கடந்த ஒராண்டில் ‘மோடி’ அரசில் நிறைந்திருந்தவை

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்

தற்பெருமையுடன் கூடிய தம்பட்டங்கள்

சிதறடிக்கப்பட்ட கனவுகள்

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம்

  • ஆகியவை தான்.

பொதுத்தேர்தலின் பொழுது, வன்மைகள் நிறைந்த பரப்புரைகள் செய்தவர் மோடி. நாட்டு மக்களுக்கு பல நம்பமுடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

ஒராண்டுகள் கழிந்து விட்டன. அவ்வாக்குறுதிகளில் மிக முக்கியமானவற்றை, வெறும் அரசியலுக்காக கூறப்பட்ட வாய்ஜாலங்களே (Jumla) எனக் கருதிடும் அளவிற்கு தற்பொழுது பா.ஜ.கட்சியே வாக்குமூலங்களை அளித்து வருகிறது. தேர்தல் காலத்தில் தாங்கள் கொடுத்திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் எண்ணம் தனக்கு கிஞ்சித்தும் இல்லை என பா.ஜ.க.அரசே உணர்த்தி வருகிறது.

ஓராண்டுக்கு முன், குடியரசுத் தலைவர் மாளிகையின் முன்னாலிருக்கும் மிகப் பெரிதான திறந்த வெளியில், நரேந்திர மோடி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பின்னால், என்ன நடக்கப் போகிறது என்பதை மாபெரும் பதவியேற்பு விழாவில் நடந்த நிகழ்வுகளே தெளிவாக சுட்டிக் காட்டின. ஓராண்டு காலமாக ‘வெறும் ஜம்பமான தலைப்பு செய்திகளை’ பத்திரிகைகளில் வெளியிடுவதில் தான் கவனம் செய்துவருகிறதே தவிர வேறு எதையும் சாதிக்க வில்லை இந்த மோடி சர்க்கார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான UPA அரசின் மக்கள் நல சட்டங்களின் பட்டியல்கள் அனைத்தையும் முற்றிலுமாக மறைப்பது போன்ற சகலவிதமான தந்திரம் நிறைந்த தேர்தல் உபாயங்களையும், அஸ்திரங்களையும் பயன்படுத்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உதவியுடன், மோடி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். மறைமுகமான குத்தல் பேச்சுடன் கூடிய உள்நோக்கம் மற்றும் புளுகுமூட்டைகள் ஆகியவற்றை கொண்ட மோடியின் பரப்புரை பெரும் பணமூட்டைகளின் ஆதரவுடன், குடியரசு இந்தியாவின் வரலாற்றில் இதுவரை கண்டிராத, பணவிரயம் நிறைந்த ஒரு மாபெரும் தேர்தல் பரப்புரையை இருந்தது.

‘நல்ல நாட்கள் வந்திடும்’ என்று மோடியால் தம்பட்டமடிக்கப் பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குஇந்த அரசு என்ன செய்துள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த ஒரு வருடத்திய அரசு நடவடிக்கைகளே போதுமானது.

இந்திய விவசாயிகளுக்கு, மோடி அரசின் முதலாம் ஆண்டு ஆட்சி என்பது, ஓர் பெரும் துன்பத்தைத் தந்திடும் ஆட்சியாகும். இந்த ஆண்டில் விவசாயிகளின் தற்கொலை 26٪ அதிகமாகயுள்ளது என்பதே மோடி அரசு, விவசாயிகளின் நலன்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படவேயில்லை என்பதை காட்டுகிறது. நம்பிக்கையூட்டிடாத பருவ மாற்றங்கள், மழை பொய்த்தல், எதிர்பாராத வேளையில் ஆலங்கட்டி மழை ஆகியவற்றை எதிர் கொண்டிருக்கும் விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய ‘காலத்தால் செய்திடும் உதவி’ மற்றும் ஈட்டுத் தொகை மேலும் எதிர்காலத்தில் நம்பிக்கையூட்டிடும் நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த அரசு செய்திடும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், நரேந்திரமோடியே, வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, அங்கு நடந்திடும் நிகழ்ச்சிகளை தனக்கு சாதமாக பயன்படுத்துவது எப்படி என்று எண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார்.

