2G – அலைக்கற்றை ஒதுக்கீடு

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்தான் 2G அலைக்கற்றை ஒதுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் பிண்ணனி என்ன?

1994ஆம் ஆண்டில்தான் – இந்தியாவில் அலைபேசித் தொலைத் தொடர்பு வசதி (Cellular Telephone Facility), துவக்கப்பட்டது மக்களிடையே இவ்வசதியை பரப்பிட, ஏலமுறை அடிப்படையில், இரண்டு நிறுவனங்களுக்கு 2G அலைக்கற்றை அப்பொழுது ஒதுக்கப்பட்டது.

அன்று ஒரு Outgoing Call க்கு 36 ரூபாயும், ஒரு Incoming Call. 18 ரூபாயும் எனவும் கட்டணங்கள் விதிக்கப்பட்டிருந்தது கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்ததினால், மக்களிடையே அலைக்கற்றைத் தொலைப்பேசி சேவையை விரிவாக்கம் செய்திட முடியவில்லை. மிகப்பெரிய வருவாயை எதிர்ப்பார்த்து ஏலத்தில் போட்டி போட்டு பங்கேற்ற நிறுவனங்களில் போதிய வருவாயை ஈட்ட முடியவில்லை. அதனால், உரிமைக் கட்டணத்தை (License Fee) அரசுக்கு செலுத்த முடியவில்லை.

1994 ஆம் ஆண்டில் அறிமுகப்;படுத்தப்பட்ட, தேசியத் தொலைதொடர்பு கொள்கையான ஏலமுறையில்தான் 2G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்து தொலைப்பேசி வசதியை பரப்பிடவேண்டும் என்ற கொள்கை நோக்கம் நிறைவேறவில்லை. இந்த தேக்கநிலையைச் கருத்தில் கொண்ட வாஜ்பாய் தலைமையிலான B.J.P. அரசு, இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சுமார் ரூ. 43,600 கோடியை 1999ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதை அன்றைய சிஏஜி அறிக்கையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளது.

அதே ஆண்டில் புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை உருவாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதால், வாஜ்பாய் அரசு, ஏலமுறையை ஒதுக்கித்தள்ளிவிட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை (FCFS) எனும் புதிய முறையை, அலைக்கற்றையை ஒதுக்குவதற்காக வகுத்தது.

  1. முதலில் வருபவருக்கு முன்னுரிமை 2008ஆம் ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்டிருந்ததா?

1999 இல் பாஜகா ஆட்சியில் தேசிய தொலைத்தொடர்பு கொள்கை (NTP 1999) உருவாக்கபட்டது அதன்பின் 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2008 ஆண்டு ஜனவரி வரை FCFS (Fisrs Come First Service) முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது.

  1. ஏலமுறையை மாற்றி மற்ற முறைகளை பின்பற்றிடலாமா? இது தவறில்லையா?

தவறே இல்லை. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39 (b) இல் நாட்டினுடைய இயற்க்கை வளங்களான நிலக்கரி, தாதுப்பொருட்கள் அலைக்கற்றை ஆகியவற்றை ஒதுக்கீடு செய்திடும் பொழுது கையாளப்படும் முறையை நாட்டின் பொது நன்மையை கருதி அமையவேண்டுமேயல்லாது, வருவாயைப் பெருக்கிட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அமைந்திருத்தல் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு நன்மையை தருவதில், எந்தமுறை சிறந்ததோ அதை தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதே அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் தனது 27-09-2012 அன்று வெளியிட்ட தீர்ப்பில் ஏலமுறை முலம் மட்டும்தான் நாட்டின் இயற்கை வளற்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதில்லை. மத்திய அரசே தனது ஒதுக்கீடு கொள்கை முறையை, நாட்டின் நன்மை கருதி முடிவெடுக்கலாம் என்று தெளிவாகக் கூறியிருக்கிறது.

இதனால்தான் FCFS கொள்கை 2001 லிருந்து 2008 வரை பின்பற்றப்பட்டு வந்தது.

