‘கறுப்புபண நாடகம்’ ஏமாற்று வித்தை – (Black Money Jumla)

‘கறுப்புபணத்தை மீட்டெடுத்து, ஒவ்வோரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் ரூ. 15 லட்சம் சேர்த்திடுவேன் என்பது தான் தேர்தலின்போது நரேந்திர மோடியின் முதல் முழக்கம்.

தேர்தல் கால முன்னோட்டங்களில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கபட்டிருக்கும் கறுப்பு பணத்தின் பரிமாணம் கிட்டதட்ட ரூ. 85 லட்சம் கோடி இருக்கும் என BJP தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தது. இதை உறுதிப்படுத்துவது போல, 2014ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதியன்று, அன்றைய BJP தலைவராக இருந்த ராஜ்நாத்சிங் எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில் கறுப்புப்பணத்தை மீட்டெடுப்போம் என்று சபதமேற்றார். ‘கறுப்புபணத்தை வங்கிக்கணக்கில் வைத்திருப்போரின் பட்டியலை தன்னிடையே வைத்திருக்கும் காங்கிரஸ் அதனை வெளியிட மறுகிறது. அது தேசத்துரோகச் செயலாகும் என நரேந்திர மோடியும், ராஜ்நாத்சிங்கும், அருண்ஜேட்லியும் ஒரு சேரக் கூவிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்தப்பிறகு என்ன நடக்கிறது?

  1. 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதியன்று, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் ‘இரட்டை வரிவிதிப்பு தவிர்த்தல் ஒப்பந்தங்கள் (DTAA) இருப்பதால் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குவைத்திருப்போரின் பட்டியலே வெளியிட இயலாமல் இருக்கிறோம் என்று குறிப்பிட்;டிருக்கிறது.
  2. 2014ம் ஆண்டு அக்டோபர் 17ல் தாக்கல் செய்திட்ட மனுவில் கறுப்புபணம் வைத்திருப்போரின், பட்டியலே அரசு வெளியிட்டால், சர்வதேச அளவில் அமுல்படுத்தப்பட்டு வரும் ரகசியகாப்பு பிரமாணங்களை மீறிய செயலாகும் இதனால் உலக நாடுகளுக்கு இடையே இந்தியாவின் மதிப்பு மிகவும் குறைந்து விடும் என்று மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் ‘நீங்கள் என்ன குற்றம் செய்திட்ட இந்த நபர்களுக்கெல்லாம் பாதுகாவலர்களா?’ எனக் கேலி செய்திடும் அளவிற்கு இவர்களுது செயல்பாடுகள் இருக்கின்றன.
  3. 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘மன்கிபாத்’ எனும் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றிடும் பொழுது கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பதும் எனக்குத் தெரியாது. அதை என்னால் மதிப்பிடவும் முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
  4. BJPயின் தலைவர் அமித்ஷா 2015ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, ‘கறுப்புபணத்தைத் திருப்பிக் கேனர்வோம் எனம் BJPன் வாக்குறுதி என்பது வெறும் தேர்தல் காலத்து வாய்ஜாலமே என்று ஜகா வாங்கிறார்.

இப்பொழுது இவ்வாட்சியில் என்ன நடந்தேறி வருகிறது என்பதைப் பார்ப்போம்:

வெளிநாட்டில் பதுக்கின வைக்கப்பட்டிருக்கும் கறுப்புபணத்தை மீட்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றிட, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.

  1. மோடி அரசு பதவியேற்றபின், வெளிநாட்டிலிருந்து 1 ரூபாய் கூட வந்தபாடில்லை.
  2. ‘இரட்டை வரியிணை தவிர்திடும் ‘ஒப்பந்தம் (DTAA) ஒன்று கூட புதிதாக இந்த அரசு எந்த நாட்டுடனும் ஏற்படுத்திடவில்லை. ‘DTAA’ ஆனது கறுப்பு பணப்பரிமாற்றுவதை நிறுத்திடும் USA இதுபோன்ற DTA ஒப்பந்தகளை பயனபடுத்தி, பல தகவல்களை சேகரித்து, இத்தகவல்கள் மூலம், கறுப்புப்பணம் வைத்திருப்போரின் பெயர்களை வெளியிட்டது மல்லாமல், அதற்கு உதவின வங்கிகளிடமிருந்து அபராதக் தொகையையும் வசூலித்துள்ளது.

ஆனால் 2014ம் அக்டோபர் மாதம், அருண்ஜேட்லி ஏனைய நாடுகளுடன் DTAA இருப்பதனால், கறுப்புப்பண பட்டியலிலுள்ளோரின் பெயர்களை வெளியிட முடியாது. இதனால், புலனாய்வு விசாரணை பாதிக்கப்படும் என்று நேர்எதிhமாறாக கூறுகிறார்.

2015 மே மாதம் 1தேதி 22 வருமான வரித்துறை 121 புதிய குற்றசாட்டுடன் பதிவு செய்துள்ளது என்கிறார் ஜேட்லி, அவ்வாறாயின் பெயர்களை வெளியிடுவதற்கு ஏன் தாமதம்? எதிர்கட்சி வரிசையிலிந்த பொழுது இதே BJP தான் பெயர்கள் அடங்கிய அரசு பட்டியலை வெளியிட வேண்டும் என்று அடம் பிடித்தது.

இதனால் இப்பொழுது தங்களுக்கு வேண்டிய சில பெரிய மனிதர்களின், பெயர்களுக்கு பங்கம் வந்து விடும் என்பதால் தான் பெயர்களை வெளியிட மறுக்கிறது. இரட்டை வேடம் போடுவதில் வல்லவர்களான BJPயினர் கறுப்புபண விஷயத்திலும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

1 2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s