தேர்தல் கால பரப்புரையின் போது, விவசாயிகளுக்கும் அவர்கள் விவசாயத்திற்காக செலவிடப் பட்ட தொகைக்கு மேல் 50٪ லாபம் கிடைத்திடுமாறு செய்வேன் என்று உறுதியளித்தார். விவசாயிகளும், சந்தை நிலவரப்படி, பயிர்களின் ஆதாரவிலை (MSP) அதிகமாக உயர்த்திக் கொடுக்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு கிடைத்ததோ நெற்பயிருக்கும், கோதுமை பயிருக்கும் 4٪ உயர்வும் மற்றும் பருத்திக்கு 1٪ உயர்வும் என்பது தான். கடந்த 38 ஆண்டுகளில் பயிர்களின் ஆதாரவிலையின் உயர்வு சதவீதம் என்பது இந்த ஆண்டில் தான் மிகவும் குறைவாக உள்ளது.

இதனால், சென்ற ஆண்டில் (2013-14), 4٪ என்றிருந்த விவசாய வளர்ச்சி, இந்த ஆண்டில் (2014-15), 1٪ என்றளவில் குறைந்து காட்சியளிக்கிறது.

விவசாயத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்திடுவதற்கான எந்த ஒரு திட்டமும் மோடி அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய மக்கள் தொகையில் 62.5٪ மக்களுக்கு ஆதாரமாக இருக்கும் இந்திய விவசாயத்துறைக்கு மீண்டும் புத்துயிர் அளித்திட்டால் தான், அதைச் சார்ந்திருக்கும் இந்திய பொருளாதாரமும், இந்திய மக்களின் நலனும் வளம் பெறும் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்பது தௌ;ளத் தெளிவாகத் தெரிகிறது.

‘அதிகமான வளர்ச்சியின் பயன்கள் அனைத்தும், அனைத்து மக்களுக்கே’ என்று மோடி சர்க்கார் வாக்குறுதியளித்திருந்தாலும், அந்த சுலோகமானது இப்பொழுது, ‘குறைவான வளர்ச்சி, அதன் பயனும் மிகச் சிலருக்கே’ என்ற அளவில் குறுகிப் போய்விட்டது.

குறிப்பிட்ட நெருங்கிய நண்பர்களாக இருக்கும், தொழிலதிபர்களை வளப்படுத்திட, அப்பாவி விவசாயிகளின் நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் அபகரித்திடவே, மோடி அரசு உறுதி பூண்டதாகத் தெரிகிறது. தேர்தல் காலத்தில் தொழிலதிபர்களான நண்பர்கள் செய்த உதவிக்கு இது கைம்மாறு போலத் தோன்றுகிறது.

மோடி அரசின் 2015 ஆம் வருடத்திய ‘நிலம் கையகப்படுத்திடும்’ அவசர சட்டம் என்பது, இந்திய விவசாய சமுதாயத்தின் உயிரைப் பறித்திடும் அவசர சட்டமாக உருவாகியுள்ளது.

நாட்டின் வளர்ச்சி பாதையில், நிலத்தின் சொந்தக்காரர்களான உழவனும் ஓர் நியாயமான பங்குதாரரதாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் காங்கிரஸ் கட்சி 2013 ஆம் ஆண்டு ‘நியாயமான ஈட்டுத் தொகையைப் பெற்றிடும் உரிமை தரும்’ சட்டத்தை இயற்றியுள்ளது. மோடி அரசோ, இச்சட்டத்தின் ஜீவனையும், ஆத்மாவையும் கொல்ல முயல்கிறது. பா.ஜ.கவோ, இந்த அவரச சட்டமானது, முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு தடைகளை நீக்கி, வேகமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற வாதத்தை முன் வைக்கிறது. இது ஓர் வடிகட்டின பொய்யாகும். ஏனெனில், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு, அதனால் முடங்கிக் கிடக்கும் திட்டங்கள், இதுவரை மொத்தத்தில் 8٪ தான். எனவே, இந்திய விவசாயிக்கும், சாதாரண மக்களுக்கும், ‘இது ஒரு சூட்-பூட் சர்க்கார்’ என்ற பேரூண்மை, நன்றாகவே புரிகிறது.