2001-2003 வரை (துறை அமைச்சர் பிரமோத் மகாஜன்) – 15 உரிமங்கள்

2003-2004 வரை (துறை அமைச்சர் அருண் ஷோரி) – 10 உரிமங்கள்

2004-2007 வரை (துறை அமைச்சர் தயாநிதிமாறன்) – 26 உரிமங்கள்

மொத்தம் 51 உரிமங்கள் வழங்கப்பட்டன. இதனால் 2001ஆம் ஆண்டில் வெறும் 30 லட்சமாக இருந்த கைபேசி எண்ணிக்கை 2003ஆம் ஆண்டு 1 கோடியே 30 லட்சமாக உயர்ந்தது. அதுபோல் 2003ம் ஆண்டில் 1 கோடியே 30 லட்சமாக இருந்த கைபேசி எண்ணிக்கை 2004 ஆம் ஆண்டில் 1 கோடியே 50 லட்சமாக உயர்ந்தது. இந்த முறையிலிருந்தாலும் எதிர்ப்பார்த்த அளவு தொலைபேசி விரிவாக்கம் ஏற்படவில்லை எனினும் 2004 ஆம் ஆண்டில் 1 கோடியே 50 லட்சமாக இருந்த கைபேசி எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டில் 15 கோடியாக பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த மாறுதலுக்குட்பட்ட காரணம் UPA அரசு, STD Call, Local Call க்கும் ஒரே மாதிரியாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்று கட்டணத்தை குறைத்திட்டதுதான்.

இதனால் மக்களிடையே கைபேசி வசதிபெற்றிட வேண்டும் என்ற ஆவல் உண்டாகிவிட்டது அதனால் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ‘2 G – அலைக்கற்றை’ ஒதுக்கீடுகள் பெறமுயன்றன. ஆனால் அப்பொழுது தேவையான 2 G – அலைக்கற்றை அரசின் கைவசம் இல்லை பின் 2007ஆம் ஆண்டு, பாதுகாப்புத்துறை தன் வசம் இருந்த 2 G அலைக்கற்றையை தொலைதொடர்புத்துறைக்கு மாற்றிக் கொடுத்தது. இந்த அலைக்கற்றை அனைத்தும் 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் FCFS முறை மூலம், 122 உரிமங்கள் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அன்று தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த அ. ராஜாவினால், 122 உரிமங்கள் வழங்கபட்டன.

இதனால் மக்களிடையே கைபேசி வசதி பெற்றிட வேண்டும் என்ற ஆவல் (Demand) மிகவும் அதிகமாகியது.

2007 மே மாதம் 15 கோடியாக இருந்த கைபேசி எண்ணிக்கை 2010 நவம்பர் மாதம் 75 கோடியாக உயர்ந்தது (தற்போது இது 100 கோடியை தொட்டிருக்கிறது)

தொலைப்பேசி எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க STD மற்றும் Local Call கட்டணங்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 1 ரூபாய்லிருந்து 1 நிமிடத்திற்கு 30 பைசா என்ற அளவில் குறைந்துவிட்டது.

UPA அரசின் மிகப்பெரிய சாதனையாகும் இது.

ஆனால் இதற்கிடையே பல விரும்பத்தகாத குறுக்கீடுகள் ஏற்பட்டன.

‘2007 ஆம் ஆண்டு, அலைக்கற்றைனய ஒதுக்கீடு செய்திடும் போது, ஏலமுறையை பின்பற்றிட வேண்டும் என்று நிதித்துறை அமைச்சகம், பரிந்துரை செய்திருந்தது. அதை செவிசாய்த்திடாமல் FCFS முறையை தொடர்ந்து பின்பற்றியதால் அரசுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரி (CAG) விநோத் ராய் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதனால் பெரிய குழப்பமே ஏற்பட்டு மத்திய அமைக்சர் ராஜா தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது ஆனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை நிர்ணயித்திடும் போது சிஏஜி-யே தடுமாறுகின்றார். நான்கு மதிப்பீடுகளைக் கூறுகின்றனர்.

1. ‘3G’ அலைக்கற்றையை ஏலத்தில் அரசுக்கு கிடைத்திட்ட தொகையை வைத்துப்பார்த்தால் இழப்பீடு 1,76,000 கோடி என்றும்.

