தமிழக மீனவர் பிரச்சனை: கச்சத்தீவை திரும்பப் பெறுவதால் தீர்வு காணமுடியாது

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வேண்டுகோளின் பேரில், இது பற்றி சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் ‘ஜோ டிகுரூஸ்’ ஓர் அறிக்கை தயாரித்துள்ளார். அவ்வறிக்கையில் பாக் ஜலச்சந்தியில் கடல் வள அழிவுக்கு, ‘டிராலர்’ கள் மீன்பிடி கப்பல்கள் தான் காரணம் எனக் குற்றம் சாட்டுகிறார்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் கோரப்பட்டுப் பெற்ற அறிக்கை, கச்சத்தீவை மீட்பதால் மட்டுமே. பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நடைபெற்று வரும் மீனவப் போராட்டங்களுக்கு தீர்வு கண்டிட முடியாது எனக் கூறிகிறது. அதே சமயத்தில் பாக் ஜலசந்தி பகுதியை, ஓர் பாரம்பர்யமான மீன் பிடிக்கும் பகுதி என முடிவு செய்து, அதையும் பதிவு செய்து அறிவித்திட வேண்டும் என்று வலுவாக வலியுறுத்தியுள்ளது அவ்வறிக்கை.

பாக் ஜலசந்தி நெடுக உள்ள கடற்கரை ஓரமாக ஆழமில்லாத பகுதியிலுள்ள மணற்பாங்குகளிலும் பாறைகளிலும் கடல் வளங்கள் குறைந்து காணப்படுவதற்காகக் காரணம் ‘டிராலர்கள்’ தான் (மீன்பிடி கப்பல்கள்). என்று வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் வேண்டுகோளின் படி, சாகித்ய அகாடமி பரிசை வென்ற ஜோ டி குரூஸ் தயாரித்து அளித்த அறிக்கை நேரடியாகவே குற்றம் சாட்டுகிறது.

தீபகற்ப இந்தியாவில், மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதற்காக, 1963 ஆம் ஆண்டில் இந்தியா-நார்வே ஒப்பந்தத்தின் கீழ் மீன்பிடி கப்பல்கள் மூலம் மீன் பிடிக்கும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டது. இன்றைய மீன் வணிகச் சந்தை வளர்ச்சி என்பது அந்த ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட விளைவாகும்.

‘உண்மையில் இத்தகைய நவீன மீன்பிடித் தொழில் நுட்பமானது எங்கெல்லாம் கடல் ஆழம் சராசரியாக 2 கிமீ ஆக உள்ளதோ அங்கெல்லாம் பயன் படுத்துவதற்காகத் தான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.’

பாக் ஜலசந்தி பகுதியில் உள்ள மீனவர்களில் 20 சதவீதம் பேர் தான் மீன் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இங்கு கடலின் ஆழமோ வெறும் 20 மீட்டர் தான். இத்தகைய நெருக்கடியான பகுதியில், அளவிற்கு அதிகமான டிராலர்கள், மிகவும் குறைவான மீன் வளங்களே நோக்கி சென்று வருவதால், இப்பகுதியிலுள்ள கடல் வளங்கள் மிகவும் பயங்கரமாகக் குறைக்கப்பட்டு அழியும் நிலையில் உள்ளன என்று சுஷ்மா ஸ்வராஜிற்கு தான் ஜனவரி மாதத்தில் அறிக்கையில் குறிப்பிடுகிறார் டி. குரூஸ்.

ஸ்ரீலங்கா உயர்நீதிமன்றத்தின்னால், மரண தண்டனை வழங்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை உயிருடன் மீட்டு வருவதற்காக, சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற குழுவில் டி குரூஸ் ஓர் உறுப்பினராக இருந்தார்.

‘அந்த சந்திப்பில், சுஷ்மா சுவராஜ் அவர்கள், டி குருஸிடம் தமிழக மீனவர்கள் பிரச்சனையை ஆராய்ந்து ஒரு அறிக்கை தயாரித்து தந்திட முடியுமா? என்று வேண்டினர். நான் விருப்பமில்லாமல் தான் அப்பணியை ஏற்றுக் கொண்டேன். ஏனெனில், இதுபோன்ற அறிக்கைகளை அரசு தான் தயாரித்திட முடியும். எனினும், நான் தீவிர முயற்சி எடுத்து ஆறு மாதங்களில் இந்த அறிக்கையை தயாரித்து முடித்தேன்’ என்கிறார் டி குரூஸ். இவர் ‘பாரதப் பண்பாடு மற்றும் பாரம்பர்யம்’ எனும் அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார்.

