முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ‘சம்மன்’ அனுப்பியது பற்றி:

2015 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி, டெல்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஒடிஸா மாநிலத்திலுள்ள தலபீரா 2 மற்றும் தலபீரா 3, நிலக்கரிச் சுரங்கங்களை, தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் நிறுவனமான ஹிண்டல்கோ விற்கு, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்திருக்கிறது என அவர் மீது குற்றம் சாட்டி, அவரை விசாரித்திட ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.

டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சிக்கும், ரூ. 1, 86,000 கோடி மதிப்புள்ள நிலக்கரிச் சுரங்க ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்று முன்பு சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறதே. அப்படியாயின் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்புவானேன் என்று கேள்வி எழுவது நியாயமே.

ஆனால், ரூ.1,86,000 கோடி ஊழலுக்காக, யார் மீது இதுவரை எந்த வழக்கும் தொடரப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை. இந்த ‘சம்மனுக்கும்’ ரூ.1,86,000 கோடி ஊழலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக்காலத்தில், செய்யப்பட்ட 162 ஒதுக்கீடுகளில், ஒடிஸா மாநிலத்தின் தலபீரா 2 மற்றும் தலபீரா 3 ஒதுக்கீடும் ஒன்று. (இந்த சுரங்கங்களும், இன்னமும் தோண்டப்படவில்லை) (5)

ஆனால், ஒதுக்கீடு முறையில் ஊழல் நடந்திருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

அதன் விவரங்கள்:

ஒரிஸாவில் செயல்பட்டு வரும் ‘மகாநதி நிலக்கரி வயல்’ எனும் பொதுத்துறை நிறுவனத்திற்கும், தமிழ்நாட்டிலுள்ள ‘நெய்வேலி லிக்னைட் கழகம்’ என்ற நிறுவனத்திற்கும் தான், முதன்முதலில் 2005 ஆண்டு ஒடிஸா மாநிலத்திலுள்ள தலபீரா 2 மற்றும் தலபீரா 3 நிலக்கரி சுரங்கங்கள் தேர்வுக் குழுவினால் (Screening Committee) ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி, ஒடிஸா முதலமைச்சர் நவீன்பட்நாயக், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், தல்பீரா 2 மற்றும் தல்பீரா 3 சுரங்கங்களிலுள்ள நிலக்கரியில் 15 சதவீதமாவது பிர்லாவின் ஹிண்டல்கோ நிறுவனத்திற்கு ஒதுக்கிட வேண்டுமென்றும், இதனால் ஒடிஸா மாநிலத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், ஆகவே, தேர்வுக்குழுவின் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கோருகிறார். (1) ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி, பிரதமர் அலுவலகம் நிலக்கரி அமைச்சகத்திற்கு தலபீரா நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு கூறுகிறது. (1)

மறுபரிசீலனை செய்த நிலக்கரிச் சுரங்க அமைச்சகம், ஒடிஸா முதல்வரின் கோரிக்கையின் பேரில் ஒதுக்கீட்டில் 70 சதவீதத்தை மாற்றி மகாநதி நிலக்கரி வயலுக்கும், 15 சதவீதத்தை, நெய்வேலி லிக்னைட் கார்ப்ஷனுக்கும், மீதமுள்ள 15 சதவீதத்தை ஹிண்டல்கோவிற்கும் பிரித்து ஒரு கூட்டு முனைப்பு அமைப்பாக (Joint Venture) இயங்கிட பரிந்துரைக்கிறது. பிரதமரும், இதற்கு ஒப்புதல் அளிக்கிறார். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. (1)

எனினும், சிபிஐ இதில் தவறு நடந்திருக்கிறது என்று, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பின் விசாரணை செய்து, இதில் வழக்குத் தொடர்வதற்கான சாட்சியங்கள் (Prosecutable Evidence) எதுவுமில்லை என முடிவுக்கு வந்தது. (2)

இருப்பினும், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாரத பராசசர், தானாகவே முன்வந்து டாக்டர் மன்மோகன் சிங், ஹிண்டல்கோ உரிமையாளர் குமாரமங்கலம் பிரிலா மற்றும் நிலக்கரிச் சுரங்க அமைச்சகச் செயலர், பி.சி.பராக் ஆகியோர் மீது குற்றம் சாட்டி, அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

டாக்டர் மன்மோகன் சிங், இச்சம்மனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ‘நாட்டில் இன்று பரவலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் தாராளமயக் கொள்கையைப் பின்பற்றி, மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட அரசாட்சி முடிவு தான் இந்த முடிவு. இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. எந்தவிதமான ஊழலுக்கும் இடமில்லை’ என்று வாதாடினார். (3) (4)

உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு ‘சம்மனை’ நிறுத்தி வைத்ததோடு அல்லாமல், கீழ்நீதிமன்றத்தில் இது சம்பந்தமான ஏனைய நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது. மத்திய அரசிற்கும், இது பற்றி விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. (3) (4)

மத்திய அரசு என்னதான் கூறப்போகிறது, என்பதைப் பார்ப்போம்.

001 002 003 004 005

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s