தமிழக மீனவர்கள் பிரச்சினை – என்னதான் தீர்வு ?

தமிழக மீனவர்கள் கடல் எல்லைய தாண்டி சிங்கள பகுதிகளுக்கு தங்களது விசைப் படகுகளுடன் சென்று மீன் பிடிக்கிறார்கள். இதனால் யாழ், கிளிநொச்சி, மன்னார் ஆகிய கடலோரப் பகுதிகளிலுள்ள மீன்வளம் அழிந்து வருகிறது. எனவே அவர்களது விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 87 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டு இலங்கை கப்பற்படையின் பொறுப்பிலேயே உள்ளன.

இதற்கு முன் UPA அரசாட்சியிலும் இதுபோன்று விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் என்ற கால அளவில் தமிழக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளுடன் விடுதலை செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.

பா.ஜ.க. அரசு மத்தியில் பதவியேற்ற பின்பு தமிழக மீனவர்களின் படகுகள் இதுபோன்று சிறைப் பிடிக்கப்படுகின்றன. மீனவர்களும் ஓரிரு வாரங்களில் விடுதலை செய்யப்படுகிறார்களே தவிர, சிங்கள கடற்படை அவர்களது 87 விசைப்படகுகளையும் தங்கள் வசமே வைத்துள்ளது.

81

இதனால் தமிழக மீனவர்கள், குறிப்பாக ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு விட்டதே என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

இந்த நிலைக்கு ஏன் தமிழக மீனவர்கள் தள்ளப்படுகிறார்கள் ?

இதுபற்றி ஈழப் பகுதியின் மீனவள ஆராய்ச்சியாளரும், யாழ் பல்கலைக் கழக புவியியல் பேராசிரியருமான சூசை ஆனந்தன் கூறுகிறார். ‘போர்ச் சூழல் இருந்தபோது, ஈழப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் தொழில் மிகவும் நலிந்திருந்தது. கட்டுப்பாடுகளுக்கு பிறகு இப்பொழுது தான் (போர் முடிந்த பிறகு) ஈழப் பகுதி மீனவர்கள் மீண்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நைலான் வலையைத் தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தமிழக மீனவர்களோ, ட்ராலர், விசைப்படகு மற்றும் இழுவை மடிவலையைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முறையானது கடலுக்கடியில் நிலத்தோடு இழுத்துக் கொண்டு அடித்தளத்திலிருக்கும் சின்னஞ்சிறு மின் குஞ்சுகளையும் அள்ளிச் சென்று மீன்வளத்தை வேகமாக அழிக்கக் கூடியது. இதனால் இந்த இழுவை மடிவலையை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆனால் இந்திய தமிழக மீனவர்கள் இழுவை மடிவலையுடன், ட்ராலர் படகுகளின் மூலமாகத் தான் எங்கள் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கிறார்கள். இதனால் வடபகுதியிலுள்ள மூன்று லட்சம் பேர்களின் (ஈழத் தமிழர்கள்) ஒரே வாழ்வாதாரமான மீன்வளம் அதிவேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. அண்மைக் காலமா ஈழத்து மக்களே அனுமதிக்கப்படாத முல்லைத் தீவு கடல் பிரதேசம் வரைக்கும் தமிழக மீனவர்கள் வந்து எங்களது மீன் வளததை அள்ளிச் செல்கின்றனர். முன்பை விட எங்களின் மீன்வள அழிவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இருதரப்பு மீனவர்கள் கலந்து பேசியும் இது நிறுத்தப்படவில்லை. இதேநிலை தொடர்;ந்தால் 5 ஆண்டுகளில் வடக்கு இலங்கையின் மீன்வளமே பாதியாகி விடும். 10 ஆண்டுகளில் மொத்த வளமும் அழிந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க இருதரப்பு மீனவர்களும் இருதரப்பு கடலிலும் மீன்பிடிக்கலாம் என்பது எந்த வகையில் நியாயம் ?

இது நடைமுறைக்கு சாத்தியமானதும் இல்லை. மற்றபடி நாங்கள் தமிழக மீனவ சகோதரர்களின் நலனுக்கு எந்த வகையிலும் எதிரானவர்கள் அல்ல. இழுவை மடி வலை, டிராலர் படகுகளைத் தவிர்த்து எந்த முறையிலும் தமிழக மீனவர்கள் இங்கு மீன்பிடிக்க உடன்பாடு செய்யலாம். இதில் இருநாட்டு அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று முடித்தார் பேராசிரியர் சூசை. (ஜூனியர் விகடன் – 1.2.2012)

இதிலிருந்து தெரிவது என்ன ?

