பாதுகாப்பு சமரசம் – (Compramising Defence) – தேச பாதுகாப்பு நலன் புறக்கணிக்கப்படுகிறது

மலைப்பகுதிகளில் போரிடும் வல்லமை பெற்ற ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைத்திட்டது அல்லாமல் அவர்களுக்காக, ‘பட்ஜெட்’ டில் செய்யப்பட்டிருந்த, ஒதுக்கீட்டு தெகையையும் பாதியாக குறைத்துள்ளது இந்த அரசு.

2013 ஆம் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு கீழ் காணப்படும் அமைப்புகளை உருவாக்கியது.

  1. ‘மலைப்பகுதிகளில் போரிடும் வல்லமை பெற்ற வீரர்களைக் கொண்ட ராணுவப ;படை’ (MSC)
  2. இதனுடன், சுதந்திரமாக இயங்கிடும் இரண்டு சிறு உதவிப்படைகள் (Infantry Brigade)
  3. இவை தவிர, ஆயுதம் தாங்கிய இரண்டு சிறு படைகள்

எல்லைப் பகுதிகளின் சீனாவின் அச்சுறுத்தலையும், அத்துமீறல்களையும் எதிர் கொள்ளவே, ரூ.85,478/- கோடி ஒதுக்கப்பட்டு, 90,000 ராணுவ வீரர்கள் கொண்ட இப்படைகள் உருவாக்கப்பட்டன. இதுதவிர, இவர்களுக்கு வேண்டிய கட்டமைப்புகளாக, விமான தளம், ஏவுகணைகள், டாங்குகள் ஆகியவற்றிற்குரிய வசதிகளும் உருவாக்கிக் கொடுக்கப்பட்டன.

நரேந்திர மேடியின் சீன விஜயத்திற்கு 3 வாரங்களுக்கு முன்னால், மலைப்பகுதிகளில் போரிடும் ராணுவப்படையிலுள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் குறைக்கப்பட்டு விட்டது என்கிறார் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர். தேசத்தை உலுக்கிடும் வகையில் தேசப்பாதுகாப்பு நலனையே காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள்.

சீனாவும், பாகிஸ்தானும் நமது எல்லை போர்களில் பெருமளவிற்கு நெடுஞ்சாலைகள், விமான தளங்கள், நிரந்தரமாக ராணுவ இருப்பிடங்கள் போன்ற கட்டமைப்புளை உருவாக்கி வருகின்றன. இவற்றை எதிர் கொண்டிடவே முந்தைய காங்கிரஸ் அரசு மலைப்பகுதிகளில் போரிடும் வல்லமை பெற்ற வீரர்களைக் கொண்ட ராணுவப் படை’ (MSC) அமைப்பினை உருவாக்கியது. ஆனால், இந்த அரசு MSS அமைப்பினை மிகவும் பலவீனமாக்கியுள்ளது. இதிலிருந்தே இவர்கள், நாட்டின் பாதுகாப்பின் மீது எந்தளவிற்கு அக்கறைக் கொண்டுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதுதான் போகட்டும்,

தனது சீன விஜயத்தின் கீழ்காணும் பிரச்சனைகளைப் பற்றி சீன அதிபர்களுடன் பேசிடவேயில்லை.

  1. அருணாசல பிரதேசவாசிகளுக்கு, சீனாவிற்குள் வருகை தருவதற்கு ‘உள்நாட்டு விசா சலுகை’ அளிப்பது பற்றி (அதாவது சீனா, இன்னமும் அருணாசல பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே கருதிவருகிறது)
  2. பிரம்மபுத்திரா நதியின் மேற்பகுதிகளில், அணைகளை சீனா கட்டிவருவது பற்றி
  3. பாகிஸ்தான் தனது பகுதிகளில், வளர்ச்சிகளை ஏற்படுத்திட, அதிலும் குறிப்பாக ‘பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளில், பல திட்டங்களை நிறைவேற்றிட, சீனா அளித்திருக்கும் ரூ.4200 கோடி நிதியுதவி பற்றி
  4. இந்திய-சீன வர்த்தகத்தில் தவறாகக் கணக்கிடப்பட்டிருக்கும் 4000 கோடி அளவிலான கடன்களைப் பற்றி

இவ்வளவு ஒட்டைகளையும் வைத்துக் கொண்டு, மோடியின் சீனாவின் விஜயம், மாபெரும் வெற்றி என்று பாஜக வினர் வாய் கூசாமல் பொய் சொல்லி வருகின்றனர்.

46 compromising

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s