  1. ‘S.Tel’ நிறுவனம் தானாக முன்வந்து 13,500 கோடி கொடுத்து அனைத்து இந்திய உரிமம் பெற நினைத்ததை வைத்து கணக்கீடு செய்ததால் 67,364 கோடி இழப்பு என்றும், (ஆனால், அதன்பின் தனது கோரிக்கையை S.Tel நிறுவனம் விலக்கிக் கொண்டது.
  2. Unitech நிறுவனம் 67.25 சதவிகிதம் பங்குகளை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றதை வைத்து கணக்கிடும் பொழுது 69,626 கோடி இழப்பு என்றும்
  3. SWAN நிறுவனம் 50 சதவிகிதம் பங்குகளை வேறு நிறுவனத்திற்கு விற்றதை வைத்து கணக்கிட்டதில் 57,666 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நான்கு வித இழப்பு கணக்குகளை தணிக்கை குழு அறிவித்திருந்தது. இழப்புகளை நிர்ணயிப்பதில் CAGயே குழப்பத்தில் இருந்தார் என்பது இதன்மூலம் தெரிகிறது.

ஆனால் TRAI (Telecom Regulatory Authority of India) (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆனணயம்) தனது அறிக்கையில் FCFS முறையை பின்பற்றியதால், ஏலமுறையை வைத்து இழப்பைக் கணக்கிட முடியாது எனவே அரசுக்கு இழப்பு ஏதுமில்லை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதை ஏற்று, அன்றைய தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபில் அவர்களும் அரசிற்கு Zero Loss தான் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். (கபில் சிபல் இதனால் இன்றும், எதிர்கட்சி மற்றும் ஊடகங்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது)

CAG, நான்கு வகையில் இழப்பீடுகளை தணித்திருக்கின்றார். ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு மதிப்பீடு வருகிறது. TRAI யும், அமைச்சர் கபில்சிபலும் இழப்பே இல்லை என்று கூறுகின்றனர்.

இதனால், குழப்பமடைந்த CBI சிறப்பு நீதீமன்ற நீதிபதி நீதியரசர் O.P.Saini CBI இடம் சரியான இழப்பு எவ்வளவு என்று மதிப்பீடு செய்திட ஆணையிட்டார். CBI தனது பங்கிற்கு ரூ. 30,984 கோடி இழப்பு என்று கணக்கிட்டு கூறியது.

அதே சமயத்தில் நீதிபதி O.P.Saini ‘அரசை ஏமாற்றுவதற்;கு சதி செய்தனர் என்றுதான் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே, இவ்வழக்கில் இழப்பீட்டை பற்றி கவனம் செய்திட தேவையில்லை’ என்று கூறுகிறார். ஆனால் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும், எதிர்கட்சியினரும் கற்பனைத் தொகையான ரூ. 1,76,000/- கோடியை மட்டும் எடுத்துக் கொண்டு அது வெறும் இழப்புதான் என்று CAG சுட்டிகாட்டியிருந்தபோதும் அது ஒரு மாபெரும் ஊழல் தொகை என்று மக்களிடையே பொய் செய்திகளைப் பரப்பி UPA அரசு ஊழல் நிறைந்த ஆட்சி என்று உண்மைக்கு புறம்பாகக் குறை கூறிவருகின்றனர்

  1. இவ்வளவு குழப்பங்கயையும் இவ்வளவு கெட்ட பெயரையும் UPA அரசுக்கு சம்பாதித்து கொடுத்த, FCFS முறையைப் பின்பற்றிடாமல் நிதி அமைச்சகத்தின் பரிந்துரைப்படி ஏலமுறையையே UPA அரசு பின்பற்றியிருக்கலாமே?

நிதி அமைச்சகம் ஏல முறையைப் பரிந்துரை செய்திருந்த போதிலும், தொலைதொடர்பு அமைச்சர் A.Raja கீழ்கண்ட வாதத்தை பிரதமர் முன்வைக்கிறார்.

‘2001 லிருந்து 2007 வரை. அலைக்கற்றை, FCFS முறையில் ஒதுக்கீடு செய்ததினால் தான் 51 நிறுவனங்களின், வாடிக்கையாளர்களுக்கு கட்டண விகிதம் 1 நிமிடத்திற்கு 30 பைசா என்றிருக்கிறது. இனிவரும், 122 நிறுவனங்களுக்கும் ஏலமுறையில் உரிமங்கள் உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு, கட்டண விகிதம் நிச்சயம் அதிகமாக இருந்திடும். இதனால், இந்நாட்டில் ஒரு பகுதி மக்களுக்கு குறைவான தொலைப்பேசி கட்;டணமும், ஏனைய பகுதி மக்களுக்கு அதிகமான தொலைப்பேசிக் கட்டணமும் இருப்பது என்பது சமநிலையான ஏற்பாடு அல்ல (No Level Playing Ground). எனவே FCFS கொள்கைதான் 2008ம் ஆண்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று A.Raja வாதிடுகிறார்.