  1. தமிழக மீனவர்கள், குறிப்பாக ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், காரைக்கால் பகுதியிலுள்ளவர்கள் டிராலர், விசைப்படகு, இழுவை மடிவலை ஆகியவற்றை காலம் காலமாக பயன்படுத்தி தங்கள் பகுதியிலுள்ள மீன் வளத்தை அறவே அழித்து விட்டனர். கச்சத்தீவு பகுதிகளிலும் இதுதான் நிலைமை.
  2. எனவேதான், தமிழக மீனவர்கள் ஈழக் கடல் பகுதிகளுக்குச் சென்று, மீன்பிடிக்கிறர்கள் என்பதுதான் உண்மை. இதை தமிழ் தேசியம் பேசுபவர்களும், பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் வெளிப்படையாக சொல்வதில்லை. உண்மையை மறைத்து பேசுகிறார்கள்.
  3. ஈழத் தமிழ் மீனவர்களும், தமிழக மீனவர்கள் யாழ் பகுதிகளுக்கு வந்து மீன்பிடித்துச் செல்லலாம் என்றே கூறுகின்றனர். கடல் எல்லைக் கோடோ, கச்சத்தீவோ தடையே இல்லை.
  4. ஆனால் தமிழக மீனவர்கள் டிராலரையோ, விசைப் படகுகளையோ, இழுவை மடி வலைகளையோ பயன்படுத்தக் கூடாது என்பதில் ஈழத் தமிழ் மீனவர்கள் மிகவும் உறுதியாக உள்ளனர்.

ஆனால் தமிழகத்திலுள்ள டிராலர், விசைப்படகு மற்றும் இழுவை மடி வலை வைத்திருப்பவர்கள் உண்மையில் மீன் வியாபாரிகளே. இவர்களுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய டன் கணக்கில் மீன்கள் வேண்டும். எனவேதான் டிராலர் மற்றும் இழுவை மடி வலைகளை பயன்படுத்துவதிலேயே மிகவும் குறியாக உள்ளனர். அது இனி நடக்காது. மீறிச் சென்றால் தங்களது படகுகளை பறிகொடுக்க வேண்டியிருக்கும்.

ஈழத் தமிழர்களின் வாதத்திலுள்ள உண்மையை ஏற்று, தமிழக அரசும் பிடிவாதம் பிடித்திடாமல், தமிழக மீனவர்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடித்தல் தான் சரியான தீர்வாகம் என முடிவு செய்து 2013-14 ஆண்டு பட்ஜெட்டி; ‘ஆழ்கடல் மீன்பிடி’ மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது. மீனவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

கரையோரப் பகுதிகளில் மீன்பிடிக்காமல் தண்ணீர் மட்டத்திற்கும், கடலின் ஆழத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நீண்டதூரம் நைலான் கயிறுகட்டி, தூண்டில்கள் மூலம் பிடிக்கும் நடைமுறை தான் ஆழ்கடல் மீன்பிடி தொழில் எனப்படுகிறது. இதில் வலைகள் இல்லை. சிறிய மீன்கள் பிடிபடாது என்பதால் இனவிருத்தி பாதிக்கப்படாது என்பதோடு, இயற்கை வளங்களுக்கும் சேதம் ஏற்படாது.

இப்போது பா.ஜ.க. அரசும், மீனவர் சமுதாய பிரதிநிதியுமான எழுத்தாளர் ஜோ.டி. குரூசை அணுகி அவரிடம், நிரந்தர தீர்வுக்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டபொழுது ‘ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்பாடு செய்வதுதான் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்’ என்று கூறினார்.

தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகனாரும் கூறுகிறார். ‘கச்சத்தீவு என்பது தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கான அரசியல் களம். கச்சத்தீவை மீட்டால் மட்டுமே மீனவர் பிரச்சினை தீரப்போவதில்லை. ஆழ்கடல் மீன்பிடித்தல் தான் தீர்வு. அதன்பின் கச்சத்தீவு பிரச்சினை தானாக தீர்ந்துவிடும்’ என்கிறார்.

அப்படியானால் ஆழ்கடலுக்குள் செல்வது எப்படி ?

ராமேஸ்வரம் கடலோர விசைப்படகு மீனவர் நலச் சங்கத்தின் ஆலோசகர் தேவதாஸ் இதுபற்றி பேசும்பொழுது, ‘ஆழ்கடல் மீன்பிடிப்பை செயல்படுத்த வேண்டுமானால் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையிலுள்ள மணல் திட்டுக்களை தோண்டி எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் சங்பரிவாரங்கள் சுட்டிக்காட்டி வரும் ‘ராமர் பாலமாகும்’ இதை மத்திய பா.ஜ.க. அரசு தோண்டி எடுத்திடுமா ? நல்லதோர் முடிவு எடுக்கட்டும்.

14177-page-001 14177-page-002 14177-page-003 14177-page-004 14177-page-005 14177-page-006 14177-page-007 14177-page-008 14177-page-009 14177-page-010 14177-page-011 14177-page-012 14177-page-013 14177-page-014 14177-page-015 14177-page-016

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s