தமிழகத்தில் ‘மின்பற்றாக்குறை’

2011ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக பதவியேற்ற செல்வி. ஜெயலலிதா ‘2013ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை மின் உற்பத்தியில் ‘தன்னிறைவு’ பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்’ என சூளுரைத்தார்.

எனினும் 2015ஆம் ஆண்டுதான் ‘தன்னிறைவு’என்ற நிலையைத் தமிழ்நாடு அடைந்துள்ளதாகக் கூறுவது ஒரு மாயத் தோற்றமே.

உண்மையில் இன்றும் 3000 மெகா வாட் அளவிற்கு, செயற்கையான பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது (இதுபற்றிய விளக்கம் கட்டுரையின் பின்வரும் பகுதிகளில் உள்ளது) இந்த பற்றாக்குறையை சரி செய்திடுவதற்காக, தனியார் மின் உற்பத்தி நிலையைங்ககளிடமிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் தமிழக மின்வாரியம், அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாகை விநியோகம் செய்கிறது.

இதனால் பாதிக்கபடும் மின்வாரியத்தின் ‘நிதிநிலை’யைச் சரி செய்திடுவதற்காக தமிழக மின் ஒழுங்குமுறை வாரியம் (TNREC) அவ்வப்போது மின் கட்டணத்தை உயர்த்துகிறது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் உண்மை நிலையை தெளிவுபடுத்திடும் (2011, 2013, 2014)

Power000

இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இவ்வாறு தொடர்ந்து கட்டணங்களை உயர்த்திட்டபோதிலும் தமிழக மின் வாரியம் இன்னமும் ரூ. 1,00,000/- கோடி கடனில் முழ்கியிறுக்கிறது. இச்சுமை அனைத்தும் பொதுமக்கள் தலைமையில்தான் சுமத்தபடபோகின்றது. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு, என்னதான் ஆண்டுதோறும் தமிழகத்தில் மின் உற்பத்தித்திறன் அதிகரித்திருக்கிறது என்று கூறிக் கொண்டாலும்; மின்பற்றாக்குறை, என்பது சென்ற பல ஆண்டுகளாகத் தொடர்கதையாக இருப்பது ஏன்?

இவ்வளவிற்கும், தமிழகத்தில் சமீபகாலங்களாக, அதாவது செல்வி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் பெரிய தொழிற்சாலைகள் எதுவும், புதிதாகக் துவங்கபடவில்லையே!

மேலும், ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்; தொழிற்சாலைகளில் கூட பல, மின்கட்டண உயர்வு காரணமாகவும், அறிவிக்கப்படாத மின் வெட்டுகளின் தொல்லை காராணமாகவும் வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்து கொண்டிருக்கின்றனவே!

மின்சாரத்தை நம்பி, தொழில் செய்பவர்கள், ஏதோ சூனியத்தில் சிக்கிக் கொண்டதைப் போலவும், அதிலிருந்து எப்படித்தப்பிப்பது எனத் தெரியாமலும் நொந்து கிடக்கிறார்கள்.

இருந்தும் இல்லாத நிலை

தமிழகத்தில் தொடர்ந்து செயற்கை மின்பற்றாக்குறை இருப்பதற்கு கீழ்கண்ட காரணங்ளே மிகவும் முக்கியமாகும்.

 1. புதிய மின நிலையங்களை நிறுவுவதில் ஏற்படும் தாமதம்
 2. பயனப்படுத்தபடும் மின் தடங்களை, சரிவரப் பராமரிக்காமல் இருப்பது.
 3. மின் திருட்டுகள் பெருமளவில் நடப்பது.

Power001

Power002

Power003

இந்தப்பற்றாக்குறையை சரி செய்திட முடியாதா?

ஏன் முடியாது நிச்சயம் செய்திட முடியும்

அதற்கு கீழ்கண்ட நடவடிக்கைளை எடுத்திட வேண்டும்.