சமூக நலத்திட்டங்கள் அனைத்தும், மோடி அரசின் மூர்க்கமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. சமூகநிலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில், அசுரத்தனமாக, ரூ.1,75,000ஃ- கோடி குறைக்கப் பட்டுள்ளது. காலம் காலமாக மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் கடைபிடித்து வரும் சமூகநீதியைக் காத்திடும் வழிமுறைகளை, பொறுப்பற்ற முறையில் இந்த அரசு உதறித் தள்ளி வருகிறது. இத்தகைய உதாசீனம் குறுகிய காலங்களில் ஏழை எளியோரை பாதித்திடும் என்பதல்லாது இதன் நீண்ட காலத்தாக்கங்கள், இந்நாட்டு மக்கள் அவர்களது உண்மையான சக்திக் கேற்றவாறு, ஆளுமை உரிமைகள் பெற்றிட இந்த நாடு காலம் காலமாக எடுத்து வந்திருக்கும் முயற்சிகளுக்கு மிகுந்த கேட்டினை விளைவிக்கும்.

மோடி, தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்திய இளைஞன் ஒவ்வொருவருக்கம் வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக வாக்களித்தார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்களித்தார்.

ஆனால், அரசு தரும் புள்ளி விவரங்கள், சுட்டிக் காட்டுவதைப் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டில்தான் வேலை வாய்ப்பு உருவாக்குவது என்பது மிகவும் குறைந்த அளவில் உள்ளது என்று தெரியவருகிறது. தனது இலக்குகளை எவ்வாறு அடையப் போகிறது என்பதற்கு அரசு விளக்கம் தந்திடவேண்டும்.

இந்திய பொருளாதாரத்தில் ஓர் அதிசயம் நிகழப்போகிறது என்று இந்தியத் தொழில்துறையினர் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். கடந்த ஒரு வருடங்களாக, நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்து வருகிறது. அடிப்படை கட்டமைப்புத் துறைகளை சார்ந்து இருக்கும் தொழில்துறைகள், தங்களது வளர்ச்சியில், கடந்த 5 வருடங்களில் கண்டிராத அளவிற்கு, கடுமையான இறங்கு முகத்திலிருக்கின்றன. ஏற்றுமதி 11٪ இறங்கு முகத்தில் இருக்கிறது. கடன் வாங்குவதற்குரிய சமன் விகிதமும் குறைந்து விட்டது. தொழில் மற்றும் ஊரக துறைகளில் நிதி ஈட்டிடும் நம்பிக்கைக்கையும் குறைந்து காணப்படுகின்றது. விவசாய உற்பத்தியும், விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியும் மிகக் குறைவாகவே உள்ளன. இவ்வரசு ‘வரி பயங்கரவாதத்தை’ கையாள்கிறது என்று நேரடியாகவே குற்றம் சாட்டப்படுகிறது.

பேச்சுகளையும், கோஷங்களையும் தவிர்த்துவிட்டு, சரியான நேரத்தில் உரியவற்றை மோடி அரசு தந்திட வேண்டும் என்று தொழில்துறை தற்பொழுது குரலெழுப்ப ஆரம்பித்துள்ளது. கடந்த ஓராண்டில் மோடி அரசால் மிகவும் பாதிக்கப் பட்டது யாரென்றால், இந்திய நடுத்தர வர்க்கமே. விலைவாசியோ அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஆனால், வருவாயோ நத்தை வேகத்தில் ஊர்ந்து வருகிறது. பருப்புகளுக்கான ஆதாரவிலை 1-2٪ உயர்த்திட்ட போதிலும், கடந்த ஆண்டில் பருப்புக்களின் விலை 63٪ உயர்ந்துள்ளது. இதிலிருந்தே, சாதாரண மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தி, இடைத்தரகர்கள் எவ்வளவு கொள்ளையடிக்கின்றனர் என்பது நன்கு தெரிகிறது.

சாதாரண மனிதனை துன்பத்திலாழ்த்தி கொள்ளை லாபம் அடித்திடும் யுத்தியை, மோடி அரசு நன்றாகவே கையாண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்ததை விட, கச்சா எண்ணெயின் விலை, சர்வதேச அளவில் 40٪ குறைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், பெட்ரோல் விலையோ வெறும் 7٪ தான் குறைக்கப்பட்டிருக்கிறது. 2014-15 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீஸல் மீது வரி விதிப்பின் மூலம் சென்ற ஆண்டை விட ரூ 75,000/- கோடி மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருக்கிறது. (இந்த அரசு செய்திட்ட தவறுக்காக சாதாரண மனிதன் விலை கொடுக்க நேர்ந்திருக்கிறது).