அவரது அறிக்கையின் படி, இப்பகுதியிலுள்ள மீனவர்களின் டிராலர்களுக்கு 200 ஹெச்பி யிலிருந்து 400 ஹெச்பி வரை சக்தி படைத்த எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் சார்ந்த ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி, மின்விசைப் படகுகளுக்கு அதிகபட்சம் 150 ஹெச்பி சக்தி படைத்த எஞ்சின்கள் தான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆரம்ப கட்டங்களிலேயே இவர்கள் விதியை மீறியுள்ளனர்.

கடலின் அடிவரை சென்று வாறும் மீன்பிடி நுட்பம் மிகவும்; அபாயகரமான தொழில்நுட்பமாகும் என்று இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஒரு கனரகத் தொழில் போன்றதாகும். இதில் பல எண்ணிக்கைகள் கொண்ட மடிவலைகளில், கனமான எடைபாரங்கள் பொருத்தப்பட்டு, தண்ணீருக்குள் இறக்கப்பட்ட, மிகவும் வேகத்துடன் தரையோடு வலுவாக இழுக்கப்படும் பொழுது. கடல் தரையின் மீனின் ஜீவ அணுக்கள் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவை சுத்தமாக நசுக்கப்பட்டு அழிந்து விடுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

மீனவர் சமுதாயத்தில் பிறந்த டி குரூஸ், ‘கடல் படுகையிலுள்ள பெரிய பகுதிகளில் எங்கெல்லாம் மீனினங்கள் தங்களுக்கான உணவையும், பதுங்கும் இடங்களையும் நாடிச் செல்கின்றனவோ, அப்பகுதிகளில் எல்லாம் அடியோடு நசுக்கப்படுகின்றன. மட்டமாக்கப் படுகின்றன. மேலும், வெட்ட வெளியாக்கப் படுகின்றன’ என டிராலர்கள் உபயோகிப்போர் மீது பழி சுமத்துகிறார். 2013 ஆம் ஆண்டில் மன்னால் வளைகுடாவிலுள்ள மீனவர்களின் வரலாற்றினை பதிவு செய்து இவர் வெளியிட்ட ‘கொற்கை’ எனும் நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது.

கச்சத்தீவை, ஸ்ரீலங்காவிற்கு பாராளுமன்ற அங்கீகாரம் பெறாமல் ஓர் அரசாணையின் மூலம் தாரை வார்த்து விட்டதை இவர் கடுமையாக விமர்சித்தவர்.

இந்திய மீனவர்களின் கச்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பாரம்பர்ய கடல் பகுதிகளை மீண்டும் பெற்றிட வேண்டும் என்று இவர் வாதிட்ட போதிலும், திரு டி குரூஸ், ‘கச்சத்தீவின் மீட்பு என்பது இப்போதிருக்கும் நிலைகளை சிறிது கூட மாற்றம் ஏற்படப்போவதில்லை’ என்று கூறுகிறார்.

‘நமது மீனவர்கள் கச்சத்தீவையும் தாண்டிச் சென்றுதான் மீன் பிடிக்கிறார்கள். நாம் அதைத் திரும்பப் பெற்றால் சிங்களவர்கள் சர்வதேச கடல் எல்லையை மாற்றி அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். இது நமது மீனவர்களின் மீன் பிடித்திடும் கடல் பரப்பில் மேலும் அதிகமாக உள்ளே சென்றிடும் வாய்ப்பினை குறைத்து விடும்’ என்கிறார்.

மீன் வணிகத்தை மிகவும் லாபம் ஈட்டித் தரும், நீPல மற்றும் மஞ்சள் ‘டுனா’ மீன்களை அதிக அளவில் பிடித்திட ஏதுவாக, இவர்களை ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள, அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று அரசுக்கு அளித்திட்ட தமது அறிக்கையில் கூறுகிறார்.

‘நமது இந்திய மீனவர்களோ பாக் ஜலசந்தியிலுள்ள படிப்படியாக குறைந்து கொண்டு வரும் மீன் வளங்களுக்காக தமக்குள் சண்டையிட்டுக் கொண்டு, தங்களது வாழ்வுகளை இழந்து வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில் சிங்கள மீனவர்களோ பெட்ஜ்பாங்க் கரையிலுள்ள இந்தியாவின் பிரத்யேக பொருளாதாரப் பகுதிக்குள் புகுந்து ‘டுனா’ மீன்களை அள்ளிச் செல்கின்றனர்’ என்று முடிக்கிறார் டி குரூஸ். அவரது ஆலோசனையை பரிசீலித்து ஏற்றுக் கொள்வது, தமிழக மீனவர்களுக்கு நல்லது.

01 02 03 Katchadeevuv1.0-page-001 Katchadeevuv1.0-page-002 Katchadeevuv1.0-page-003 Katchadeevuv1.0-page-004 Katchadeevuv1.0-page-005 Katchadeevuv1.0-page-006 Katchadeevuv1.0-page-007 Katchadeevuv1.0-page-008 Katchadeevuv1.0-page-009

Katchatheevu

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s