 1. புதிய மின் நிலையங்களை நிறுவுவதற்கான தாமதத்தை குறைத்திட வேண்டும்.
 2. மின் தடங்களை நன்கு பராமரித்திட வேண்டும்
 3. மின் திருட்டுகளை தடுத்திட வேண்டும்
 4. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரித்திட வேண்டும்
 5. காற்றாலைகளிலிருந்து மின்சக்தியை வெளிக் கொணர்ந்திடுவதற்குரிய கட்டமைப்புகளை விரைவில் அமைத்திட வேண்டும்
 6. அவ்வப்போது திடீரென்று மின்நிலையங்களின் செயல்பாடுகளை திடீரென்று நிறுத்துவதை தடுத்திட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை எடுத்திட முடியாதா?

நியாயமான ஆட்சியாளர்களாகவும், நேர்மைய அதிகாரிகளாக இருந்தால் இது நிச்சயம் முடியும். ஆனால் திராவிடக் கட்சி ஆட்சியாளர்களுக்கு பிறரிடமிருந்து மின்சாரம் வாங்குவது என்பது, மதுபான விற்பனையைப் போல, இது ஓர் அள்ளிக்கொடுக்கும் அட்சயபாத்திரமாகும். எனவே எடுத்திட வேண்டுய நடவடிக்கைகளை எடுத்திட நிச்சயம் முன்வருவதில்லை என்பதே பல ஆண்டுகளாக நடந்துவரும் காட்சிகளாகும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்’ தமிழக மின் வாரியம், கூடங்குளம் அணுமின் நிலையம், மற்றும் நெய்வேலி அனல் மின் நிலையம் ஆகியவற்றிலிருந்து ஒரு யூனிட் ரூ. 3/- என்ற விலையில் கிடைத்திடும்பொழுது தனியார் நிறுவனகளிலிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ. 15 அல்லது ரூ. 17 வரை வலை கொடுத்து வாங்குவதேன்? இங்குதான் ஆட்சியாளர்கள் தாங்கள் ஆதாயம் பெறுவதற்கென்றே தவறு செய்வது போல தோன்றுகிறது. இதனால் தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பும் ஏற்படுகிறது’ என்று சுட்டிக்காட்டுகிறார். இது சம்பந்தமாக, பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. முன்னாள் மின்வாரிய ஊழியர் C. செல்வராஜ் ‘பல மின் வாரிய அதிகாரிகள், தங்களது நெடுநாளைய ஆளுமைகாலத்தில், புதிதாக மின் நிலையங்ளை உருவாகுவதிலும் ஏற்கனவே நிறைவு அடைந்திட்ட மின் நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதிலும், தாமதத்தை ஏற்படுத்தி செயற்கையாக பற்றாக்குறை நிலையை உண்டாக்கி வருகிறார்கள். இதன்பின், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிகமான விலைக்கு மின்சாரத்தை வாங்கி, மின்வாரியத்திற்கு ரூ. 1,00,000 கோடியளவிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். முன்னாள் CAG, விநோத்ராய் போன்றோர் அடக்கிய சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) ஒன்றை உருவாக்கி இந்த ரூ. 1,00,000 கோடி ஊழலை கண்காணித்திட வேண்டும்’ என தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே திராவிட கட்சிகளின் ஆட்சி தொடர்ந்து கொண்டேயிருந்தால், மின்பற்றாக்குறையில் மாற்றமும் வந்திடாது, கொள்ளையடிப்பதும் தொடரும் என்பது நிதர்சனமானா உண்மை.

தமிழ்நாட்டில் புதிதாக திட்டமிடப்பட்ட மின்நிலையங்கள்யாவை?

அவையாவது, திட்டமிட்டப்படி செயல்படக் துவங்கிடுமா?

கீழ்கண்ட புது மின் நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

Power004

இவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறிடுமா?