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இப்பொழுது கூறுகிறார், ‘நடுத்தர மக்கள் தங்களைத் தாமே சரி செய்து கொள்ளவேண்டும்’ என்று. இப்பொழுது தான் நடுத்தர மக்களும், தங்களைப் பாதித்திடும் அவலங்கள் இன்னும் என்னென்ன இந்த அரசிடம் காத்திருக்கிறதோ என்று பயம் கலந்த உணர்வுடன் நிம்மதியற்று இருக்கிறார்கள்.

‘கறுப்புப் பணத்தை திரும்பிக் கொண்டு வந்துவிடுவோம்’ என்பதுதான் பாஜக வின் பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாகும். ‘வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைத்திருக்கப்படும் கறுப்புப் பணத்தின் பரிமாணம் எவ்வாறு இருக்குமெனில், இந்தியாவிற்கு திரும்பி எடுத்து வரும் பொழுது, ஒவ்வொரு குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சம் செலுத்தும் அளவில் இருந்திடும். அதை நாங்கள் கட்டாயம் செய்து முடிப்போம்’ என்று தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிடும் பொழுது உறுதியளித்தார்.

ஓராண்டு கழிந்த பின், இந்திய மக்கள் இது பற்றிய கேள்விகளை எழுப்ப ஆரம்பிததுள்ளன. பாஜக தலைவர் அமித் ஷா, ‘ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வங்கியில் ரூ 15 லட்சம் செலுத்துவோம் எனும் வாக்குறுதி என்பது, தேர்தல் காலங்களில் கட்சிகளால் கூறப்படும் பசப்பு மொழி தான்’ என்று அதை ஒதுக்கித் தள்ள முயலுகின்றார். ஆனால், நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, ‘வெளிநாடுகளில் எவ்வளவு கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது இந்த அரசுக்குத் தெரியாது. அதை திருப்பிக் கொணர்வதற்கு காலக்கெடு எதுவும் உறுதியாகக் கொடுக்க முடியாது’ என்று தனது பேச்சை பதிவு செய்திருக்கிறார். இந்த பொய் வாக்குறுதியால் தங்கள் மீது வந்து விழும் விமர்சனங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவே, ‘கறுப்புப் பணம் மசோதவை’ இந்த அரசு கொணர்ந்திருக்கிறது.

சில சம்பவங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ‘நிகழ்ச்சி மூலம் தனக்குத் தானே விளம்பரத்தைத் தேடிக்கும் திறமையினை வெளிப்படுத்துகின்றன.

இதில் ‘ஜன்தன்’ என்ற திட்டமானது, மோடி அரசின் மாபெரும் வெற்றியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இது தனது அரசின் மாபெரும் சாதனையாகும் என்று அரசியல் வியாபாரம் செய்ய முனைகிறார் மோடி.

இந்த ‘ஜன்தன்’ திட்டமானது, முந்தைய UPA அரசின் ‘மக்கள் அனைவரையும் நாட்டின் நிதி திட்டத்தில் இணைத்திடும் திட்டத்தின்’ மறுபதிப்பே.

இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிந்து கொண்டாலே, மோடி எவ்வாறு செயல்பட்டு வருகிறார் என்பது தெளிவாக தெரிந்து விடும்.

‘ஜன்தன்’ திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் இருப்பை விட அதிகமாகவே எடுத்துக் கொள்ளும் வசதியை (Overdraft) வெறும் 8000 பேரே பயன்படுத்தியுள்ளனர். இத்திட்டத்திலுள்ள ‘விபத்துக் காப்பீடு’ வசதியை 108 பேரும், ‘வாழ்வு காப்பீட்டு வசதியை’ 152 பேரும் மட்டுமே பெற்றுள்ளனர்.

