ரூ. 1,86,000 கோடி ‘நிலக்கரிச் சுரங்க ஊழலுக்கும், டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை’.

(26.8.2014 அன்று வெளிவந்த உச்சநீதிமன்றத்த் தீர்ப்பால் தெளிவு)

1973 ஆம் ஆண்டில் நாட்;டில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் அனைத்தும், அன்னை இந்திரா காந்தி ஆட்சியில் தேசியமயமாக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான CIL (Coal India Ltd) மட்டுமே நிலக்கரிச் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதுவும், மின்சார உற்பத்திக்காக மட்டும் தான்.

அதன்பிறகு, 1976 ல் நிலக்கரிச் சுரங்கச் சட்டத்தில், அதில் மின்சாரம் மட்டுமின்றி, இரும்பு, எஃகு மற்றும் சிமெண்ட் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களும், நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.

1991 ல் தனியார்மயக் கொள்கை இந்திய அரசினால், சுவீகரிக்கபட்டபொழுது, நிலக்கரிச் சுரங்கங்களை, சிமெண்ட், இரும்பு, எஃகு மற்றும் மின்சக்தி உற்பத்திக்காக, பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் ஈடுபடலாம் எனக் கொள்கை மாற்றம் செய்யப்பட்டது. தங்களது நிறுவனங்களில் உற்பத்திக்கு மட்டுமே நிலக்கரிச் சுரங்கங்களைப் பயன்படுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், மேலும் ஒரு திருத்தம் 1993 ல் கொண்டுவரப்பட்டது.

அதன்படி பி.வி.நரசிம்மராவ், பிரதமராக இருந்த போது 5 சுரங்கங்கள் உத்தேச நியமன முறை மூலம் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன. (1)

அதன் பிறகு, 1998 லிருந்து 2004 ஆம் ஆண்டு மே மாதம் வரை நடைபெற்ற பாஜக ஆட்சியில், 37 சுரங்கங்கள் நியமன முறை மூலம் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன. (1)

2004 ஆம் ஆண்டு மே மாதம் முடிவில் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்ற பின், 2004 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அப்பொழுது நிலக்கரிச் சுரங்க அமைச்சக செயலராக இருந்த ‘பராக்’ என்பவர், 2004 வரை நடைபெற்ற பாஜக ஆட்சியில் சுரங்க ஒதுக்கீடு பெற்றவர்கள், கொள்ளை லாபம் பெற்று வருகின்றனர் எனவும், (அதன் மதிப்பு எவ்வளவு என்பதை அப்போது யாரும் மதிப்பீடு செய்திடவில்லை) இதனால் அரசுக்கு வரவேண்டிய உண்மையான வருவாய் கிடைப்பதில்லை எனவும், இனி வருங்காலங்களிலாவது ஏலமுறையைப் பின்பற்றி தனியாருக்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறி, பிரதமருக்கு அனுப்பிய கோப்பில் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். (2)

அதிலிருந்த நியாயத்தை உணர்ந்து, டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் ஏலமுறையை செயல்படுத்த முற்பட்டார். ஆனால் சுரங்கம் மற்றும் கனிம வள மேம்பாடு சட்டத்தில் திருத்தம் (MMRDA) கொண்டு வந்தால் தான் ஏலமுறையை அறிமுகப்படுத்த முடியும். அதை நிறைவேற்றிட அன்றைய மத்திய அரசிற்கு மாநிலங்களவையில் போதிய ஆதரவு இல்லை. மேலும், நிலக்கரிச் சுரங்கங்கள் அதிகம் கொண்டிருக்கும் பாஜக ஆட்சி செய்யும் (ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான்) மாநில முதல்வர்களும், பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்யும் ஒரிஸ்ஸா மாநில முதல்வரும், இடதுசாரி ஆளும் மேற்கு வங்க முதல்வரும், ஏலமுறை என்பது தங்களது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகும் எனக்கூறி அம்முறையை அறிமுகப் படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். (3) (4) (5) (11) மேலும், அம்மாநில முதல்வர்கள் தனக்கு வேண்டியவர்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர். (6) (7) (8) (9) (11) பின் அம்மாநில முதல்வர்களுக்கு, ஏலமுறையினால் மாநில அரசுகளுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகளை (அதிகமான ‘ராயல்டி போன்றவை பற்றிய வாதங்களைக் கூறி அவர்களை வலியுறுத்தி சம்மதம் பெறுவதற்கு, பிரதமருக்கு நீண்டகால அவகாசம் தேவைப்பட்டது. பின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரின் சம்மத்தைப் பெற்று (MMRDA) சட்டத்தில் திருத்தமும் கொண்டு வருவதற்கும் காலதாமதம் ஏற்பட்டது. பின் ஏலமுறைக்கான சட்டமாற்றங்கள், வழிமுறைகள் வரையப்பட்டு, 2012 ல் அச்சட்டம் முழுமை பெற்றது. (10)

உச்சநீதிமன்றமும், தனது 25.8.2014 ல் வெளியிடப்பட்ட தீர்ப்பில், சட்டமாற்றத்திற்கான இந்த நீண்டகால இடைவெளிக்கு, அரசு சமர்ப்பித்த காரணங்களை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தது.) (11)

ஆனால், இடைப்பட்ட காலத்தில் (2004-2012), மின் உற்பத்தித் தேவை அதிகமாகி விட்டதால், நிலக்கரித் தேவை அதிகரித்தது. (12) எனவே, ஏலமுறை அறிமுகப்படுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டதால், பழைய நியமன முறையையே பின்பற்றி மன்மோகன் சிங் அரசு 162 புதிய நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்தது. (1) இதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்பதை அதன் தீர்ப்பிலிருந்து தெளிவாகிறது.

