ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் One Rank – One Pension (OROP)

ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் One Rank – One Pension (OROP) இத்திட்டத்திற்கு 26.2.2014 அன்றே காங்கிரஸ் அரசு அனுமதி கொடுத்து விட்டது. அது மட்டுமல்லாது அதை 1.4.2014 முதல் செயல்படுத்திட வேண்டும் என்றும் தீர்மானித்தது. தனது இந்த ஆணையால் காங்கிரஸ் அரசு 30 லட்சம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பின்னாட்களில் இதுபோன்று ஒரு பதவி வரிசையிலிருந்து ஓய்வு பெரும் பல ராணுவத்தினர் ஆகியோரின் வாழ்வில் ஒளியேற்றியிருந்தது.

பிஜேபியும் தேர்தல் காலங்களில், காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு செயல்படுத்துவோம் என உறுதியளித்தது. ஆனால், பதவியேற்று ஓராண்டிற்குப் முன்னாள் ராணுவத்திற்கு காங்கிரஸ் அரசால் அளிக்கப்பட்ட இந்தச் சலுகை முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டது. இந்த நடவடிக்கையால், அரசியல் ரீதியாக தனது கட்சிக்கு எந்தப் பலனும் இருந்திடாது என்பதால், நிதியமைச்சர் இத்திட்டத்திற்கு மேற்கொண்டு ஊக்கம் அளித்திடவில்லை.

ஏமாந்து போன முன்னாள் ராணுவத்தினர் இன்று தெருவீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். பாஜகவினர் இரட்டை நாக்கு படைத்தவர்கள் என்பதை இவர்கள் நன்கு அறிந்து கொண்டு விட்டனர்.

அந்நிய முதலீட்டினை வரவேற்பதற்காக, ஓர் அபாயகரமான முனைப்பு

அந்நிய முதலீடுகளின் பின்னால், நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது, ஏதேனும் உள்ளதா என்றறியும் பரிசோதனைகள், நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பாதுகாப்பு எனும் பீடத்தில், எச்சரிக்கைகளை தவிர்த்துவிட்டு, அந்நிய முதலீடுகளை புகுத்திட விழைகின்றார் பிரதமர் நரேந்திர மோடி.

காங்கிரஸ் அரசாட்சியின் போதும், பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடுகள் வரவேற்கப்பட்டன. ஆனால், அவ்வாறு செய்யப்படும் முதலீடுகளில், அந்நிய உளவுத்துறையினருடைய பங்கீடு உள்ளனவா, தவறாக வழிமுறைகள் உள்ளனவா என்பதை IB, RAW போன்ற நாட்டின் உயர்பாதுகாப்பு நிறுவனங்கள் சோதனை செய்த பின் அனுமதியளித்திட்டால் தான், அந்நிய முதலீடுகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் இருந்தன.

நாட்டின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த மிக முக்கியமான நிலைப்பாடுகள், பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையூராக அமைய நேரிடலாம் என்ற ஒரே காரணத்திற்காக அறவே நீக்கப்பட்டிருக்கிறது.

எல்லைகளில் கணக்கில் அடங்காமல் அத்துமீறல்கள் நடப்பதை மோடி அரசு வெறும் பார்வையாளராகவே இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எல்லைக் கோட்டு பகுதிகளில் 746 முறை, பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுயிருக்கிறது. இதை முந்தைய 2013 ஆண்டில் வெறும் 96 முறை அத்துமீறல்கள் தான் நடந்தேயிருக்கிறது.

பிரதமரின் விஷத்தைக் கக்கிடும் வார்த்தைகளான ‘தேஷ்நவிரி ஜீக்னோ’ மற்றும் ’56 இஞ்ச் நெஞ்சு’ ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பாஜக ஆட்சிகாலத்தில் எல்லைப் பாதுகாப்பு பலவீனமாக இருக்கிறது என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து நீங்கள் நியாயமான முடிவுக்கு வந்திடலாம். இன்னமும் கூறினால்,

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பின், பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான் ஊடுருவல்கள் மிகவும் உச்சததை எட்டியுள்ளன என்பதை பிஎஸ்எப்- டைரக்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுடன் கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் ‘சேலை-துப்பட்டா’ பரிமாறல்கள், பாகிஸ்தானுக்கு வெளியுறவுத் துறை செயலர் செல்லக்கூடாது என்று முதலில் கூறுவது பிறகு அவரை பாகிஸ்தானுக்கு அனுப்புவது, சர்வதேச தீவிரவாதியும், பாகிஸ்தான் தீவிர அமைப்பான ஜமாத் உத் தவா தலைவருமாகிய ஹபீஸ்ஸையதின் விடுதலை, பாராளுனமன்றத்திலே இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இல்லை’ என்று கூறி, பாகிஸ்தானின் நிலைப்பாட்டினையே உறுதிப்படுத்திடுவது, காஷ்மீர் பிரிவினை வாதி மஸ்ரத் ஆலம் என்பவரை முதலில் சிறையிலிருந்து விடுதலை செய்வது, பின் மக்கள் கொதித்து எழுந்தபின், மீண்டும் அவரை சிறையிலடைப்பது, ‘ஜம்மு-காஷ்மீரிலே அமைதியாக தேர்தல்கள் நடந்து முடிந்ததென்றால் அதற்கு பாகிஸ்தானும், எல்லைப்புறத்திலிருக்கும் தீவிரவாதிகளும் தான் காரணம்’ என்று கூறுவது.

இது போன்ற மோடி அரசின் பலவீனமான செயல்பாடுகள் தான் தேசிய பாதுகாப்பினை கேலிக்குரியதாக்கியிருக்கிறது.

1 2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s