இவற்றில் உடன்குடி மின் நிலையத் திட்டத்தில் உள்ள ‘முன்னேற்றத்தை’ குறிப்பட்டாலே, மற்ற திட்டங்களின் நிலைகளும் நன்கு விளங்கிடும் கருணாநிதி அறிவித்த திட்டம் என்பதற்காக உடன்குடி மின்திட்டத்தின் மூச்சை முடிந்தவரை அடக்கிவிட்டார்கள். முந்தைய தி.மு.க ஆட்சியில் தயாரிக்கப்பட்ட உடன்குடி மின் திட்டத்தை நிறை வேற்றிட ‘பெல்’ நிறுவனத்துடன் மேற்கெண்ட ஒப்பந்தத்தை முதலில் ரத்து செய்தார் ஜெயலலிதா. பின்னர் 2013ம் ஆண்டு ஏப்ரலில் உடன்குடி திட்டத்திற்கு என புது டென்டர் விட்டது தமிழக அரசு மத்திய அரசின் ‘பெல்’ நிறுவனமும் ‘பவர்மேக்’ என்ற வெளிநாட்டு நிறுவனமும் இணைந்து ‘டென்டர்’ செய்தன. சீன அரசு நிறுவனமும், ‘FKS‘ என்ற இந்திய நிறுவனமும் இணைந்து மற்றுமொரு டெண்டர் தாக்கல் செய்தன. இந்த இரண்டு டெண்டர்களில் எது திட்டத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் என முடிவெடுத்து, அந்த நிறுவனங்களுக்கு வேலையைக் கொடுத்திருந்தால் இரண்டு ஆண்டு காலத்தில் மின் உற்பத்தியை தொட்டிருக்கலாம். ஆனால் இதை டெண்டர்களைப் பற்றியே கவலைப்படாமல் வேறு விஷயங்களே எதிர்பார்த்து காத்திருந்நதின் விளைவும், அது பூர்த்தி செய்யப்படாததால் (அதாவது கமிஷனை எதிர்பார்த்து ஏமாந்து போனதினால்) ஏற்பட்ட விரக்தியும் சேர்த்து 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி ஒரு டெண்டர் ரத்து செய்யப்பட்ட வேண்டிய நிலைக்கு வந்தது. மற்றொரு டெண்டரும் ‘கோமா’ நிலையில் இரண்டு வருடங்கள் கிடந்த பின்பு ரத்து செய்யப்பட்டது. இது பல சந்தேகங்களே கிளப்பியுள்ளது.

ஓப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக சீன நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆ. சத்யநாராயணா ‘அரசாங்கம் என்பது நேர்மையாகவும், பாரபட்சமில்லாமலும் நடந்து கொள்ள வேண்டும். இவற்றிக்கு எதிராக நடந்து கொள்வது என்பது அரசியல் அமைப்பின் 14வது பிரிவு சுட்டிகாட்டும் சம உரிமை என்ற கருதுக்கு எதிரானது’ என தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

மிகவும் தடபுடலுடன் ஆரம்பித்த உடன்குடி மின்திட்டதிற்கே இந்த கதியென்றால் மற்ற திட்டத்திற்கெல்லாம் விடிவுகாலம் எப்பொழுதோ?

எரிசக்தி திட்டங்களான இவற்றின் நலைகள்தான் இப்படிறென்றால், மரபுசாரா எரிசக்தி திட்டங்களின் நிலை எவ்வாறு இருக்கின்றன?

இதற்கு உதாரணமாக ராமநாதபுரத்தில், சூரிய சக்தியின் மூலம் மின்சக்தி தயாரித்திடும் திட்டத்தை எடுத்துக்கொள்வோம்.

தனியாரிடம் வாங்கி மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் அதில் தவறு இல்லை. ஆனால் என்ன விலைக்கு வாங்குகிறார்கள.; ஏன் அவ்வாறு வாங்குகிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.

ராமநாதபுரம் சூரியசக்தி மின்திட்டதை நிறுவப் போகிறவர் அதானி. இந்த அதானியிடம்தான் மின்சாரத்தை கொள்முதல் செய்யபோகிறது தமிழக அரசு.

மோடி மூலம் இந்தியாவை உய்விக்க வந்திருப்பதாகக் கருதப்படுபவர் அதானி. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்க தமிழ்நாட்டுக்கு வந்து சூரிய மின்சாரம் தயாரித்து வழங்க அவர் முன்வந்திருப்பது, உண்மையிலேயே நாம் செய்த பாக்கியம். ஆதானி நிறுவனம் வழங்கப்போகும் ஒரு யூனிட் மின்சாரத்துக்காக அவர்களுக்கு 7.01 தரப்படுகிறது. ஆனால் இதே அதானி நிறுவனம் பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் ஒரு யூனிட்டை ரூ. 5.01க்கு வழங்குகிறதே!