இதற்கிடையே, தனியாருக்கு ஒதுக்கப்பட்ட, நிலக்கரிச் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை விற்றதனால், அவர்களுக்கு கிடைத்திட்ட லாபம் பற்றிய ஒரு அறிக்கையை மத்திய தணிக்கைக் குழு (CAG Report), 2010 ல் அரசுக்கு சமர்ப்பித்தது. மத்திய அரசு 2012 ல் மத்திய தணிக்கைக் குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. (13)

அதில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் பெற்ற கீழ்கண்ட நிறுவனங்கள் தான் மொத்தம் ரூ 1,86,000 கோடி லாபம் பெற்றுள்ளன என்ற சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கான கீழ்க்கண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது. (The Times of India-18.8.2012) (14)

MAJOUR BENE copy

இன்றைய மத்திய நிதியமைச்சரும், பாஜக வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அருண்ஜேட்லி, 28.8.2012 அன்று THE HINDU பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், ‘2004 லிருந்து 2012 வரை ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களின் செயல்பாடுகள் மிக மிக சொற்பமானதே. ஏனெனில், அவற்றில் பெரும்பான்மையானவற்றிற்கு இன்னமும், சட்ட அனுமதியும், சுற்றுப்புறச் சூழல் அனுமதியும் கிடைத்திடவேயில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார். (15)

(“The exploitation of Coal blocks allotted between 2004 and 2012 is negligible. For most of these coal blocks, statutory and environmental permissions have not been given” – The Hindu 28.8.2012)

1.9.2014 அன்று உச்சநீதிமன்றத்தில், ‘நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ரத்து’ பற்றி வாதாடிய, அட்டார்னி ஜெனரல் திரு.முகுல் ரோஹாட்கி, ‘அரசு இந்த 204 ஒதுக்கீடுகளை ரத்து செய்யவே விரும்புகிறது. எனினும், இப்பொழுது முழுமையாக இயங்கிவரும் 42 நிலக்கரிச் சுரங்கங்களில் ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படாமலிருந்தால், அரசு மகிழ்ச்சி கொள்ளும்’ என்று கூறுகிறார். (தி ஹிந்து – 2.9.2014) (16)

இதிலிருந்து மீதியிருக்கும் 162 சுரங்கங்களில் நிலக்கரி வெட்டியெடுக்கப்படவில்லை என்பதும், சுரங்கங்கள் செயல்படவில்லை என்பதும் நமக்கு நன்கு தெளிவாகிறது. (இவைதான் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடுகளாகும்)

ஆக, அருண் ஜேட்லி, முகுல் ரோஹாட்சி ஆகியோர் கூற்றின்படி, டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சிக்கும் ரூ. 1,86,000 கோடி இழப்பிற்கும் (மெகா ஊழல்) எந்தவித சம்பந்தமே இல்லை என்பது தெளிவாகிறது.

அப்படியானால், லாபம் அடைந்த நிறுவனங்களுக்கு யார் ஒதுக்கீடு செய்தது? அட்டார்னி ஜென்ரலின் வாதங்களை உச்சநீதிமன்றமோ ஏற்றுக்கொள்ளவில்லை. 1993-2004-ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்ட 204 ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டதிற்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, அவ்வகை ஒதுக்கீடுகளையும் ரத்து செய்துள்ளது. இதில் முன் கொடுக்கப் பட்டுள்ள அட்டவணையில் கண்டிருக்கும் அனைத்து ஒதுக்கீடுகளும் அடங்கும்.

இவையாவும் டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில் பெறப்பட்ட ஒதுக்கீடுகள் அல்;ல. 1998 லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை நடந்த பாஜக. ஆட்சியில்தான் இவற்றிற்கு ஒதுக்கீடுகள் பெற்றிருக்க முடியும். எனவே, ரூ.1,86,000 கோடி இழப்பிற்கு (மெகா ஊழலுக்கு) பாஜக தான் பொறுப்பாகும் என்பது தெளிவாகிறது.

பிரதமர் மோடி வெளிநாடுகளில் பேசிடும் பொழுது, எங்கள் ஆட்சியில் நிலக்கரிச் சுரங்க ஏலங்கள் மூலம் ரூ. 3 லட்சம் வருவாய் ஈட்டியிருக்கிறோம் இதை முந்தைய அரசு ஏன் செய்யவில்லை? எனக் கேள்வியெல்லாம் எழுப்புகிறார்? ஏலத்திற்கு வேண்டிய வழிமுறைகள் அனைத்தையும் செய்தது டாக்டர் மன்மோகன் சிங் அரசு தான். (10)

இவரது ஆட்சியில் ஏலம் விடப்பட்ட 20 சுரங்கங்களும் ஏற்கனவே வாஜ்பாய் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பின், உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டவையே.

அப்படியென்றால் இவர் முந்தைய வாஜ்பாய் அரசைத்தான் குறை கூறுகிறாரா? பிரதமர் மோடிக்கு இன்னமும் வாஜ்பாய் மீதுள்ள கோபம் தணிய வில்லையா?

தெளிவு செய்யட்டும்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s