உண்மையான நிலைமையைப் புரிந்து கொண்ட பிரதமரும் அரசியல் சட்டத்தின் 39 B விதியின் அடிப்படையில் FCFS கொள்கையை பின்பற்றிடுமாறும், அதை நேர்மையாகச் செயல்படுத்திடுமாறு A.ராஜாவிற்கு அறிவுரை கூறுகிறார் (A.ராஜா, அடிக்கடி நான் பிரதமரைக் கேட்டுத்தான் ஒதுக்கீடுகளை செய்தேன் என்று கூறுவது பிரதமரின் இந்த அறிவுரையை சுட்டிக்காட்டித்தான்)

FCFS கொள்கையை பின்பற்றியது சரியா அல்லது தவறா என்று தெளிவுபடுத்துமாறு, குடியரசுத்தலைவர், உச்கநீமன்றத்தை கேட்குக் கொண்டபொழுது உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதியான நீதிபதி A.H.Kapadia, ‘FCFS கொள்கை நல்லதோர் கொள்கைதான். ஆனால் அதை செயல்படுத்திடும் போதுதான் தவறு நேர்ந்திருக்கிறது’

(The FCFS Policy is good one. The flaw is only in its implementation

5. எவ்வாறு FCFS கொள்கை நல்ல கொள்கை என்று கூறுகிறார் Justice A.H.Kapadia?

இக்கொள்கைறைப் பின்பற்றியதால் 2010ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 75 கோடி நபர்களுக்கு தொலைதொடர்பு வசதி கிடைத்துள்ளது.

UPA அரசு நாட்டு மக்களுக்கு தொலைபேசி வசதியை தந்துள்ளது போல உலகில் வேறு எந்த நாடும் தம் மக்களுக்கு இது பொல வசதிய செய்து தந்திடவில்லை.

இது ஒரு இமாலய சாதனையே !!!

மேலும் இக்கொள்கையின் முக்கியமான அம்சத்தை அனைவரும் மறந்துவிட்டு, இக்கொள்கையை விமர்சிக்கின்றனர். அதுதான் வருவாயில் பங்கு (Revenue Sharing) என்ற அம்சம். அதாவது தொலைப்பேசி சேவையைத்தரும் நிறுவனங்கள் தங்களது வருவாயில் 8% யை உரிமக் கட்டணமாக அரசுடன் பங்கிட்டு கொள்ள வேண்டியது என்ற நிபந்தனையுடன் தான் அவற்றிக்கு உரிமங்கள் வழங்கபட்டன.

தற்பொழுது தொலைபேசிக்காக, இப்போதுள்ள 1 நிமிடத்திற்கு 30பைசா என்ற அடிப்படையில் சராசரியாக, ஒரு நபர் ஒரு மாதத்திற்கு ரூ. 100/- செலவழிக்கின்றனர் என்று என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் 8% அதாவது ரூ 8/- மத்திய அரசுக்கு தனிநபரிடமிருந்து அரசுக்குக் கிடைத்திருக்கிறது.

இதுபோல் 75 கோடி தொலைபேசிகளிடமிருந்து

மத்திய அரசிற்கு 1 மாதத்தில் 75 X 8 = 600 கோடி கிடைத்திடும்.

ஒரு வருடத்தில் 12 x 600 = 7200 கோடியாக உயர்ந்திடும்.

20 வருடங்கள் (உரிமத்தின் காலம்) = 20 X 7200 = 1,44,000 கோடி வருவாய் கிடைத்திருக்கும்.

அதாவது FCFS முறையைப் பின்பற்றிருந்தால், 20 வருடத்தில் ரூ. 1,44,000/- கோடி அரசுக்கு கிடைத்திருக்கும்.

6. இதற்கிடையில் குழப்பவாதியான சுப்பிரமணிய சுவாமி இவ்வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் செய்திருந்தாரே, அவ்வழக்கு என்னவாயிற்று?

