நிலக்கரி சுரங்க முறைகேடுகள் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு (25.8.2014)

(ரூ 1,86,000 கோடி மெகா ஊழலுக்கு, பாஜக காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் தான் காரணம்)

உச்சநீதிமன்றத் தீர்ப்பு (25.8.2014)

உச்சநீதிமன்றம், 1993 முதல் 2010 வரையிலான மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் நிலக்கரிச் சுரங்க ஓதுக்கீடுகள் சட்ட விரோதமானவை என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. ஓதுக்கீடுகள் செய்த அரசின் நடைமுறைகளிலும், ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளிலும், வெளிப்படைத்தன்மை இல்லை என்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வின் தலைவர், தலைமை நீதிபதி ஆர்.எம்.லோத்தா குற்றம் சாட்டியுள்ளார். எனவே, அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்தால் என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Article-22.11.2014-page-001

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல், விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் ஒதுக்கீடு செய்ததால், மத்திய அரசுக்கு ரூ 1.86 லட்சம் கோடி இழப்பு (மெகா ஊழல்) ஏற்பட்டிருப்பதால் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) விநோத் ராய் 17.8.2012 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதாவது சட்டத்திற்கு புறம்பாக ஒதுக்கீடுகள் பெற்ற 25 நிறுவனங்கள் ரூ1.86 லட்சம் கோடி கொள்ளை லாபம் பெற்றுள்ளன எனக்கூறியிருக்கிறார். இந்நிறுவனங்கள் தாங்கள் தோண்டிய நிலக்கரியை விற்று, மேற்கூறிய கொள்ளை லாபத்தை ஈட்டியதாக சிஏஜி குற்றம் சாட்டுகிறார்.

ஆனால், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ஒதுக்கீடுகள் பெற்ற அனைத்து நிறுவனங்களும் இன்னமும், சுரங்கம் தோண்டும் பணியையே ஆரம்பிக்கவில்லை.

திரு.அருண் ஜேட்லி (முன்னாள் எதிர்கட்சி தலைவர் மற்றும் இன்றைய நிதியமைச்சர்) இதை ஒத்துக் கொள்கிறார்.

(The exploitation of coal blocks between 2004 and 2012 is negligible for, most of the blocks, statutory and environmental permissions have not been given –The Hindu – 28.8.2012)

இதற்கு வலுச்சேர்ப்பது போலுள்ளது அட்டார்னி ஜெனரல் (ஏஜி) முகல் ரோஹட்கி, 1.9.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் வைத்துள்ள வாதங்கள் ‘மொத்தம் உள்ள 218 ஒதுக்கீடுகளையும் ரத்து செய்திட வேண்டாம். தற்பொழுது செயல்பட்டு வரும் 46 ஒதுக்கீடுகளை அப்படியே விட்டுவிட்டு, மற்ற ஒதுக்கீடுகளை ரத்து செய்யலாம்’ என்கிறார்.

அதாவது மன்மோகன் சிங் காலத்தில் ஒதுக்கீடுகள் பெற்று, இன்னமும் செயல்படாமலிருக்கும் 166 ஒதுக்கீடுகளையும் ரத்து செய்துவிடலாம் என்கிறார்.

மன்மோகன் சிங் காலத்து 166 ஒதுக்கீடுகளும் செயல்படவில்லை என அட்டார்னி ஜெனரலே கூறுகிறார். அப்படியானால் சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்ட, ரூ 1.86,000 கோடி கொள்ளை லாபத்தை பெற்றவர்கள் யாராக இருந்திட முடியும்? வேறு யார்?

2004 ஆம் ஆண்டிற்கு முன் ஒதுக்கீடுகள் பெற்ற இந்த 46 நிறுவனங்கள் தான்.