இத்திட்டதின் கீழ், அரசு துவங்கியிருக்கும், 14 கோடி வங்கிக் கணக்கில் 75٪ கணக்குகள் இது வரை 0 Balanceல் தான் இருக்கிறது. இதைத் தான் பாஜக வினர் பெரிய சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

தான் மிகவும் திறமைசாலி என்று மோடி சிலாகித்துக் கொள்கிறார். ஆனால், பத்திரிகைகளில் வந்திடும் செய்திகளின் படி, 6000 க்கும் அதிமாக கோப்புகள் ‘பிரதமர் அலுவலகத்தில்’ தேங்கிக் கிடக்கின்றன என்று தெரியவருகிறது. தான் ஓர் ‘தீர்க்கத்தரிசி’ என்று உலக நாடுகளிடையே சொல்லி வருகிறார். NITI நிதி ஆயோக் போன்ற ஸ்தாபனங்கள், தாங்கள் முதலில் எக்காரணத்திற்காக உருவாக்கப் பட்டிருக்கிறோம் என்பது தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அதே சமயம், உருப்படியான, திட்டக் கமிஷனானது மோடியின் ஆணையின் பேரில் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக அளித்திட்ட வாக்குறுதி என்பது ‘வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவது’ என்பதாகும். ஆனால், அரசியல் சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட அரசு நிறுவனங்களை அவமரியாதை செய்வதே NDA அரசின் நோக்கமாகும். அரசியல் சட்டப்படி உருவாக்கம் பெற்ற முக்கிய அத்தியாவசியமான நிறுவனங்களான, ‘மத்திய தகவல் ஆணையம்;’, மத்திய கண்காணிப்பு ஆணையம், மத்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றிலுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு, அநாவசியமான தாமதம் தெரிகிறது. இவையெல்லாம், மோடி அரசு, தன்னகத்தே அதிகாரங்கள் அனைத்தையும் குவித்து வைத்துக் கொண்டிருப்பதையும், அரசை யாரு கேள்விகள் கேட்டிட முடியாது என்பதையுமே காட்டுகின்றன.

அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட முக்கியமான பதவிகளை நிரப்பிடமால், காலியாகவே வைத்திருப்பது என்பது இந்த அரசின் வாடிக்கையாகவே இருக்கிறது. அது மட்டுமின்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு தவறான வழிமுறைகளை கையாள்வது, சுயாட்சி பெற்ற ஸ்தாபனங்களு;கு நிதிநெருக்கடிகளை ஏற்படுத்துவது போன்ற முறையற்ற செயல்களிலும் இவ்வரசு இறங்கி வருகிறது. இவற்றை யெல்லாம் பார்த்தால், மோடி அரசானது, எந்தவிதமான கண்காணிப்புக்கும் அஞ்சாமல், சாதாரண இந்தியர்களை பாதித்திடும் வகையில், தனது தொழிலதிபர் நண்பர்களுக்கு ஆதரவாகவே செயல்படுத்தி வருகிறது என்பது மிகவும் தெளிவாகிறது.

புளுகு மூட்டைகள், தவறான ஆளுமை மற்றும் நொறுங்கிப் போன வாக்குறுதிகள் ஆகியவற்றினையே கடந்த 365 நாட்களாக நாம் கண்டு வருகிறோம். இதையெல்லாம் மனதில் வைத்து பாஜக தலைமையில் இயங்கிடும் NDA அரசின் முதல் ஆண்டினை ‘ஒரு வருடம்-தேசம் நாசம்’ என்று தொகுத்துக் கூறிடலாம்.

இந்த தொகுப்புரையின், முக்கிய நோக்கமானது, மோடி அரசின் மட்டமான ஆட்சி முறையின் அவலங்களை வெளிக்கொணர்வதுதான். புளுகு மூட்டைகளையும், பொய்யான வாக்குறுதிகளையும் மறைத்திருக்கும் முகமூடியினை கிழித்தெறிவது தான் இத்தொகுப்புரையின் முக்கியப் பணி.

அத்தியாவசிய துறைகளில், தனது முதலாண்டில், பாஜக தலைமையிலான NDA அரசின் செயல்பாடுகளை, தோண்டியெடுத்து அலசுகிறது இத்தொகுப்புகள். துறைவாரியாக அலசி எடுத்த ஆய்வின் முடிவில், மோடி சர்க்கார் கூறிவந்த ‘நல்ல நாட்கள் வந்திடும்’ எனும் வாக்குறுதியானது வெறும் கானல் நீராகவே காட்சி அளிக்கிறது. மக்களை இந்த அரசு ஏமாற்றி வருகிறது. நாட்டை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது

.1 ek-saal-desh-badhaal-5-638 ek-saal-desh-badhaal-6-638

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s