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 122 உரிமங்களை ஒதுக்கீடு செய்ததில், A.ராஜா பெரும் தவறுகள் புரிந்திருக்கிறார் எனக் கூறி அந்த 122 உரிமங்களையும் ரத்து செய்து விட்டது (2-2-2012 அன்று வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு). சிதம்பரத்தை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டுமா என்பதை CBI சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறியது.
(4.2.2014) அன்று வெளியிட்ட தனது தீர்ப்பில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிதம்பரத்தை குற்றவாளிப் பட்டியலில் சேர்த்திடுவதற்கு எந்தவித ஆதாரமுமில்லை என்று கூறி சுப்பிரமணிய சுவாமியின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது இதற்குபிறகு சுப்பிரமணியசுவாமி கொடுத்த மேல் முறையீடு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது (24-8-012). சு.சுவாமியின் ‘Review Petition’ மற்றும் Curative மனு ஆகியவையும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன

7. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குபின் அந்த 122 உரிமங்கள் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டன?

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் (அதாவது முன்னாள் பிரதமர் Dr.மன்மோகன் சிங் ஆட்சிகாலத்திலேயே), ஏலமுறை மூலம் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

(வெளிநாடுகளில் பேசிடும் பொழுது பிரதமர் மோடி, அலைக்கற்றை ஏலமுறை தன்னுடைய ஆட்சி காலத்தில்தான் பின்பற்றியது போல உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்)

இதனால் அரசுக்கு கிடைத்திட்ட வருமானம் ரூ. 37,572.60 கோடிதான் (20 வருடத்திற்கு)

(CAG குறிப்பிட்டது போல் ரூ. 1,76,000/- கோடி அல்ல)

CBI மதிப்பீடு ஒரளவிற்கு சரியாக உள்ளது.

ஆனால் FCFS முறையையே செயல்பட அனுமதிருந்தால் 1,44,000/- கோடி கிடைத்திருக்கும். ஏலமுறையைப் பின்பற்றியதால் தான் அரசுக்கு 1,00,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தின் மூலம் தெரிகிறது.

அதே நேரத்தில், FCFS முறையில் நுழைவுக் கட்டணம் ரூ. 1600/- கோடி மட்டும் செலவு செய்து உரிமம் பெற்றிருந்ததால், தொலைபேசி நிறுவனங்களினால் குறைந்த கட்டணமாகிய 1 நிமிடத்திற்கு 30 பைசா என்று கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இப்பொழுது ஏலமுறையினால், ரூ. 7500/- கோடி (ஏலத்தொகையில் 20 சதவீதம் முதலாண்டில் நிறுவனங்கள் செலுத்திட வேண்டும்) செலவு செய்து உரிமம் பெற்றுள்ளதினால், நிச்சயம் தொலைப்பேசி கட்டணம் 2 அல்லது 3 மடங்கு உயர்திடும். சாதாரண மனிதன், தான் பெற்றிருக்கும் தொலைபேசி வசதிக்காக அதிக கட்டணம் செலுத்தவேண்டியது வரும். பொதுமக்களுக்கு அதிக நிதிச்சுமை.

CAGன் அநாவசியமான அறிக்கையினால் தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவும் பத்திரிக்கைகளும் அநாவசியமாக பரப்பிவரும் 2G – ஊழல் என்பது ஊழல் என்பது இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மொத்ததில் பாஜகவினரும், ஊடங்களும் ஊயுபுயும் சேர்ந்து ஓர் ‘பொன் முட்டையிடும் வாத்தை’ கொன்று விட்டார்கள் என்பதே உண்மை.

உச்சநீதின்றம் ரத்து செய்த 122 உரிமங்களை ஏலம் விட்டதினால் அரசுக்குக் கிடைத்தது ரூ. 37,572 கோடி தான் (20 வருடங்களுக்கு).

FCFS முறையை ஏற்று, 122 உரிமங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்யாமல் இருந்திருந்தால்,

ரூ. 1,44,000 கோடி (20 வருடங்கள்) க்கு மேல் கிடைத்திருக்கும்.

ஏலமுறையினால் தான் அரசுக்கு 1,00,000 கோடி நஷ்டம். மக்களுக்கும் அரசிற்கும் கிடைத்திட வேண்டிய நற்பயன்களை ஊடகங்களும் பாஜகவினரும் CAGயும் கெடுத்து விட்டனர் என்பதை மீண்டும் மீண்டும் பொதுமக்களின் கவனத்துக் கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

001 002 003 004 005 006 007 008 009 010 011 012a 012b00200600711288502_1394254324238795_568125829_o11297157_1394254327572128_1129583090_o

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s