அட்டார்னி ஜெனரல் மேலும், சிஏஜி குறிப்பிட்ட ரூ 1,86,000 கோடியை (மெகா ஊழல்) இவர்களிடமிருந்து, சிஏஜி அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப் போல், 1 டன்னுக்கு ரூ 295/- என்று அபராதமாக வசூலித்து, ஈடுகட்டிவிடலாம் என்று ஒர் அரிய யோசனையும் முன் வைத்திருக்கிறார். அதாவது, திருடன் மாட்டிக் கொண்டால், அவனிடமிருந்து திருட்டுப் பொருளை கைப்பற்றிய பின் திருடனை விட்டுவிடலாம் என்பது போலிருக்கிறது. இந்த 46 நிறுவனங்களும் தான் கொள்ளையடித்தவர்கள். இந்தச் செய்தி நாட்டையே உலுக்கியது.

2004- ஆம் ஆண்டிற்கு முன் இவர்களில் பெரும்பான்மையோருக்கு ஒதுக்கீடு வழங்கியது யார்? அன்று ஆட்சி செய்த பாஜக அரசு தான்.

26.8.2014 தினமணி இதழில், தலையங்கத்தில் ‘இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெரும் லாபம் ஈட்டியவர்கள், பொருள் ஈட்டியவர்கள் யார் யார் என்று அறியப்பட்டு, அவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும். இந்த முறைகேடான ஒதுக்கீட்டிற்கு பின்னணியில் இருந்த அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்’ என்று கூறுகிறது.

இதில் இரு வேறுவிதமான கருத்துக்கள் இந்திட முடியாது. 218 ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்படவேண்டும். மன்மோகன் சிங் அரசின் மீதிருக்கும் கறை நீங்கி விட்டது எனலாம். இருப்பினும் தினமணி மன்மோகன் சிங்கை விடுவதாக இல்லை.

அதே தலையங்கத்தில்,

‘ஏலமுறையில் தான் ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்று மன்மோகன் சிங் தான் வலியுறுத்தியதாக கருத்து தெரிவித்திருக்கிறார். அப்படியானால் அவரது கருத்துக்கு எதிராக நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் நடந்தன என்பதை அவர் ஏற்றுக் கொண்டார் என்பதுதான் அதன் பொருள். அப்படியானால். பிரதமராகவும், நிலக்கரித்துறையின் அமைச்சராகவும் இருந்த மன்மோகன் சிங்கின் கரங்களை கட்டிப்போட்டது யார் என்ற கேள்வி எழுகிறது’ என்று மன்மோகன் சிங் மீது குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கான பதில் 25.8.2014 அன்று வெளிவந்த உச்சநீதி மன்றத்தீர்ப்பிலேயே தெளிவாக உள்ளது.

‘அந்த காலகட்டங்களில் (2004-2009) பயங்கரமான மின்பற்றாக்குறை ஏற்பட்டிருந்ததால், தனியார் நிறுவனங்களையும் மின் உற்பத்தியில் பங்கேற்றிடச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.

எனவே அந்நேரத்தில், நிலக்கரிச் சுரங்கங்களையும் ஏலமுறைகள் மூலம் ஒதுக்கீடு செய்வதற்கு நடைமுறை சிக்கல்கள் பல இருந்திடும் என அரசு (காங்கிரஸ் அரசு) நினைத்திருக்கலாம்.

மேலும் பல மாநில அரசுகள் ஏலமுறைக்கு எதிர்ப்புகள் தெரிவித்த வண்ணம் இருந்தன. எனவே, அரசானது ஏலமுறையினைப் பின்பற்றிட வேண்டாம் என நிர்வாக ரீதியாக ஓர் முடிவை எடுத்திருப்பது என்பது, தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது என்றும் இதற்கு நீதிமன்றத்தின் தலையீடு தேவை என்றும் கூறிவிடுவதை ஏற்றிடமுடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளது.

எனவே, மன்மோகன் சிங் குற்றமற்றவர். ‘இரும்பை கரையான்கள் ஒருபோதும் அரித்திட முடியாது’.

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s