அப்படியென்றால் தமிழர்கள் இளிச்சவாய்க்கள் என்பதுதானே, அதானி மற்றும் மோடி ஆகியோரின் எண்ணம். இதை முறியடிக்க வேண்டும். எவ்வாறென்றால் அதானிக்கு கொள்ளை லாபம் கிட்டிட துணைபோகும், ஜெயலலிதாவை வரும் தேர்தலில் ஆட்சிக்ககட்டிலிருந்து இறக்கிட வேண்டும்.

தமிழ்நாடு மின் கைப் பொறியாளர் கூட்டமைப்பின் தலைவர் சா.காந்தி, பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் அ.வீரப்பன் ஆகிஇருவரும் சேர்ந்து அளித்த பேட்டியில்.

‘ஒவ்வொரு ஆண்டும் ரூ. 111.2 கோடியை கூடுதலாக அதானி குழுமத்துக்கு நாம் தரப்போகிறோம். 25 ஆண்டுகளில் ரூ. 2739 கோடியை தமிழ்நாடு கூடுதலாகத் தரவேண்டியிருக்கிறது.

வட்டியையும் சேர்த்தால் அது 6982 கோடியாக அதிகரிக்கும். 7.01ரூபாய்க்கு வாங்கப்படும் மின்சாரம்; நுகர்வோர் முனைக்கு வரும்போது அது ரூ. 10.50 ஆக மாறும். மரபுசாரா மின்சாரம் என்ற பெயரில் ஒரு சாரார் கொள்ளை லாபம் அடிப்பதும், அதை மக்கள் தலையில் கட்டுவதும் எந்த வகையில் நியாயம்’ என்று கேள்வி எழுப்பப் படுகிறது பதில் சொல்வோர்தான் யாருமில்லை.

ஆளுகின்றவர்களுக்கும், ஆண்டவர்களுக்கும், நேர்மையற்ற அதிகாரிகளுக்கும். ‘மின்பற்றாக்குறை என்பது வரப்பிரசாதம். இதற்காக TANGEDCO வேண்டுமென்றே, புதிய திட்டங்கள் நிறுவிடுவதில் தாமதம் ஏற்படுத்துகிறது மின்வழிக் தடங்களை சரிவரப் பராமரிப்பதில்லை. 2001ம் ஆண்டிலுருந்து இன்றுவரை (2015 வரை) தமிழக மின்வாரிய தனது மின் உற்பத்தித்திறன் 5000MW தான் கூடுதலாக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அகில இந்திய அளவில் (மற்ற மாநிலங்கள் அனைத்தும் சேர்த்து 1,00,000MW கூடியிருக்கிறது. இதற்கு அரசின் மெத்தனம்தான் காரணம்.

அதனால் ஏற்படும் விளைகள் என்ன?

 1. மக்கள் மீது கடன் சுமை அதிகரிக்கப்படும்
 2. புதிய தொழிற்சாலைகள் துவங்கிட முடியாது. இருக்கும் தொழிற்சாலைகளும் இடம் பெயரக்கூடும்.
 3. இதுபற்றி 13.8.2015 அன்று THE HINDU பத்திரிக்கையில் வந்த செய்திக்குறிப்பு இதை உறுதி செய்கிறது.
 4. வேலைவாய்ப்புகளே இல்லாது நிலை வந்திடலாம். தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் இருண்டுவிடும்.
 5. கொள்ளைலாபம் அடிப்பவர்கள், தொடர்ந்து கொள்ளையடித்தவண்ணம்தான் இருப்பார்கள் இந்த அவல நிலையைதான் ராகுல்காந்தி திருச்சி பொதுகூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அவல நிலை தொடரக்கூடாது இந்த அரசு இனி இருக்கக்கூடாது. இதை 2016ல் அகற்றிட முனைவோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s