவரிடம் இதுபற்றி கேட்டால், அவரோ ‘மனிதனாக பிறந்தவர் அனைவரும் ஒருநாள் சாகவேண்டியவர்கள் தானே’ என வேதாந்தம் பேசுகிறார்.

ஆனால், அதே கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் உமாபாரதி,’நடப்பதையெல்லாம் பார்த்தால், எனக்கும் ஆபத்து நெருங்கி வருவது போல் தோன்றுகிறது’ என்று பதறுகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, SIT – யின் தலைவர் நீதியரசர் சந்திரேஷ் பூஷன், ‘உயர்நீதிமன்றத்தில், எஸ்டிஎப்பிலுள்ள பல அதிகாரிகளே, தங்களது உயிருக்கு உத்திரவாதமில்லை யென்று கூறி பதறுகிறார்கள்’ என்று மத்திய பிரதேசத்தில் போலீஸ்காரர்களின் பரிதாப நிலையை சுட்டிக் காட்டுகிறார்.

மக்களைக் காக்கவேண்டிய போலீஸ் அதிகாரிகளுக்கே மத்திய பிரதேசத்தில் பாதுகாப்பில்லை என்றால், அங்கு நிலமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஏற்பட்ட சாவுகள் அனைத்தும், இயற்கையான சாவுகள் அல்ல. கொலைகள் நடந்த பின், அவை மறைக்கப்படுபவைகளாகவே இருக்கின்றன என்பதை ஜுலை 9 ஆம் (2015) அன்று ‘தி ஹிந்து’ பத்திரிகையின் முதல் பக்கத்தில் வந்த செய்தி தெளிவாக்குகிறது.

‘நம்ரத தாமோர் கொலை வழக்கில், போஸ்ட் மார்டம் அறிக்கை, இது பயங்கர மூச்சுதிணறலால் ஏற்பட்ட உயிரிழப்பு எனக் கூறுகிறது.’

9.1.2012 அன்று போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர்களாக டாக்டர் பி.ஆர்.புரோகித், ஓ.பி.குப்தா, அனித் ஜோஷி ஆகியோர் தங்கள் அறிக்கையில் ஒரு இடத்தில் கூட இது தற்கொலை என்று குறிப்பிடவில்லை.

ஆனால், இது நடந்த இரண்டு மாதத்திற்குப் பின் அரசு மருத்துவர் டாக்டர் பட்கூர் கொடுத்திட்ட அறிக்கையின் படி இது தற்கொலை என போலீஸார் இவ்வழக்கின் இறுதி அறிக்கையில் கூறி, வழக்கை முடித்துவிட்டனர்.

ஆனால், டாக்டர் பட்கூர், ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது ‘வெறும் படங்களைப் பார்த்து விட்டும், வேறு சில ஆவணங்களைப் பார்த்து விட்டுத்தான்’ இவ்வாறு கூறினேன் என்று ஒப்புக் கொண்டார். இதிலிருந்து டாக்டர் பட்கூர் ஓர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்றுதான் தெரிகிறது.

எனவே, ஒவ்வொரு கொலைகளாக, மத்திய அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது. இதற்கு அரசும், முதலமைச்சரும், அமைச்சர்களும் பெரிய அதிகாரிகளும் உடந்தை என்றே தெரிய வருகிறது.

9.7.2015, ‘தி ஹிந்து’ பத்திரிகையில் வெளிவந்த தலையங்கம் கூறுகிறது.

‘வியாபம் என்பது மற்றும் ஒரு சாதாரண ஊழல் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. வஞ்சக எண்ணங்கள் கொண்டு அரசு இயந்திரத்தை தன் வசப்படுத்திடவும், ஒரு கொலைகாரக் கூட்டத்தினை காட்டி கொடுப்போரையும், சாட்சிகளையும், அறவே அழித்திடும் மூர்க்கத் தனமும், ஒருங்கே இணைந்து அமைந்துள்ள தனித்தன்மை வாய்ந்த இது போன்ற கும்பலை இதுவரை கண்டதேயில்லை. தொழிற்கல்விக் கூடங்களில் இடம் பெற்றிடவும், அரசு வேலைகளில் சேர்ந்திடவும், நடத்தப்படும் தேர்வுகளில் ஊழல் செயல்களில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாது, 40க்கும் மேற்பட்டோரை கொலை செய்திடவும், கொலை வெறி கொண்ட கும்பல் இது. அத்துடன் நில்லாமல் இவற்றினை மூடிமறைத்திடும் செயல்களிலும் ஈடுபட்டு, போலீஸ் விசாரணைக்கு எவ்வளவு தடைகளை உண்டுபண்ண முடியுமோ, அவ்வளவையும் செய்து கொண்டிருக்கிறது இக்கும்பல்.

இதுவரை 2000 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த ஊழலின் காரணகர்த்தர்களும், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் இந்த கொலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. வேறு யாரோ, முக்கியமானவரை காப்பாற்றுவதற்காக இந்தக் கும்பல் இக்கொலை வெறியில் ஈடுபட்டிருக்கின்றனரோ என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டேயிருக்கிறது.

இந்த கொடூரமான, பயங்கரமான, மனித குலத்திற்கே எதிராக நடந்து வரும் சம்பங்களைப் பற்றி உச்சநீதிமன்றத்தின் கீழ் ஒரு தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த கொலவெறி அராஜகத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். இதை சாதித்தேத் தீரவேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

நல்லது நடக்க வேண்டும் என்பது அனைவரின் அவா. காலம் பதில் சொல்லட்டும்.

http://www.thehindu.com/sunday-anchor/autopsy-of-a-scam/article7411616.ece

http://www.thehindu.com/sunday-anchor/to-monitor-or-not/article7411621.ece

1 2 3

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s